Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: ரோகிணியை வெளுத்த மீனா.. அண்ணாமலை இப்பவாவது இந்த முடிவு எடுத்தாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 25ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மீனாவிடம் ரோகிணி எதற்காக மாமாவுக்கு பணம் தரேன்னு சொன்னீங்க என்று கேட்ட கேள்விக்கு மீனா சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கிச்சனில் ஸ்ருதியும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த ரோகிணி மீனாவிடம் நீங்க எதுக்கு பணம் கொடுக்கிறேனு சொன்னீங்க? மாமா கிட்ட நல்ல பெயர் எடுக்கவா என்று கேட்க அதற்கு மீனா எனக்கு அதற்கு எந்த அவசியமும் இல்லை ஏற்கனவே எனக்கு நல்ல பெயர் இருக்கு. நீங்க எதுக்கு அத்தைக்கு பணம் கொடுக்குறீங்க? நல்ல பேரு எடுக்கவா என்று கேள்வி கேட்கிறார்.

Television Kollywood Siragadikka aasai serial

அதோடு மனோஜ் பிசினஸ் பண்றார் அதனால நாங்க சொன்ன பணத்தை எங்களால் கொடுக்க முடியும். ஆனா உங்களால எப்படி கொடுக்க முடியும்? அதுபோல முத்துவால் தினமும் வண்டி ஓட்ட முடியுமா? அவரால எப்படி பணம் கொடுக்க முடியும் என்று கேட்க கோபமான மீனா என் புருஷன் தான் இதுவரைக்கும் இந்த வீட்டுக்கு பணம் கொடுத்துட்டு இருந்தாரு. போன மாசம் தான் உங்க வீட்டுக்காரர் வேலைக்கு போய் இருக்காரு.

ஆனா இப்ப வரைக்கும் எந்த பணமும் வீட்டுக்கு கொடுக்கல. அதை மறந்துடாதீங்க என்று பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே இருக்க ரோகிணி ஒரு கட்டத்தில் என்ன பேச என்று தெரியாமல் கோபப்படும்போது ஸ்ருதி எதற்காக இப்படி கோபப்படுறீங்க ரோகிணி நீங்க வேணும்னா முத்து போல உங்க ஹஸ்பண்டையும் பத்தாயிரம் கொடுக்க சொல்லுங்க, அதற்காக எதுக்கு மீனாவிடம் தேவையில்லாம பேசுறீங்க என்று வெளியே கூட்டிட்டு போகிறார்.

அடுத்தது அண்ணாமலை இன்ஜினியரை வர வைத்து மாடியில் ரூம் கட்ட அளவு எடுத்து அஞ்சு லட்சம் ஆகும் என்று சொல்லிவிட்டு போகிறார். மொத்த குடும்பமும் மாடிக்கு வந்து எதற்காக ரூம் கட்ட போறீங்க என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அதோடு பணத்துக்கு என்ன பண்ணப் போறீங்க என்று எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்க அண்ணாமலை வீட்டு பத்திரத்தை அடகு வைத்திருக்கும் இடத்தில் மேலும் கொஞ்சம் பணம் வாங்கலாம் என்று சொல்ல, விஜயா அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

நீங்க யாருக்கு ரூல் கட்ட போறீங்கன்னு தெரியும். முத்துக்கும் மீனாவுக்கும் தானே? இவங்களுக்கு எதுக்கு ரூம்கட்டி கொடுக்கணும் இவ குடிசையில் இருந்து வந்தவ தானே இவளுக்கு குடிசையே போதும் என்று சொல்ல, மீனா நான் மாளிகையில் இருந்து வரல தான். மாளிகை வாழனும்னு ஆசையும் படல எனக்கு என் புருஷன் கூட குடிசையில் இருந்தாலும் சந்தோஷம்தான் என்று பதிலடி கொடுக்கிறார்.

விஜயா என்னுடைய வீட்டு பத்திரத்தை யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்கிறார். அதோடு மீனாவிடம் இவரு வண்டி ஓட்ட தெரியாம வண்டி ஓட்டி உங்க அப்பாவை கொன்னதால தான் நீ எங்க வீட்டுக்கு வந்த என்று சொல்ல அண்ணாமலை இப்ப நீ நிறுத்துறியா என்று எல்லார் முன்னாடியும் உன்னை திட்டக்கூடாது என்று பார்க்கிறேன்.‌ ஆனா உன்னுடைய பேச்சு நடவடிக்கை ரொம்ப கேவலமா இருக்கு என்று திட்டுகிறார்.

அதற்கு விஜயா அண்ணாமலை திட்டுவதற்கு காரணம் மீனாதான் என்று மீனாவை சொல்ல மீனா அதற்கு இப்ப எதுக்கு நீங்க எங்க அப்பாவை பத்தி பேசினீங்க எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சு எங்களை நல்லா பாத்துக்கிட்டாரு யாரையும் ஏமாத்தி பணத்தை தூக்கிட்டு ஓடல என பதிலடி கொடுக்கிறார்.

இதைக் கேட்டதும் மனோஜ் இப்ப எதற்கு உங்க பிரச்சனையில் என்னை இழுக்கிறீங்க என்று சொல்ல, முத்து உண்மைய சொன்னா உனக்கு ஏன்டா கோபம் வருது என்று சொல்ல மீனா நான் யாரைப் பற்றியும் சொல்லல எங்க அப்பாவை பற்றி மட்டும் தான் பேசிகிட்டு இருக்கிறேன் என்று சொல்கிறார்.

பிறகு ஸ்ருதி ரவியிடம் உங்க அம்மா எதற்கு எப்போ பார்த்தாலும் மீனாவை திட்டிக்கிட்டே இருக்கிறாங்க. இப்படி என்னை மட்டும் திட்டுனாங்கன்னா அவங்க வாயில ஸ்டேப்ளர் போட்டு விட்டுருவேன் என்று கோபப்படுகிறார். அடுத்ததாக ஸ்ருதி மூலம் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை சுதா தெரிந்து கொள்கிறார்.

பிறகு அண்ணாமலை வீட்டில் நடக்கும் விஷயங்களை சொல்லி கணவரிடம் இருந்து அஞ்சு லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு வந்து குடும்பத்தை பிரிக்க பிளான் போட்டு வருகிறார். வீட்டுக்கு வந்த சுதா இந்த வீடு கட்டதற்காக என் வீட்டுக்காரர் தானே உங்களுக்கு லோன் ஏற்பாடு பண்ணினாரு என்று பழைய பிரச்சனையை தொடங்குகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+