Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 24ஆம் தேதிக்கான எபிசோடில், முத்துவும் மீனாவும் சீதாவின் தாலியை கண்டுபிடிப்பதற்காகவும் பெண் போலி சாமியாரை பற்றிய உண்மைகளை வெளியே கொண்டு வருவதற்காகவும் மாறு வேஷம் போட்டிருந்தனர். ஆனால் அது கடைசியில் அவர்களுக்கே ஆப்பு வைத்துவிட்டது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா கோவிலில் சாமி கும்பிடும் போது, அவருடைய தாலி செயின் காணாமல் போகிறது. அப்போது அங்கு இருந்த மீனாவுக்கு, தன்னை இடித்துவிட்டு ஓடிய பெண் மீது சந்தேகம் வருகிறது. உடனே அந்த பெண்ணை மீனா துரத்திச் சென்று பிடிக்கிறார். அந்த பெண்ணின் முக்காடை விலக்கி பார்த்தபோது, அது வீட்டிற்கு வந்து பூஜை செய்த போலி சாமியார் என்று தெரிகிறது. அந்த பெண், மீனாவை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விடுகிறார்.

முத்துக்கு கிடைத்த ஆதாரம்

இதையடுத்து, முத்துவும் மீனாவும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடிவு செய்து தேட ஆரம்பிக்கிறார்கள். அப்போது, அந்த பெண் ஓடிய இடத்தில் ஒரு பர்ஸ் கிடைக்கிறது. அதை எடுத்துப் பார்த்தபோது, அதில் ஒரு அட்ரஸ் இருக்கிறது. அந்த அட்ரஸை பற்றி முத்து தனது நண்பரிடம் விசாரிக்கிறார். அதற்கு அவர், அது திருட்டு நகைகளை விற்கும் இடம் என்று சொல்கிறார். மேலும் அங்கு சாதாரணமாக போனால் ஆபத்து இருக்கும் என்றும் எச்சரிக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

இதையடுத்து இன்றைய எபிசோடில் முத்து ஒரு திட்டம் போடுகிறார். நாமும் திருட்டு நகையை விற்க வந்தவர்களாகவே உள்ளே போவோம் என்று முடிவு செய்கிறார். அதற்காக அவர் தனது நண்பனின் வீட்டுக்குள் சென்று லுங்கி கட்டி, வேஷம் மாற்றிக் கொள்கிறார். மீனாவும் சேலையை மாற்றிக் கொண்டு மாறு வேஷத்தில் வருகிறார்.

வீட்டுக்கு வந்த சீதா

இதற்கிடையே மீனாவின் அம்மா சீதாவின் தாலி காணாமல் போனால் சாப்பிடாமல் இருக்கிறார் அப்போது சத்யா அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அருண் மாமா அக்காவை எதுவும் பண்ண மாட்டாரு நீ பயப்படாத என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சீதா அழுது கொண்டே அம்மா வீட்டுக்கு வருகின்றார். என்ன நடந்தது என்று கேட்க, நகை இல்லாமல் நீ வீட்டுக்கு வரக்கூடாதுன்னு அனுப்பிட்டாரு என்று சீதா சொன்னதும் இந்த விஷயத்தை சத்யா மீனாவுக்கு போன் பண்ணி சொல்கிறார்.

மீனா எடுத்த முடிவு

அதற்கு மீனா நாங்க எப்படியாவது அந்த நகையை கண்டுபிடித்து கொண்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு நகையை உருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள். அங்கு சென்றதும், "நாங்களும் நகையை திருடி கொண்டு வந்திருக்கோம், அதை விற்க வந்திருக்கோம்" என்று சொல்கிறார்கள். அவர்கள் புதுசாக இருப்பதால், அங்கிருந்தவர்கள் சந்தேகப்படுகிறார்கள்.

"உங்களை இங்க பார்த்ததே இல்ல, எப்படி வந்தீங்க?" என்று கேட்கிறார்கள். அதற்கு முத்து, "ஜோசியம் பார்த்து ஏமாற்றும் அந்த அம்மா தான் எங்களை இங்க அனுப்பினாங்க" என்று சொல்கிறார். அந்த நேரத்தில் திடீரென போலீசார் அங்கு வருகிறார்கள். அங்கிருந்த திருட்டு கும்பலைச் சேர்ந்த அனைவரையும் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்கிறார்கள்.

Siragadikka Aasai serial Vijay TV

போலீஸ் ஸ்டேஷன் போகும் முத்துமீனா

முத்துவும் மீனாவும் வேஷம் போட்டிருப்பதால், அவர்களையும் திருடர்களாகவே போலீசார் நினைத்து கைது செய்கிறார்கள். அப்போது அந்த கும்பலைச் சேர்ந்த ஒரு பெண், "நீங்க கவலைப்படாதீங்க, நான் இன்ஸ்பெக்டரிடம் பேசிட்டு உங்களை விடுவிக்கிறேன்" என்று முத்துவிடம் சொல்கிறார். ஆனால் முத்துவும் மீனாவும் எவ்வளவு சொல்லியும் "நாங்கள் திருடர்கள் இல்லை" என்று போலீசார் நம்பவில்லை.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு முத்து போலீசிடம், "என் அப்பாவுக்கு ஒரு போன் பண்ணி கேளுங்க என்று சீதா நகை காணாமல் போன விஷயத்தையும் அதை தேடுவதற்காக வந்த விஷயத்தையும் முத்து சொல்கிறார், இன்ஸ்பெக்டர் நம்பிக்கையே இல்லாமல் அண்ணாமலைக்கு போன் செய்து நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லுகிறார்.

அண்ணாமலை கொடுத்த ஐடியா

அதை கேட்ட அண்ணாமலை உடனே ரவி மற்றும் ஸ்ருதிக்கு போன் செய்து, "நீங்க உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு போங்க, நாங்க பின்னாடி வர்றோம்" என்று சொல்கிறார்.. அதைத்தொடர்ந்து ரவி மற்றும் ஸ்ருதி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, முத்துவையும் மீனாவையும் பார்க்கிறார்கள். அவர்கள் வேஷம் போட்டிருப்பதால், முதலில் அடையாளமே தெரியாமல் இருக்கிறது. பின்னர் அவர்கள் போலீசிடம் பேசிக் கொண்டு நடந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+