சிறகடிக்க ஆசை: குடும்பத்தில் வெடித்த பிரச்சனை.. வீட்டை விட்டு போகும் ஸ்ருதி! விஜயா கொடுத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 12ஆம் தேதி எபிசோடில் ரவி மற்றும் ஸ்ருதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, அதனால் ஸ்ருதி வீட்டை விட்டு கிளம்பி அவருடைய அம்மா வீட்டுக்கு போகிறார். இந்த பிரச்சனையை வைத்து விஜயா ரவியிடம் கோபப்படுகிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்கும் போது முத்துவும், மீனாவும் வருகின்றனர். அப்போதும் மீனா நீங்க ஏன் அத்தை இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க, நீ தான் காலையிலேயே எங்க போனேன்னு தெரியலையே என்று சொல்ல நான் இவரை கூட்டிட்டு வர போயிருந்தேன் என்று சொல்ல, ஆமா இவன் ஸ்கூல் படிக்கிறான் இவனை போய் நீ தான் கூட்டிட்டு வர என்று விஜயா கிண்டல் பண்ணுகிறார்.

television siragadikka aasai serial vijay tv

அந்த நேரத்தில் அண்ணாமலை வந்துவிட மனோஜ் மற்றும் ரோகிணியும் கீழே இறங்கி வந்து காபி ஆண்டி என்று கேட்க, அதான் இவ வந்துட்டால்ல இனி இவ போடுவா என்று விஜயா சொல்கிறார். அதற்கு மீனா நான் கோலம் போட்டுட்டு வந்து காபி போடுறேன் என்று சொல்ல முத்து மீனா கையில் இருக்கும் கோலமாவை பிடுங்கி மனோஜ் கையில் கொடுத்து உன் பொண்டாட்டியை கோலம் போட சொல்லு என்று சொல்ல அங்கு வாக்குவாதம் ஏற்படுகிறது.

அப்போது மனோஜ் முத்து ஜெயிலுக்கு போயிட்டு வந்ததை வைத்து கிண்டல் செய்கிறார். அதுக்கு முத்து நான் ஒன்னும் தப்பு பண்ணிட்டு ஜெயிலுக்கு போகல, தப்பு பண்ணி பிராடுத்தனம் பண்றவங்க எல்லாம் தப்பிச்சிட்டு தான் இருக்காங்க எங்களுக்கு தான் நேரம் சரியில்ல என்று குத்தலாக பேச விஜயா சரி வாங்க நம்ம காபி குடிக்க போலாம் என்று கூப்பிட்டு செல்கிறார். அண்ணாமலை எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்க முத்துவும், மீனாவும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்கள்.

television siragadikka aasai serial vijay tv

பிறகு அண்ணாமலை இனி எந்த தப்பும் பண்ணாதீங்க என்று அட்வைஸ் கொடுத்துவிட்டு கிளம்புகிறார். மறுபக்கத்தில் ஸ்ருதி ரூமில் படுத்துக் கொண்டிருக்கிறார். ரவி வேலைக்கு கிளம்பி கொண்டிருக்கிறார். தூக்கத்திலிருந்து எழுந்த ஸ்ருதி நீ பாட்டுக்கு கிளம்பிட்டு இருக்குற என்று கேட்க, அதற்கு ரவி என்ன ஆச்சு ஃபீவரா என்று தொட்டு பார்க்கிறார். பிறகு நீ எனக்கு வேலைக்கு போகாம ரெஸ்ட் எடுக்கிறேன்னு நெனச்சேன் ஆனா காய்ச்சல் என்று எனக்கு தெரியல என்று சொல்கிறார்.

