சிறகடிக்க ஆசை: ஏசியை வைத்து ஏழரையை கூட்டிய முத்து.. அந்தரங்கத்தை பேசிய விஜயா.. வெடித்தது பூகம்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 27 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஏசி வாங்கி கொடுத்து ஸ்ருதியின் அம்மா அண்ணாமலை வீட்டிற்குள் பிரச்சனை ஏற்படுத்த பார்த்த நிலையில் அதை வேண்டாம் என்று முத்து திருப்பி அனுப்பியதால் மனோஜ்க்கு பெரிய பிரச்சனை வந்திருக்கிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ளாமல் இருக்க விஜயா அவரை கொஞ்சி கொண்டு இருப்பதை பார்த்த முத்து வெட்டி பையன் எழுந்து என்ன பண்ண போறான்? என்று கேட்க, அதற்கு ரவி அவனுக்கு கடை இருக்குடா என்று சொல்ல அதற்குப் பிறகு முத்துவுக்கு கடை இருக்குது நினைவுக்கு வருகிறது.

உடனே முத்து ஆமால்ல அவன் தொழிலதிபர் ஆகிட்டானே வேலைக்கு போகணும் இவனை இப்படி எழுப்பக்கூடாது என்று தண்ணீரை கொண்டு போய் முகத்தில் ஊற்ற ஐயோ அம்மா நான் தண்ணில விழுந்துட்டேன் என்று அலறி எழும்பி கொள்கிறார். அடுத்ததாக எல்லோரும் முத்துவை திட்ட அதற்கு முத்து அப்பாவுக்கு தரவேண்டிய 27 லட்சத்தை சம்பாதித்து கொடுத்துட்டு அவன் எவ்வளவு நேரம் வேணும்னா தூங்கட்டும் என்று சொல்லிவிட்டு போகிறார்.
அதை தொடர்ந்து மீனா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கே வரும் விஜயா மனோஜ்க்கு சிக்கன் குழம்பு வச்சு, ஆட்டு எலும்பா வாங்கி தொக்கா சமைத்திரு, ரோகிணிக்கு வெஜ் பிரியாணி, பன்னீர் பண்ணிடு என்று லிஸ்ட் போட்டு கொண்டே இருக்க மீனா எல்லாத்துக்கும் சேர்த்து என்ன சமைக்கணுமோ அதை சொல்லுங்க. அவங்களுக்கு தனியா இவங்களுக்கு தனியா என்னால சமைச்சு கொடுக்க முடியாது.
அதுவும் உங்க மூத்த மகனுக்கு நான் எதுவும் தனியா சமைச்சு தரமாட்டேன் என்று சொல்ல, அதற்கு விஜயா ஏன் நைட் ரூம் கிடைக்கவில்லை? என்று இப்படி பண்ணுறியா? அதனால தானே உன் புருஷன் மனோஜ் மூஞ்சில தண்ணி ஊத்தி எழுப்புனான்... ஒரு நாள் கூட ரூம் இல்லாமல் இருக்க முடியாதா? உனக்கு அவன் கூட படுக்காம தூக்கம் வராதா என்று கேவலப்படுத்தி பேச நீங்க என்ன நாக்கில் விஷத்தை வச்சுட்டு பேசுறீங்க என்று மீனா கண் கலங்குகிறார்.
அதோடு நீங்க என்ன வேணா பேசிக்கோங்க. உங்க மூத்த மகனுக்கு தனியா சமைக்க முடியாது. வேணும்னா நீங்களே சமைச்சு கொடுங்க என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விடுகிறார். இதை அடுத்து சுதா அண்ணாமலை வீட்டுக்கு மனோஜ் கடையில் வாங்கிய ஏசியை அனுப்பி வைக்க, வீட்டு வாசலில் கார் துடைத்துக் கொண்டிருந்த முத்து சுதாவுக்கு போன் போட்டு உங்க பொண்ணுக்கு செய்றதா இருந்தா துணி ஆகவோ நகையாகவோ அவளுக்கு தனியா செய்யுங்க.
ஆனா எங்க வீட்டுக்கு எது வேணுமோ அதை நாங்களே வாங்கிக்க தெரியும் என்று பதிலடி கொடுக்கிறார். அதனால் ஸ்ருதி அம்மா சுதா அதை பற்றி பேசிக் கொண்டிருக்க, அப்போது வாசுதேவன் இந்த ஏசியை நீ மனோஜ் கடையில் கூட்டம் இருக்கும்போது ரிட்டன் பண்ணு. உங்க வீட்டுக்கு அனுப்பி வெச்சேன் அதை முத்து வேண்டாம் என்று சொல்லிட்டாரு. எங்களுக்கு இது தேவை தானா? அப்படின்னு சொல்லு வீட்ல பிரச்சனை வெடிக்கும் என்று ஐடியா கொடுக்கிறார்.
அடுத்ததாக மனோஜ் டீலருக்கு கமிஷன் பணத்தை கொடுக்க, அவர் முன்னாடி இருந்த ஓனரை விட நீங்க பாஸ்டா வியாபாரம் பண்ணுறீங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு கஸ்டமர் ஏசியை பார்த்துக் கொண்டிருக்கிறார். ரோகினி அவருக்கு ஏசியை காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சுதா ஏசியோடு கடைக்கு வந்து ரிட்டன் பண்ண வந்திருப்பதாக ஷாக் கொடுக்கிறார்.
அதோடு நான் அனுப்புன ஏசியை முத்து திருப்பி அனுப்பிட்டாரு என்று சொல்ல மனோஜ் இப்பதான் பணத்தை ஏஜென்ட் கிட்ட கொடுத்து அனுப்பினேன் என்று சொல்ல, நீங்க பணத்தை கூட கொடுக்க வேண்டாம் என்னோட கிஃப்டா வச்சிக்கொங்க என்று சொல்ல, மனோஜ் சந்தோஷப்படுகிறார். அதைப் பார்த்த கஸ்டமர் எனக்கு ஏசி வேண்டாம் என்று கிளம்பி போய் விடுகிறார். உடனே ரோகிணி ஒரு நிமிஷம் என்று சொல்லி பணத்தை ரெடி பண்ணி கொண்டு வந்து கொடுக்க, அதற்கு முதலில் பணம் வேண்டாம் என்று சொன்ன சுதா பிறகு வாங்கி கொள்கிறார்
இதனால் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் ரொம்பவே கோபப்படுகின்றனர். அப்போது சுதா, முத்து மட்டும் ஏன் உங்க வீட்டில் இப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை என்று கோர்த்து விட்டு செல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிரேம்ஜியுடன் காதலா? 40 வயது வரை அவர் கல்யாணம் பண்ணாத காரணம்.. ஓபனாக பேசிய சோனா! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications