சிறகடிக்க ஆசை: முத்துவை ரவுண்டு கட்டிய குடும்பம்.. அண்ணாமலையும் மாறிட்டாரே! ஆனால் மீனா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியின் அம்மா வாங்கி கொடுத்த ஏசியை முத்து திருப்பி அனுப்பியதால் மொத்த குடும்பமும் முத்துவை கேள்வி கேட்டு திட்டுகின்றனர். அப்போது அண்ணாமலையும் முத்து செய்தது தப்பு என்று சொல்ல மீனா முத்துவுக்கு சப்போர்ட் செய்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஏசியை திருப்பி கொடுத்த சுதாவுக்கு ரோகிணி பணத்தை கொடுத்ததும், சுதா இதற்கெல்லாம் காரணமே முத்து தான் அவர் மட்டும் ஏசியை திருப்பி அனுப்பாமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று முத்துவை மாட்டிவிட்டு கிளம்பி போகிறார். பிறகு மனோஜ் ரோகிணியிடம் அவங்க தான் பணம் வேண்டும் என்று சொல்லிட்டாங்களே? நீ ஏன் கொடுத்த...

சரி பணத்தை எப்படி இவ்வளவு சீக்கிரமா ரெடி பண்ணி கொடுத்த என்று கேட்க, அதற்கு ரோகிணி நாம பணம் கொடுக்கலைன்னா நல்லா இருக்காது. ஸ்ருதி என்னை எப்படி மதிப்பா? நான் உன்னை எங்கேயும் தலை குனிய விடமாட்டேன் என்று சொல்கிறார். பிறகு வீட்டிற்கு வந்த ரோகிணியும் மனோஜும் கடையில் நடந்த விஷயத்தை சொல்லி முத்துவை திட்டுகின்றனர்.
அதற்கு மனோஜ் இவன் வேணும்னு தான் இப்படி பண்ணுகிறான் என்று திட்ட, அப்போது ரோகிணி முத்துவிடம் உங்க பொண்டாட்டி வாங்குன மிக்சிக்கு நான் முதலில் பில் போடலைன்னு தானே நீங்க ஸ்ருதி அம்மா வாங்கின ஏசியை திருப்பி அனுப்பி இருக்கீங்க என்று அவரும் திட்ட, அதற்கு மீனா இந்த மாதிரி புத்தி எல்லாம் இவருக்கு கிடையாது என்று சப்போர்ட் செய்கிறார்.
அப்போது மனோஜ் எனக்காக ரோகிணி அவளுடைய தாலியை அடகு வச்சு பணத்தை கொடுத்து இருக்கா என்று சொல்ல, விஜயா இந்த வீட்டு மருமக இப்படி மஞ்ச கயிறோட நிக்கிறா என்று ஃபீல் பண்ண, அதற்கு முத்து மீனாவும் ரொம்ப நாளா மஞ்சள் கயிறோடு தான் இருக்கா என்று பதிலடி கொடுக்க அதற்கு விஜயா மீனாவும் ரோகிணியும் ஒன்னா? என்று அவமானபடுத்துகிறார்.
அப்போது ஸ்ருதி, எங்க அம்மாவும் எனக்கு போன் பண்ணி ரொம்ப வருத்தப்பட்டாங்க. முத்து இப்படி பண்ணி இருக்க கூடாது. எங்க கிட்ட சொல்லி இருக்கலாம். இல்ல உங்ககிட்டயாவது சொல்லி இருக்கலாம் என்று அண்ணாமலையிடம் சொல்ல... மனோஜ் எனக்கு வர கோபத்துக்கு என்று முத்துவை அடிக்கப் போக அதற்கு முத்து என்னடா பண்ணுவ என்னடா பண்ணுவ என்று சரிசமமாக சத்தம் போட அண்ணாமலை நிறுத்துங்கடா நான் என்ன சிலையா என்று கோபப்படுகிறார்.