அப்போது ஸ்ருதி இன்னைக்கு நீயும் வேலைக்கு போக வேண்டாம் என்கூடவே இரு என்று சொல்லிக் கொண்டிருக்க ரவி முதலில் சரி என்கின்றார். அந்த நேரத்தில் அவருடைய பாஸ் பொண்ணு ஃபோன் பண்ணுகிறார் அவரிடம் இன்னைக்கு எனக்கு லீவ் வேண்டும் என்று ரவி கேட்கிறார். அதற்கு, இன்னைக்கு முக்கியமான விஷயம் நடக்குது நீங்க தான் டிஷ் பண்ணனும் அப்படி இருக்கும்போது எப்படி லீவு கேக்குறீங்க என்று கேட்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அதற்கு ரவியும் என் மனைவிக்கு உடம்பு சரியில்ல அதனால்தான் கேட்கிறேன் பக்கத்துல இருந்து பாக்கணும்னு சொல்லுறா என்று சொல்ல, அதற்கு பாஸ் மகள் நீங்க ஜாயிண்ட் ஃபேமிலி தானே அவங்களை நீங்க இல்லனாலும் வீட்டில் யாராவது பார்த்துக்குவாங்க நீங்க வந்து தான் ஆகணும் என்று சொல்ல ரவியும் சரி என்று சம்மதித்து விடுகிறார். ஸ்ருதியிடம் நான் வேலைக்கு போயிட்டு சாயங்காலம் சீக்கிரமா வீட்டுக்கு வந்து உன்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்.

மீனா அண்ணி கிட்ட சொல்லிட்டு போறேன் இன்னும் உன்னை பார்த்துக்குவாங்க என்று கிளம்பி போகிறார். ரவி கிளம்பியதும் ஸ்ருதி பெட்டியுடன் வெளியே கிளம்புகிறார், அதை பார்த்து மீனா எங்க போறீங்க உங்களுக்காக கஞ்சி வச்சிருக்கேன் என்று சொல்ல, நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன் ரவிக்கு என் மேல அக்கறையும் இல்ல அன்னைக்கு உங்களுக்கு தலையில் அடிபட்ட போது ஒருநாள் ஃபுல்லா முத்து உங்க கூடவே இருந்தார்ல்ல.

இத்தனைக்கும் நீங்க விருப்பமில்லாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க ஆனா நான் இவனுக்காக வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணினேன் ஆனாலும் இவனுக்கு என்மேல பாசமே இல்லை என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்புகிறார். அப்போது விஜயா வந்து ஏன் ஸ்ருதி வீட்டை விட்டு வெளியே போறா? இதுக்கு காரணம் இவ தானா? என்று மீனாவை திட்ட அதற்கு மீனா எதுக்குனாலும் என்கிட்ட வராதீங்க.

television siragadikka aasai serial vijay tv

ஸ்ருதிக்கும் ரவிக்கும் பிரச்சனை அதனால அவங்க போறாங்க என்று சொல்ல ரவி அப்படி எல்லாம் தப்பு பண்ணி இருக்க மாட்டேன் என்று சொல்ல அப்ப நான் தான் தப்பு பண்ணி இருக்கேனு நீங்களும் சொல்லுறீங்களா? என்று விஜய்யாவிடமும் கோபப்பட்டு கொண்டு ஸ்ருதி விஜயா தடுத்தும் கேட்காமல் அவருடைய அம்மா வீட்டுக்கு போய் விடுகிறார்.

பிறகு ஸ்ருதி போனதும் விஜயா எல்லாம் இவளுகளை சொல்லணும் புருஷனை மயக்கி வச்சிட்டு இப்படி பண்ணிட்டு இருக்காளுங்க என்று திட்டி கொண்டு இருக்க முத்து வெளியே நின்று இதெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு மீனாவிடம் என்னாச்சு என்று கேட்க ரவியிடம் கோபித்துக் கொண்டு அவருடைய அம்மா வீட்டுக்கு போனதை சொல்கிறார்.

அந்த நேரத்தில் ரெஸ்டாரண்டில் ரவி ஸ்ருதியை நினைத்துக் கொண்டிருக்கும் போது அவருடைய பாஸ் மகள் வந்து உங்க வைஃப் உடம்பு சரியில்லைன்னு சொன்னீங்கல்ல கால் பண்ணி பேசுங்க என்று சொல்கிறார். அந்த நேரத்தில் விஜயா போன் போட்டு ஸ்ருதி அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டா என்று சொல்ல, ரவி அதிர்ச்சி அடைகிறார். அப்போது ஸ்ருதி மீது ரவிக்கு இன்னும் கோபம் வருகிற மாதிரி விஜயா பேசிக் கொண்டே இருக்க இதை பார்த்து மீனா அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+