சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றிய உண்மைகளை பேசிய மாமா! முத்து கேட்ட கேள்வி.. மீனாவும் இப்படி பேசிட்டாங்க?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 21ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ரோகிணி பற்றிய உண்மைகளை மலேசிய மாமாவாக நடித்துக் கொண்டிருக்கும் பிரவுன் மணி சொல்ல அதைக் கேட்டு வித்யாவும் அதிர்ச்சியாகிறார் அதுபோல ரோகிணி நடவடிக்கையை பார்த்து முத்து மற்றும் மீனாவிற்கு சந்தேகம் வருகிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனாவிடம் இருந்து தப்பித்த மலேசியா மாமா ரோகிணி கடைக்குள் வர வர அதை பார்த்த ரோகிணி மற்றும் வித்யா அதிர்ச்சி அடைகின்றனர். மலேசியா மாமா மீனா பொண்ணு என்ன பார்த்துட்டு துரத்திட்டு வந்துடுச்சு. அதனாலதான் அந்த பொண்ணு கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி இங்கே வந்தேன் என்று சொல்ல, அதை கேட்டு ரோகிணிக்கு மீனாவை வர சொன்னது ஞாபகம் வந்ததும் பயப்படுகிறார்.

அந்த நேரத்தில் மீனாவும் ரெஸ்டாரண்ட் வந்துவிட வித்தியா மலேசியா மாமாவிடம் சென்று ஒரு இடத்தில் மறைந்து கொள்ள ரோகிணி பூவை வாங்கிக் கொண்டு மீனாவை வாசலோடு அனுப்பி வைக்கலாம் என்று முயற்சி செய்யும்போது மீனா நானே போட்டோவுக்கு பூ போட்டு விடுகிறேன் என்று உள்ளே வருகிறார். அந்த நேரத்தில் மனோஜும் கடைக்குள் வந்து விட, ரோகிணிக்கு இன்னும் பதட்டம் அதிகமாக இருக்கிறது.
அதுபோல அப்போது முத்துவும் செல்வமும் கடைக்கு வந்ததை பார்த்ததும் ரோகிணி உச்சகட்ட அதிர்ச்சி அடைய, வித்யா பிரவுன் மணியை ஒரு பிரிட்ஜுக்குள் ஒளித்து வைக்கிறார். முத்து செல்வத்துக்கு பிரிட்ஜ் பார்க்க வந்ததாக சொல்லி உள்ளே சென்று பிரிட்ஜை பார்க்க, செல்வம் ஒரு பிரிட்ஜ் தனக்கு பிடித்திருக்கிறது என்று அவர் பக்கத்தில் போகும்போது முத்து அதை திறக்க முயற்சி செய்ய வித்யா ஓடி வந்து பிரவுன் மணி உள்ளே இருப்பதால் திறக்க விடாமல் தடுக்கிறார்.

மனோஜ் அந்த பிரிட்ஜை திறந்து பார்க்கட்டும் விடு என்று சொல்ல, ரோகிணி அந்த ஃப்ரிட்ஜ் அவ வாங்கிக்கிறதா சொல்லி இருக்கா என்று சொல்ல அதற்கு முத்து செல்வத்துக்கு புடிச்சி இருக்குன்னு சொல்லி இருக்கான். இப்போ 3000 பணம் கொடுக்க போறான் மீதி இன்ஸ்டால்மெண்டல கட்டுவான் என்று சொல்ல, மனோஜ் இன்ஸ்டால்மென்ட் எல்லாம் தர முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு ரோகிணி வித்யா மொத்த பணத்தையும் கட்டிடுவார் என்று சொல்லி மனோஜ் மனசை மாற்ற, மனோஜ் வித்யாவுக்கு தான் என்று சொன்னதும் முத்து கோபப்பட்டு செல்வம் மற்றும் மீனாவை கூப்பிட்டுக்கொண்டு வெளியே போகிறார். அதற்கு பிறகு பிரவுன் மணி வித்யா மற்றும் ரோகிணி இடம், நீங்க மணிரத்தினம் படத்தில் எனக்கு வாய்ப்பு வாங்கி தர போவது கிடையாது.

ரோகிணி பாப்பா முதல்முறையா என்னை கிராமத்துக்கு வர சொல்லி இருக்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதுக்கு அப்புறம் திரும்பவும் வீட்டுக்கு வர சொல்லி இருக்கும்போது முழுசா தெரிஞ்சு போச்சு, உங்க வீட்டு பிரச்சினைக்கு என்ன நடிக்க வைத்து பயன்படுத்தி இருக்கீங்க. என்னால உங்க வாழ்க்கை நல்லா இருந்தா எனக்கு சந்தோஷம்தான். இந்த விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் என்று பிரவுன் பண்ணி கிளம்பி போகிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த மீனா முத்துவிடம் மலேசியா மாமாவை பார்த்ததும் அதைப் பற்றி ரோகினி இடம் பேசும்போது முகம் மாறியதை பற்றி சொல்ல, இந்த பார்லர் அம்மா ஏதோ விளங்கமான வேலை பண்ணிக்கிட்டு அப்பா மலேசியாவில் இருக்காருன்னு கதை விட்டுட்டு இருக்குனு எனக்கு ஆரம்பத்தில் இருந்து அந்த மலேசியா மாமா மேல ஒரு சந்தேகம் இருக்கு என்று பேச இதை ஒட்டு கேட்ட ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications