சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றி ரவி கண்டுபிடித்த ரகசியம்.. அதிர்ச்சி கொடுத்த முத்து! விஜயா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 6-ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ரோகிணி க்ரிஷ் விஷயத்தில் செய்த செயலை ரவி நேரில் பார்த்து விட அதனால் வீட்டில் பிரச்சனை வெடிக்கிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா க்ரிஷிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நாளைக்கு உன்னுடைய கண் கட்டை அவுத்து விடுவாங்க. அதுக்கு பிறகு நீ எப்பவும் போல எல்லாரையும் பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அம்மாவையும் பார்க்கலாமா? என்று க்ரிஷ் கேட்டதும் ரோகிணியும் அவருடைய அம்மாவும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அப்போது மீனா கிருஷ்க்கு அவங்க அம்மா வந்துடுச்சு போல என்று சொல்லி வருத்தப்படுகிறார். அதற்கு ரோகிணியின் அம்மா, அவன் அவங்க அம்மா போட்டோவை பாக்கணும்னு சொல்லு தான் என்று சமாளிக்கிறார். ஆனாலும் விடாத மீனா உங்க பொண்ணை வர சொல்லுங்க. அவங்களுக்கு போன் பண்ணி குடுங்க நான் பேசுறேன் என்று சொல்ல, அவ இப்போ வேலையில் இருப்பா, பேச முடியாது என்று ரோகிணியின் அம்மா சமாளிக்கிறார்.
ஆனாலும் விடாத மீனா போன் பண்ணி குடுங்க நான் பேசறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அதை பார்த்து கடுப்பான ரோகிணி டேபிளில் இருந்த பால் பாத்திரத்தை எடுத்து கீழே தூக்கி போட அதை ரவி பார்த்து விடுகிறார். பிறகு ரவி ஸ்ருதியிடம் ரோகிணி அண்ணிக்கு அந்த குட்டி பையன் வீட்டில் இருக்கிறது பிடிக்கல போல. மீனா அண்ணி பேசிட்டு இருக்கும்போது பால் டம்ளரை வேணும்னே தூக்கி போட்டாங்க என்று சொல்ல, அதை பற்றி நான் கேட்க போறேன் என்று ஸ்ருதி ரோகிணி இடம் சென்று பேசுகிறார்.
உங்களுக்கு க்ரிஷ் இங்கே இருக்கிறது பிடிக்கலையா? சொல்லுங்க நான் வேணா அவங்க கிட்ட பேசுறேன் என்று சொல்ல, ரோகிணி அதெல்லாம் இல்ல விடுங்க நான் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு ஸ்ருதி, நீங்க பால் டம்ளரை கீழே தூக்கிப் போட்டதை பார்த்ததாக ரவி சொல்லுறான் என்று சொல்ல, ரோகிணி அதிர்ச்சியாகி இனிமே உஷாரா இருக்கணும் என்று முடிவெடுக்கிறார்.
அந்த நேரத்தில் அங்கு வரும் முத்து, பல குரல் என்ன சொல்லிட்டு இருந்துச்சு? ஏதோ பேசிட்டு இருந்தீங்க? என்று கேட்க அதற்கு ரோகிணி நாங்க பேசுனதை ஒட்டு கேட்டீங்களா? என்று கேட்க, நீங்க ஹால்ல நின்னு பேசினா எல்லாரும் கேட்க தான் செய்வாங்க என்று முத்து சொல்கிறார். நாங்க என்ன வேணாலும் பேசுவோம் உனக்கு என்ன என்று ரோகிணி கேக்க,
இவங்க ரெண்டு பேரும் வந்ததிலிருந்து உங்க நடவடிக்கை சரியில்ல... என்னமோ ஒன்னு இருக்கு.. அதை நான் கண்டுபிடிச்சிட்டேன் என்று சொல்ல, இவன் உண்மையை கண்டுபிடிச்சிட்டானோ? என்று ரோகிணியும் குழப்பத்தில் இருக்கிறார். பிறகு க்ரிஷ் விஜயாவின் சேரில் உட்கார்ந்து விளையாடி கொண்டு இருக்கிறான். அந்த நேரத்தில் கோயிலுக்கு போயிட்டு அண்ணாமலையும் விஜயாவும் வந்ததும் விஜயாவை வீட்டிற்கு போக சொல்லிவிட்டு அண்ணாமலை தன்னுடைய நண்பனை பார்க்க போறேன் என்று அதே ஆட்டோவில் போய்விடுகிறார்.

பிறகு மேலே வந்த விஜயா தன்னுடைய சேரில் கிரிஷ் இருப்பதை பார்த்து கோபப்பட்டு அவனை கீழே இறக்கி விடுகிறார். அம்மாகிட்ட வளர்ந்து இருந்தா எங்க எப்படி நடக்கணும்னு தெரியும். பாட்டி கிட்ட வளர்ந்தவங்க எல்லாம் இப்படித்தான் இருக்கும்.. வருங்காலத்தில் தறுதலையா தான் ஆகுது என்று திட்டிக் கொண்டிருக்க, அப்போது அங்கு வரும் மீனாவும், முத்துவும் எதுக்கு இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க என்று திட்டுகின்றனர்.
அதோடு முத்து அவங்க என்னை பற்றி தான் பேசுறாங்க. நான் பாட்டி கிட்ட தான் வளர்ந்தேன் என்று சொல்ல, ரோகிணியின் அம்மா எங்களால பிரச்சனை வேண்டாம், நாங்க இப்பவே ஹாஸ்பிடல் போயிடுறோம் என்று சொல்ல, முத்து அவங்க சொல்றாங்கன்னு நீங்க எதுக்கு போகணும் வாங்க என்று உள்ளே அழைத்து சென்று விடுகிறார். பிறகு விஜயா ரோகிணியிடம் நாளைக்கு இவங்களை எப்படியாவது வெளியே அனுப்பிவிடு என்று கண்டிஷன் போட்டு விட்டு ரூமுக்கு போகிறார்.
அடுத்ததாக மீனா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அங்கு இருக்கும் முத்து பார்லர் அம்மா க்ரிஷ் வந்ததுல இருந்து சரியில்ல. எனக்கென்னவோ அதுக்கு குழந்தை பெத்துக்கணும்னு ஆசை வந்துருச்சு போலனு தோணுது என்று சொல்கிறார். ஒருமுறை வாந்தி எடுத்துச்சு அப்போ எங்க அம்மா அதை கவனித்ததில் இருந்து அதுக்கு இந்த ஆசை வந்திருக்கு.. கூடிய சீக்கிரம் நம்ம வீட்ல ஒரு பாப்பா வரும் போல என்று முத்து பேசிக்கொண்டு இருப்பதை ரோகிணி ஒட்டு கேட்டுக்கொண்டு பின்னாடி திரும்ப அங்கு மனோஜ் ஒட்டு கேட்டு கொண்டு நிற்கிறார்.

உனக்குள்ள இப்படி ஒரு ஆசை இருக்குதுன்னு எனக்கு தெரியாம போயிடுச்சு, நீ ஓகே சொன்னா ஒரு குழந்தை பெத்துக்க ரெடியாகல்லாம் என்று மனோஜ் ரொமான்டிக்காக பேச ரோகிணி முதலில் போய் கடையை டெவலப் பண்ண வேலையை பாரு என்று திட்டி அனுப்புகிறார். அதற்கு மனோஜ் இவள புரிஞ்சிக்கவே முடியல என்று புலம்பி கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications