சிறகடிக்க ஆசை: ரோகினியை மிரட்டும் வசீகரன்.. மீனாவின் பதிலடி.. ஸ்ருதியை வைத்து பிளான் போடும் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் நவம்பர் 7ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ரோகினியின் பழைய பிஏ வசீகரன் வீட்டிற்கே வந்து பணம் வேண்டும் இல்லையென்றால் வீட்டில் சொல்லி விடுவேன் என மிரட்டுகிறார்.
அடுத்ததாக விஜயா பணத்திற்காக ஸ்ருதி ரவியை வீட்டிற்கு கூட்டிட்டு வர வேண்டும் என்று பிளான் போடுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மீனா அவரை திட்டுகிறார். அதற்கு முத்து உன்னால தான் எங்க அப்பாவுக்கு இப்படி ஆயிடுச்சு, அதனால என் கார் போயிட்டு. அதனால நான் குடிச்சதுக்கு காரணமே நீதான் என்று திட்டுகிறார். அதற்கு மீனா நான் தான் நடந்ததை சொன்னேனே என் மேல எந்த தப்பும் இல்லை என்று புரிய வைக்க முயற்சி செய்ய அதை முத்து ஏற்றுக்கொள்ளவில்லை.
அதைத்தொடர்ந்து மீனாவின் அம்மா மீனாவுக்கு போன் போட்டு அண்ணாமலை அண்ணா எப்படி இருக்கிறார். உன் புருஷன் கோபம் போயிடுச்சா? அவர் உன்கிட்ட நல்லா நடந்துக்கிறாரா? என்று விசாரிக்க அதற்கு மீனா இங்க ஒரு பிரச்சனையும் இல்ல அம்மா, எல்லாம் சரியாயிடுச்சு என்று பொய் சொல்லி போனை கட் பண்ணுகிறார். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விஜயா மீனாவை பார்த்து இங்க எது நடந்தாலும் உங்க அம்மா கிட்ட சொல்லிக்கிட்டு இருப்பியா?
நீ நினைச்ச மாதிரியே எல்லாத்தையும் நடத்திட்டால்ல ரவியை எங்க கிட்ட இருந்து பிரிச்சிட்டா, இனி மனோஜ் ரோகிணியை இந்த வீட்டை விட்டு பிரிக்க தான் பிளான் போடுறா என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு மீனா நான் ஏன் அப்படி எல்லாம் பிளான் பண்ண போறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
அடுத்த நாள் காலையில் மனோஜ் வேலைக்கு போறேன் என்று பொய் சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்பி போகிறார். அடுத்ததாக கொரியர்காரர் வேஷத்தில் ரோகினியின் பழைய பிஏ வசீகரன் ரோகிணியை தேடி வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரைப் பார்த்த மீனா என்னவென்று விசாரிக்க ரோகினிக்கு கொரியர் வந்திருக்கு அது என்று வசீகரன் பொய் சொல்ல, அதை நம்பி மீனா ரோகினி இடம் உங்களுக்கு கொரியர் வந்திருக்கிறது என்று சொல்கிறார்.
சொத்துக்களை ஏமாற்றி எழுதி வாங்கும் அர்ஜுன்.. கண் கலங்கி அழுத ராகினி.. அதிர்ச்சியில் தமிழ்
அதை கேட்ட விஜயா உங்க அப்பா தான் ஏதாவது தீபாவளிக்கு கிப்ட் அனுப்பி இருப்பாரா இருக்கும் போய் பாரு என்று சொல்ல, சரி என்று ரோகினி குழப்பத்தோடு வாசலில் வந்து பார்க்க அங்கே வசீகரன் நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சி ஆகிறார். பிறகு விஜயாவிடம் ஏடிஎம் கார்டு தான் வந்திருக்கு நீங்க போங்க அத்தை என்று சொல்லிவிட்டு வசீகரினிடம் இங்கே எதுக்கு வந்த என்று கேட்கிறார்.
அதற்கு அவர் நான் உன்கிட்ட பணம் கேட்டு இருந்தேன். நீ அனுப்பி வைக்கிற மாதிரி தெரியல. அதனாலதான் வீடு தேடி வந்தேன் என்று சொல்ல, அதற்கு ரோகிணி நாளைக்குள்ள எப்படியாவது பணம் தருகிறேன் என்று சொல்கிறார். அதற்கு வசீகரன் நாளைக்கு சாயந்தரம் ஏழு மணிக்குள்ள பணம் வரலைன்னா ஏழு பத்துக்கு உங்க வீட்டுக்கு வந்து உன்ன பத்தி எல்லா உண்மையையும் சொல்லிடுவேன் என்று மிரட்டுகிறார்.
இதை எல்லாம் மீனா பார்த்துக் கொண்டிருப்பது போல் நின்று கொண்டிருக்கிறார். அதை பார்த்து ரோகிணி அதிர்ச்சி அடைய ஆனால் மீனா அவர்கள் பேசியது எதையும் காதில் வாங்கவில்லை என்பது பிறகுதான் ரோகினிக்கு புரிகிறது. அதைத் தொடர்ந்து மனோஜ் போனை வீட்டில் வைத்து விட்டேன் என்று திரும்பி போனை எடுத்த வருகிறார்.
அப்போது ரோகினி மனோஜிடம் எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. உன் ஆபீஸ்ல உனக்கு தீபாவளி போனஸ் தருவாங்களா? என்று கேட்க அதற்கு மனோஜ் நான் வேலைக்கு போய் கொஞ்ச நாள் தான் ஆகுது தருவாங்களான்னு தெரியல கேட்டுப்பார்க்கிறேன் என்று பொய் சொல்கிறார். இதை கேட்டுக் கொண்டிருந்த விஜயா மனோஜிடம் நான் எப்படியாவது அரேஞ்ச் பண்றேன்னு சொல்கிறார்.
அடுத்த கட்டத்தில் விஜயா பார்வதி வீட்டுக்கு போய் எனக்கு ஐம்பதாயிரம் பணம் வேண்டும் கடனா கூடு அப்புறம் கொடுக்கிறேன் என்று கேட்கிறார். அதற்கு பார்வதி நான் இப்ப எங்க பணத்துக்கு போவேன் என்று சொல்லிவிட்டு ரவி கல்யாணம் பண்ணி இருக்கிற இடம் பெரிய இடம். அந்த பொண்ணு மட்டும் உன் வீட்டில் இருந்திருந்தால் உனக்கு பணகஷ்டமே வந்து இருக்காது.
உன் புருஷனுக்கு ஒரு ஸ்டன்ட் இல்ல நாலு ஸ்டன்ட் கூட வச்சிருக்கலாம். அந்த அளவுக்கு அவங்க கிட்ட பணம் இருக்கு. ரவி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டான்ல்ல நீயே போய் அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வா. அந்த பொண்ணு உன் கூட இருந்தா உனக்கு பணம் கஷ்டமே வராது. ரோகிணியை விட பெரிய இடம் என்று பார்வதி சொல்ல இதைப் பற்றி விஜயாவும் யோசிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிந்தது.
-
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications