சிறகடிக்க ஆசை: மீனாவின் அம்மாவை அரெஸ்ட் செய்த போலீஸ்.. சுதா கேட்ட கேள்வி! முத்து கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 9ஆம் தேதி எபிசோடில் சத்யா தலைமறைவாகி விட்டதால் மீனாவின் அம்மாவை போலீஸ் அரெஸ்ட் செய்கிறது. அதே நேரத்தில் ஸ்ருதியின் அம்மா சுதா வீட்டிற்கே வந்து அவமானப்படுத்துகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயாவும் பார்வதியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பார்வதி என்னுடைய மகனை மருமகள் என்னிடம் இருந்து பிரித்து தனியா கூட்டிட்டு போனது போல உன்னுடைய மத்த ரெண்டு மருமகள் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மீனா எப்போதும் அந்த மாதிரி செய்ய மாட்டா.

அவ தான் உன்னை நல்லா பாத்துக்க போறா என்று சொல்ல, அதற்கு பார்வதி உன் வீட்டுக்கு வந்ததற்காக நீ எனக்கு அட்வைஸ் பண்ணுவியா? நீ இப்படி அவளுக்கு சப்போர்ட் பண்ணா நான் இங்கிருந்து கிளம்பி போயிருவேன் என்று மிரட்டுகிறார்.
மறுபக்கத்தில் வீட்டில் நடந்த பிரச்சனைகளை நினைத்து இரவு மீனா அழுது கொண்டிருக்கிறார். முத்து என்ன ஆச்சு என்று கேட்க, நாம ரெண்டு பேரும் தனியா போயிறலாமா வீட்டில் நம்மால் தான் எல்லாரும் நிம்மதி இல்லாம இருக்காங்க என்று சொல்ல அதற்கு முத்து கோபப்படுகிறார். அப்பாவுக்காக நாம இந்த வீட்டை விட்டு போக கூடாது. அப்பாவுக்கு காய்ச்சல் வந்தா கூட என்னதான் கூப்பிடுவாரு. அப்பாவுடைய கடைசி காலம் வரைக்கும் நாம இங்கதான் இருக்கணும் என்று சொல்கிறார்.

அடுத்ததாக விஜயா வீட்டிற்கு ஸ்ருதியின் அம்மா வருகிறார். அண்ணாமலையிடம் சம்மந்தி இல்லையா என்று கேட்க, அப்போது அங்கு வரும் ரோகிணி அத்தை மாமாவிடம் கோபப்பட்டு விட்டு வீட்டை விட்டு கிளம்பி போயிட்டாங்க என்று சொல்கிறார். பிறகு சத்யா வீடியோ பிரச்சனையும் வீட்டில் நடந்த வாக்குவாதம் குறித்தும் ரோகிணியும் மனோஜும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அதனால் அண்ணாமலை கோபப்படுகிறார். வீட்டு விஷயத்தை இப்படித்தான் அடுத்தவங்க கிட்ட சொல்லுவியா? என்று அண்ணாமலை கேட்க அதற்கு ரோகிணி சாரி மாமா ஸ்ருதியின் அம்மாவும் நம்ம குடும்பத்துக்காரங்க தானே அதனால தான் சொன்னேன் என்று சொல்கிறார்.
அப்போது சுதா, மீனாவின் தம்பி இப்படி பண்ணுனது எங்களுக்கு கேவலமா இருக்கு. எங்க வீட்டுக்காரரிடம் எல்லாரும் போன் பண்ணி விசாரிக்கிறாங்க. அவர் வீட்டை விட்டு வெளிய போகல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து வீட்டிற்கு வந்து உங்க புருஷன் எவ்வளவு ஏமாத்துனாருன்னு எல்லாரும் சொல்லி இருக்காங்க என்று சொன்னதும் ஸ்ருதியின் அம்மா கோபப்படுகிறார்.

அந்த நேரத்தில் ஸ்ருதி வந்ததும் ரூமிற்கு தனியாக சென்று ஸ்ருதி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இந்த வீட்டில் நீ இருப்பது எங்களுக்கும் அவமானமாக இருக்கிறது. பேசாம நீயும் மருமகனும் வீட்டை விட்டு வந்துருங்க என்று சொல்ல, அதற்கு ரவி வர முடியாது என்று சொல்லி விடுகிறார்.
அந்த நேரத்தில் ரோகினிக்கு சிட்டி கால் பண்ணுகிறார். அப்போது மனோஜ் அங்கே இருப்பதால் ரோகிணி கிளைன்ட் பேசியது போல சமாளிக்கிறார். சிட்டி உங்கள மீட் பண்ணனும் என்று சொன்னதும் ரோகிணி மனோஜிடம் கிளைண்டை பாக்க போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
இந்த நேரத்தில் மீனாவுக்கு கால் செய்த சீதா, சத்யாவை தேடி போலீஸ் வீட்டுக்கு வந்தாங்க அவன் இல்லை என்றதும் அம்மாவை கூட்டிட்டு போயிட்டாங்க என்று அழுகிறார். இதை கேட்டாலும் மீனா முத்துவை கூட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார். முத்து போலீஸ் அதிகாரியிடம் பேசுகிறார்.
ஆனால் அவங்க விஜயா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க அவங்க வந்து சொல்லட்டும் நாங்க விட்ருவோம் சத்யா வந்தால் மட்டும் தான் அவங்க அம்மாவை விடுவோம் என்று சொல்லிவிடுகின்றனர். அப்போது அங்கு இருக்கும் கான்ஸ்டபிள் ஒருவர் நான் ஒரு வக்கீல் நம்பர் தரேன் நீங்க அவங்களிடம் பேசிப் பாருங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications