சிறகடிக்க ஆசை: க்ரிஷ் பிரச்சனைக்கு ஒரு வழியா முடிவு வந்தாச்சு! விஜயாவை அதட்டிய ரோகிணி.. பாவம் மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ஜூன் 7-ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் க்ரிஷ் விஷயத்தில் ரோகிணி மாட்டுவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வழக்கம்போல இன்றைய எபிசோடிலும் ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது. ஆனாலும் விஜயாவிற்கு அவமானமும் கிடைத்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் க்ரிஷை கூட்டிக்கொண்டு ரோகிணி அம்மா ஹாஸ்பிடலுக்கு கிளம்பி கொண்டிருக்கும் இப்போது ரோகிணி தன்னுடைய மகனுக்கு முத்தம் கொடுத்து அனுப்பி வைக்கும்போது க்ரிஷ் நீ ஹாஸ்பிடலுக்கு வருவதனமா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதற்கு ஆமாம் என்று சொல்லிவிட்டு வெளியே ரோகினி வரும்போது விஜயா அவங்க கிளம்பிட்டாங்களா? என்று கேட்க கிளம்பிட்டே இருக்காங்க என்று ரோகிணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரோகிணி அம்மா வெளியே வந்து நாங்க கிளம்புறோம் என்று சொல்ல, திரும்பவும் இங்கே வந்துடாதீங்க இது மடம் கிடையாது என்று என்று விஜயா திட்டிக்கொண்டே முத்து மற்றும் மீனாவிடம் திரும்பவும் ஹாஸ்பிடல்ல இருந்து யாரையும் எங்கே கூட்டிட்டு வந்துறாதீங்க என்று சொல்கிறார்.
அதோடு எப்போ வந்தாலும் இந்த பையனோட தான் இவங்க வாராங்க. இவங்க பின்னாடி ஏதோ கதை இருக்கு என்று வழக்கம்போல க்ரிஷ் உடைய பிறப்பைப் பற்றி விஜயா தப்பா பேசினதும் கோபமான ரோகிணி ஆன்ட்டி என்று அதட்டுகிறார். ஒரு சின்ன பையன் என்னை எதுக்காக இப்படி எல்லாம் பேசுறீங்க என்று கேள்வி கேட்க, அதற்கு விஜயா உனக்கு தெரியாது மா என்று சொல்ல அதற்கு முத்து இவங்க வந்ததால இந்த வீடு இடிஞ்சா போச்சு என்று கோபப்படுகிறார்.

அடுத்ததாக மனோஜ் இவர்கள் கிளம்பி போவதை பார்த்து அப்பாடா நமக்கு ரூம் கிடைச்சாச்சு என்று சந்தோஷப்பட ரோகிணி மனோஜை திட்டுகிறார். பிறகு மீனா முத்து க்ரிஷை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு வர அங்கு டாக்டர் கட்டை பிரிக்கும் போது கிரிஷ் ரோகிணி வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ரோகிணி வந்ததும் அம்மாவை பார்த்து சந்தோஷப்படுகிறார்.
பிறகு ரோகிணியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வெளியே போயிருந்த முத்துவும் மீனாவும் ஹாஸ்பிடல் வர நீங்க என்னங்க இங்க பண்ணுறீங்க என்று மீனா ரோகிணி இடம் கேட்க இவங்க பேக்கை மறந்து வச்சிட்டு வந்துட்டாங்க. அதை கொடுத்துட்டு போலாம்னு வந்தேன். அப்படியே மேனேஜரை பார்க்க வேண்டிய வேலையும் இருந்தது என்று சமாளிக்கிறார்.
பிறகு முத்துவும் மீனாவும் வெளியே போனதும் ரோகிணியிடம் க்ரிஷ் அம்மா நீ என் பிறந்தநாளுக்கு ஊருக்கு வரணும் என்று சொல்ல ரோகிணியும் சரி என்று சொல்கிறார். அதற்கு மீனா ஆன்ட்டியையும் கூப்பிடலாமா? என்று க்ரிஷ் கேட்க வேண்டாம் என்று ரோகினி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அங்கே மீனா வந்து எங்க கூப்பிடலாமா ன்னு கேக்குறீங்க என்று கேட்க வழக்கம் போல ரோகிணி அம்மா சமாளிக்கிறார்.

பிறகு ரோகிணி இடம் நீங்களும் க்ரிஷூம் ஏதோ பேசிட்டு இருந்தீங்க, என்ன விஷயம்? என்று மீனா கேட்க அதற்கு ரோகிணியின் அம்மா அவங்க க்ரிஷை நல்லா பாத்துட்டாங்களா அதான் ஒட்டிக்கிட்டான் என்று சொல்கிறார். அதற்கு ரெண்டு நாளா சாப்பாடு ஊட்டுனதுக்கு அவன் இவ்வளவு பாசம் வச்சிருக்கான் என்று முத்து சொல்ல, குழந்தைங்கன்னா இப்படித்தான் இருப்பாங்க என்று மீனாவும் சொல்கிறார். ஆனால் இதெல்லாம் திட்டம் போட்டு தான் பண்ணுறான்னு அவனுக்கு தெரியாதே என்று முத்து சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications