சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial March 31, 2026) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 31ஆம் தேதிக்கான எபிசோடில், லட்சம் கொடுக்க முயற்சி செய்ததற்காக விஜயா புது பிரச்சனை இருக்கிறார். அதே நேரத்தில் மனோஜ் சொன்ன விஷயத்தை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலின் (Siragadikka Aasai serial today episode) இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், விஜயா, மகளிர் அமைப்பு தலைவியை சந்தித்து விஷயத்தை சமாளிக்க பணம் கொடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் அந்த தலைவி அதை ரகசியமாக வீடியோ எடுத்து விடுகிறார். உடனே "என்னை பணத்தால் வாங்க முடியாது... நீங்க லஞ்சம் கொடுக்க வந்தது வீடியோவாக இருக்கு... இது மட்டும் போதும், கோர்ட்டில் பார்த்துக்கலாம்" என்று மிரட்டி கிளம்புகிறார். இதனால் விஜயா பதறி, ஸ்ருதி மற்றும் ரவியிடம் என்ன செய்வது என்று கேட்கிறார். அவர்கள் "இதெல்லாம் முன்பே தெரிஞ்சிருந்தா நாங்களே தடுத்திருப்போம்" என்று சொல்கிறார்கள்.
திட்டிய அண்ணாமலை
பிறகு வீட்டில் ரவி நடந்ததை சொல்ல, அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். அதன்பின் முத்து, மீனா இருவரையும் அந்த மகளிர் அமைப்பு தலைவியிடம் சென்று பேச சொல்லுகிறார். அப்போது மீனா, "நாம போறத விட இந்த விஷயத்துல சம்பந்தப்பட்ட மனோஜ் நேர்ல போய் பேசினா தான் நம்புவாங்க" என்று சொல்லுகிறார்.

மனோஜ் திமிர் பேச்சு
இதையடுத்து முத்து, மீனா இருவரும் மனோஜை பார்க்க ஷோரூமுக்கு செல்கிறார்கள். ஆனால் மனோஜ் "நான் யாரையும் பார்க்க வரமாட்டேன்" என்று திமிராக சொல்லி விடுகிறார். பின்னர் முத்து, மீனா இருவரும் மட்டும் அந்த தலைவியின் ஆபிஸுக்கு செல்கிறார்கள். அங்கு மற்றொருவரை அந்த தலைவி கடுமையாக திட்டுவதை பார்க்கிறார்கள். இதை பார்த்து "நாம போனாலும் இதே மாதிரி தான் ஆகும்" என்று நினைத்து பேசாமல் திரும்பி வருகிறார்கள்.
பயந்த மனோஜ்
வீட்டுக்கு வந்த பிறகு ரவி, முத்து இருவரும் மனோஜிடம் மீண்டும் பேசுகிறார்கள். ஆனால் அவர் இன்னும் வர மறுக்கிறார். அதற்குள் மனோஜுக்காக பார்த்த பெண் வீட்டுக்கு வந்து, அந்த மகளிர் அமைப்பு தலைவி பற்றி பேசுகிறார். அவர் பெண்களை கூட்டி போராட்டம் நடத்துவார், மேலும் ரோகிணியை அடித்ததற்காக மனோஜ், விஜயா இருவரையும் கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்.இதனால் மனோஜ் பயப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications