சிறகடிக்க ஆசை: காய்ச்சலில் முத்துவை தேடும் கிரிஷ்.. அண்ணாமலை பிடித்த பாயிண்ட்! அதிர்ச்சி கொடுத்த விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial) யாரும் எதிர்பார்க்காத கதை தான் வந்திருக்கிறது. ஏற்கனவே ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிந்ததும் அவரை வீட்டை விட்டு விஜயா துரத்தி இருக்கிறார். இந்த நிலையில் ரோகிணியின் மகன் மகன் கிரிஷ் காய்ச்சலில் முத்து மீனாவை தேடிக் கொண்டிருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியல் மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், இரண்டு வருடங்களுக்கு மேலாக ரோகிணி பற்றிய உண்மை எப்போது குடும்பத்திற்கு தெரியவரும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. ஒரு வழியாக கடந்த மாதத்தில் ரோகிணி பற்றிய உண்மைகள் எல்லாம் மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்தது. ஆனாலும் அதில் அதிகமாக அடிவாங்கியது மீனா தான்.

கிரிஷ்க்கு காய்ச்சல்
ரோகிணிக்கு பாவப்பட்டு உண்மையை மறைத்து கடைசியில் அது மீனாவிற்கே வினையாக மாறியது. ஒரு வழியாக இப்போது முத்து மீனாவை புரிந்து கொண்டார். இது பழைய கதையாக இருந்தாலும் இப்போது ரோகிணியின் மகன் கிரிஷ்க்கு காய்ச்சலாக இருக்கிறது. ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போவதற்கு கேப் கிடைக்காததால் சிந்தாமணி டாக்டரை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்திருந்தார்.
அப்போது டாக்டர் மருந்து கொடுத்து விட்டு போயிருந்தனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் கிரிஷ்க்கு கண் முழிக்க முடியாத அளவிற்கு காய்ச்சல் இருக்கிறது. அப்போது முத்து அங்கிள், மீனா ஆன்ட்டி வர மாட்டாங்களா? என்று கிரிஷ் சொல்லிக் கொண்டிருக்க, அதை பார்த்து ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
டாக்டர் சொன்ன விஷயம்
உடனே டாக்டருக்கு போன் செய்து இது பற்றி சொல்ல அதற்கு அவர் நான் கொடுத்த டேப்லெட் மற்றும் டானிக் கொடுத்து பாருங்க அதில் சரியாகவில்லை என்றால் நீங்க அந்த முத்து மீனாவை தான் கூட்டிட்டு வரணும் என்று சொல்லிவிடுகிறார். இதனால் ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். அதேபோல மறுபக்கத்தில் முத்துவின் நண்பன் செல்வம் காரில் அருண் அம்மா ஆக்சிடென்ட் ஆனதில் இறந்து போய்விட்டார், இதற்காக அருண் எனக்கு 25 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும் என்று சொல்லி இருந்தார்.
வீட்டு பத்திரம் பிரச்சனை
கடைசியாக இன்று பேச்சு வார்த்தை நடத்தி 5 லட்சம் தருகிறோம் என்று சொல்லி இருக்கின்றனர். இது பற்றி முத்து அண்ணாமலையிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது விஜயா இவன் நண்பனுக்கு உதவனும்னு சொல்லி நம்ம வீட்டுல பணம் எதுவும் கேட்கக் கூடாது, ஏற்கனவே நம்ம வீட்டிலேயே பல பிரச்சனை இருக்கு என்று முன்கூட்டியே சொல்லிக் கொண்டிருக்கிறார். காரணம் வீட்டு பத்திரத்தை கேட்டு முத்துவோ அல்லது அண்ணாமலையோ வந்து விடக்கூடாது என்பதற்காக விஜயா முன்பே சொல்கிறார்.
விஜயாவின் மாஸ்டர் பிளான்
ஏற்கனவே விஜயா மனோஜிக்காக 7 லட்சம் ரூபாய்க்கு சிந்தாமணி சொன்ன பைனான்சியரிடம் வீட்டு பத்திரத்தை கொடுத்து வைத்திருக்கிறார். இந்த உண்மை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக விஜயா அவசரப்பட்டு முத்துவிற்கு கண்டிஷன் போட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே அருண் சீதாவை நல்லபடியாக பார்த்துக்கொள்கிறானா என்று அண்ணாமலை கேட்க அதையே பிடித்துக் கொண்டு முத்து மீனாவிடம் துருவி துருவி விசாரித்துக் கொண்டிருக்கிறார்.
இன்றைய எபிசோடில் மீனா அருண் சீதாவை அடித்த விஷயத்தை பற்றி சொல்லவில்லை. ஆனால் சீதாவை அடித்த விஷயம் முத்துவிற்கு தெரிய வரும்போது தான் பெரிய சம்பவமே இருக்கிறது.












Click it and Unblock the Notifications