அதோடு முத்து நீ பண்ணுனது தப்புதான். கூட்டு குடும்பமா இருக்கிற இடத்துல தன்னிச்சையா முடிவெடுக்கக்கூடாது. இனிமே இப்படி பண்ணாத என்று திட்டுகிறார். பிறகு முத்து கிச்சனில் இருக்க மீனா அவரிடம் நீங்க பண்ணது தப்புதான் என்று சொல்ல, முத்து நான் என்ன தப்பு பண்ணிட்டேன்.... நீயும் அவங்களை மாதிரியே பேசுற என்று கேட்கிறார்.
அதற்கு மீனா அவங்க ஏற்கனவே தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனில் பிரச்சனையை ஏற்படுத்த பார்த்தாங்க அப்போ அது பெருசா வெடிக்கல. அதனால இப்போ ஏசியை வச்சி அண்ணன் தம்பிக்குள்ள பிரச்சனையை ஏற்படுத்த பார்த்து இருக்காங்க. நீங்க இதை மாமா கிட்ட சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என்று சொல்ல, முத்து நீயும் சரியா தான் யோசிக்கிற.. நான்தான் கோபத்தில் பண்ணிட்டேன் என்று சொல்கிறார்.
அடுத்த ஸ்ருதியும் ரவியும் பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்ருதி ரவியிடம் முத்து பன்னுனது தப்பு தான்.. நீ இல்லன்னு சொல்லப் போறியா? என்று கேட்க அதற்கு ரவி, முத்து பண்ணுனது தப்பு தான் என்று சொல்ல ஸ்ருதி நீயா இப்படி சொல்ற என்று ஆச்சரியப்படுகிறார். அதேசமயம் உங்க அம்மா பண்ணுனதும் தப்புதான் உங்க அம்மா ஏசி அனுப்புறேன்னு உன்கிட்ட சொன்னாங்களா? அல்லது வீட்ல இருக்குற பெரியவங்க கிட்ட சொன்னாங்களா? யாரையும் கேட்காம அவங்களா எப்படி அனுப்பலாம்? என்று கேட்க,
அதற்கு ஸ்ருதி சர்ப்ரைஸா அனுப்பி இருப்பாங்க என்று சொல்ல, சர்ப்ரைஸா அனுப்புனா உனக்கு மட்டும்தான் அனுப்பனும்.. இந்த வீட்டுக்குள்ள எந்த பொருள் வரணும் வரக்கூடாதுன்னு முடிவு பண்ண வேண்டியது எங்க அப்பா தான் என்று சொல்ல ஸ்ருதி நீ சொல்றதும் சரிதான் என்று ஒப்புக்கொள்கிறார். அதோடு இதை ஏன் நீ வெளியிலேயே சொல்லல என்று கேட்க அதற்கு ரவி உன்னை நான் விட்டுக் கொடுக்க கூடாது என்பதற்காகத்தான் வெளியில் இதை பத்தி பேசல என்று சொல்ல ஸ்ருதி சந்தோஷப்படுகிறார்.
அடுத்ததாக விஜயா, முத்துவும் மீனாவும் இந்த வீட்டில் இருக்கிற வரைக்கும் பிரச்சனை தான் அவங்களை தனி குடித்தனம் வச்சிடலாம் என்று பேச அண்ணாமலை கோபப்படுகிறார். பிறகு இந்த வீட்டு மருமக ரோகிண மஞ்சள் கயிற்றோடு இருக்கா அவளுக்கு உடனே தாலி வாங்கணும் என்று விஜயா சொல்ல, அதற்கு அண்ணாமலை அது அவ புருஷனோட பிரச்சனை.
அவன் வாங்கி கொடுப்பான் என்று சொல்ல அதற்கு விஜயா அதுவரைக்கும் இந்த வீட்டு மருமக இப்படியே இருப்பாளா? அது நமக்கு தானே அவமானம் என்று சொல்ல மீனா இவ்வளவு நாளா மஞ்ச கயிற்றோட தான இருக்கா.. அப்போ உன் கௌரவம் எங்கே போச்சு? என்று அண்ணாமலை கேள்வி கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications