சிறகடிக்க ஆசை: வீட்டை காப்பாற்ற முத்து மீனா பட்ட கஷ்டம்.. கடைசியில் வக்கீல் சொன்ன விஷயம்! அதிர்ச்சியில் அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial May 5 episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மே ஐந்தாம் தேதிக்கான எபிசோடில், மனோஜ் பைனான்சியரிடம் அடகு வைத்த வீட்டை அவர் எழுத்தில் விடுவதற்காக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் ஆனால் அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று முத்துமீனா முயற்சி எடுத்து இருக்கிறார்கள் கடைசியில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial today episode) இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், பைனான்சியர் அனுப்பிய ஜப்தி நோட்டீஸை பார்த்து அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை மனமுடைந்து போகிறார். இனி அப்போ இந்த வீட்டில் நம்மால் வாழ முடியாதா? என்னுடைய உயிர் இந்த வீட்டில் தான் போகணும். நான் இறந்து போனால் கூட என்னுடைய உடலை நீங்க இந்த வீட்டிலிருந்துதான் எடுத்துட்டு போகணும் என்று சொல்ல, அதைக் கேட்டு முத்து மீனா பதறிப் போகின்றனர். எப்படியாவது நாங்க பணம் ரெடி பண்ணி இந்த வீட்டை மீண்டும் வாங்கி விடுவோம் என்று உறுதியாக சொல்கின்றனர்.
மறுபுறம் மனோஜ் அக்கறையே இல்லாமல் வீட்டை விற்றுவிடலாம் என யோசனை கூற, அவரை அனைவரும் திட்டி தீர்த்தனர். வீடு ஜப்தி செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முத்துவும் மீனாவும் பைனான்சியரை நேரில் பார்த்து பேச முடிவெடுத்து அவரின் ஆபீஸ்க்கு போகின்றனர். அங்கு அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்தும் அந்த பைனான்சியர் அங்கு வரவில்லை.
பைனான்ஸியரின் பிளான்
இதனால் கோபமான முத்து அங்கிருக்கும் ஊழியர் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அவர் பைனான்சியருக்கு போன் பண்ணி கொடுக்கிறார். அவரோ தான் வெளியே இருப்பதாக சொல்லி, தான் இருக்கும் இடத்துக்கு வரச் சொல்கிறார். அந்த பைனான்சியர் பேச்சை கேட்டு, முத்துவும் மீனாவும் அவர் சொன்ன இடத்துக்கு சென்று பார்த்தால் அங்கும் அவர் இல்லை.
பின்னர் தான் அண்ணா நகரில் இருப்பதாக சொல்கிறார். அங்கு சென்றாலும் அவர் இல்லை. இதனால் கடுப்பான முத்து, ஒழுங்காக நீ இருக்கும் இடத்தை சொல்லும்படி கேட்க, அவர் இறுதியாக தான் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதாக சொல்கிறார். அங்கு சென்று பார்த்தாலும் அவர் இல்லை. இவன் நம்மை வைத்து விளையாடுகிறான் என்று தெரிந்ததும், முத்துவும் மீனாவும் நேராக வழக்கறிஞரை சந்திக்க செல்கிறார்கள்.

வக்கீல் சொன்ன விஷயம்
அங்கு பைனான்சியர் தங்களை அலைக்கழித்த விஷயத்தை கூறுகிறார்கள். அவர் உங்களுடன் பேசவேண்டாம் என்பதற்காக தான் இப்படிச் செய்கிறார் என வக்கீல் சொல்கிறார். அதுமட்டுமின்றி இந்த வீட்டை ஜப்தி செய்ய அவர் அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற வைப்பதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது என கூறுகிறார் வழக்கறிஞர். கோடை விடுமுறை காரணமாக நீதிமன்றம் பத்து நாட்கள் மூடப்பட்டிருக்கும் விஷயத்தை சொல்லும் அவர், இதனால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என கூறுகிறார்.
அதிர்ச்சியில் அண்ணாமலை
இந்த விஷயமெல்லாம் தெரிந்து தான் அவர் ஜப்தி நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் சொல்கிறார். இதில் வேறு ஒன்றும் செய்ய முடியாது என வழக்கறிஞர் சொன்னதும் சோகமாக முத்துவும் மீனாவும் வீட்டிற்கு கிளம்பிச் செல்கிறார். அங்கு சென்றதும் என்ன ஆனது என அண்ணாமலை கேட்க, முத்து நடந்ததை எல்லாம் கூறுகிறார். இதைக் கேட்டதும் இடிந்து போனவரைப் போல உட்கார்கிறார் அண்ணாமலை.

சிந்தாமணி பிளான்
இதற்கிடையில் அந்த பைனான்சியர், சிந்தாமணிக்கு போன் பண்ணி, நீங்கள் சொன்ன மாதிரியே அவர்களை அலைக்கழித்தேன் என சொல்கிறார். ரொம்ப சந்தோஷம், அவர்கள் இப்படி தெரு தெருவாக அலைய வேண்டும், உங்களை பார்த்திருந்தால் ஏதாவது பேசி அந்த வீட்டை ஜப்தி செய்ய விடாமல் தடுத்திருப்பார்கள் என கூறும் சிந்தாமணி, நாளைக்கு நானும் அங்கு வருகிறேன். அவர்கள் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் காட்சியை நானும் பார்த்து ரசிக்க வேண்டும் என கூறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications