சொத்துக்களை ஏமாற்றி எழுதி வாங்கும் அர்ஜுன்.. கண் கலங்கி அழுத ராகினி.. அதிர்ச்சியில் தமிழ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நவம்பர் 6ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் தமிழ் வீட்டிற்கு வந்திருந்த ராகினிக்கு தன்னுடைய தந்தை சொத்து விஷயமாக வழக்கறிஞரை பார்க்க போயிருக்கும் ரகசியம் தெரிய வருகிறது. இதனால் கோபமாக வீட்டை விட்டு கிளம்பி போகிறார்.
அதே நேரத்தில் சேர்மன் பதவியை தொடர்ந்து சொத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வாங்க அர்ஜுன் புது பிளான் போடுகிறார். அதில் ராகினி மாட்டிக்கொள்கிறார் இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராகினி தமிழ் வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் அங்கு கோதை, வசு, சரஸ்வதி, கார்த்தி, தமிழ் என எல்லோரும் சந்தோஷப்பட்டு ராகினியை விழுந்து விழுந்து கவனிக்கின்றனர். அதோடு ராகினிக்கு என்ன வேண்டும்? என்ன கொடுக்க வேண்டும்? என்று பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
மறுபக்கத்தில் அர்ஜுன் குடும்பத்தினர் அர்ஜுனை குழப்புகின்றனர். இவள் மறுபடியும் அங்கே போய்விட்டால் அதனால் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று பயந்து கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் தமிழ் வீட்டில் ராகினியும் இப்படியே சந்தோஷமா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும். நாமெல்லாம் இப்படித்தானே இருந்தோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
பாக்யாவுக்கு மாலினி வைத்த ஆப்பு.. சூழ்நிலையை பயன்படுத்திய கோபி.. அதிர்ச்சியில் ஜெனி
அதற்கு நமச்சி உடனே அந்த சொத்தை அம்மா பேருக்கு மறுபடி எழுதி கொடுக்க முடியுமா என்று கேட்க, அதற்கு ராகினி என்னென்ன பேசுறீங்க என்று கோபப்படுகிறார். அதோடு அர்ஜுன் குடும்பம் ஏமாந்ததால் தான் அந்த சொத்தை அவங்களுக்கு எழுதி கொடுத்தோம். அதை போய் எழுதி வாங்கினா என்னன்னு கேக்குறீங்களே என்று ராகினி பேசுகிறார்.
அந்த நேரத்தில் தன்னுடைய அம்மா அக்கா பேச்சை கேட்டு பயந்து போன அர்ஜுன் ராகினிக்கு போன் செய்ய அப்போது ராகினி நான் பழையபடி ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இப்பதான் எனக்கு சந்தோசமா இருக்கு. எல்லாரும் எனக்காக இங்கே பார்த்து செய்றாங்க. நாங்க ஆரம்பத்தில் இப்படித்தான் இருந்தோம்.
சிறகடிக்க ஆசை: முத்துவின் கனவு கலைந்தது.. பிஏவால் மீனாவிடம் மாட்டும் ரோகிணி.. விஜயாவின் வில்லத்தனம்
எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னு ஆசையா இருக்கு என்று சொல்ல, அதைக் கேட்டு அர்ஜுன் அதிர்ச்சியாக நிற்கிறார். இவங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து விடுவார்களோ என்று குடும்பத்தோடு அர்ஜுன் பிளான் பண்ணி அவருடைய மாமாவிடம் எதையாவது சொல்லி ராகினி கூட்டிட்டு வர அனுப்பி வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து அடுத்த காட்சியில் ராகினியை அனைவரும் எழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருக்கும் போது அங்கு அர்ஜுனின் மாமா, வாமா கிளம்பலாம் என்று கூப்பிடுகிறார். அதற்கு அங்கு ராகினி இப்பதான் நான் சாப்பிட உட்கார்ந்து இருக்கிறேன் சாப்பிட்டு போகலாம் என்று சொல்ல அதற்கு அர்ஜுன் மாமா விடுவது போல இல்லை.
இங்கே ஏசி இல்ல வா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல அந்த நேரத்தில் ராகினிக்கு புரை ஏறுகிறது. உடனே அர்ஜுனனின் மாமா என்னத்த கொடுத்தாங்கன்னு தெரியல, இவங்க ஏதாவது தெரியாம கொடுத்து அதனால குழந்தைக்கு ஏதாவது ஆயிட போகுது வாமா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று பிரச்சனை செய்கிறார்.
அதற்கு சரஸ்வதி, கோதை, என எல்லாரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது கார்த்திக் எங்களை ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கினவன் தான நீங்க. ஓடிவிடு, அடி வாங்கிய செத்துற போற என்று அர்ஜுன் மாமாவின் சட்டையை பிடித்து தூக்கி, நீங்க ரொம்ப நாள் ஆட்டம் போடாதீங்க. உங்க சொத்தை திரும்பி நாங்க வாங்குறதுக்காக தான் அப்பா வைக்கில பார்க்க போய் இருக்காரு என்று உளறி விடுகிறார்.
அதனால் அர்ஜுனன் மாமா இவர்களுக்கு எல்லாத்துக்கும் சொத்துதான் முக்கியம். நீ முக்கியம் கிடையாது. உன்னை பகடகாயா வச்சு தான் இவங்க சொத்த திரும்பி வாங்க பாக்குறாங்க என்று ராகினியிடம் ரஜினி மாமா ஏத்தி விட, அதனால் ராகினி டென்ஷன் ஆகி விடுகிறார். அதோடு உங்களுக்கு சொத்து தான் முக்கியமா? என கேட்டு நான் வந்ததும் அப்பா எங்கன்னு கேட்டதுக்கு அவரு பிரண்ட பாக்க போயிருக்காருன்னு சொன்னீங்க,
ஆனால் கார்த்தி அண்ணா என்னன்னா இப்படி சொல்றாங்க என்று கேட்டு கோபப்பட்டு வீட்டை விட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அழுது கொண்டே வெளியே கிளம்பி வருகிறார். அர்ஜுன் வீட்டுக்கு வந்ததும் நடந்த அனைத்தையும் அர்ஜுனின் மாமா அர்ஜுனிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது ராகினி கோபமாக மாடிக்கு கிளம்புகிறார்.
அப்போது ஏதோ ஒரு விஷயம் ராகினியிடம் பேசணும்னு சொன்னியே என்று அர்ஜுனிடம் அவருடைய அம்மா கேட்க, அதற்கு அவர் இப்ப வேண்டாம் சரியா இருக்காது என்று சொல்ல அதற்கு ராகினி என்ன சொல்லுங்க என்று விசாரிக்கிறார். அப்போது அம்பத்தூரில் இருக்கும் ஒரு யூனிட் விற்று விட்டு புதிய கம்பெனி விலைக்கு வாங்கலாம் என போனேன்.
ஆனால் சொத்து ஃபுல்லா உன் பேரில் இருக்கு நீங்க டைரக்டர் தான் எனக்கூறி விடுகிறார்கள் என்று சொல்ல, அதற்கு அர்ஜுனன் குடும்பம் சொத்த பேசாம அர்ஜுன் பெயருக்கு எழுதி கொடுத்துடலாம் என்று பேசுகின்றனர். அதற்கு ராகினி அது மாதிரியே செஞ்சிடலாம் சொத்தை உங்க பேருக்கு எழுதி கொடுத்துருதேன் என்று பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications