சிறகடிக்க ஆசை: கையெழுத்து போட்ட மீனா.. ஜெயிலுக்கு போகும் அண்ணாமலை.. முத்துவின் அதிரடி..!?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் அக்டோபர் 18ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் கோவிலில் வைத்து ஸ்ருதி மற்றும் ரவிக்கு திருமணம் முடிந்து விட அதை பார்த்து அதிர்ச்சியாக இருக்கும் மீனாவிடம் சாட்சி கையெழுத்து வாங்கி விடுகிறார்.

அதே நேரத்தில் ஸ்ருதியை கடத்திக் கொண்டு போய் விட்டதாக போலீஸ் மூலமாக ஸ்ருதியின் அப்பா அண்ணாமலையை கைது செய்ய சொல்கிறார். இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அண்ணாமலையின் பாசம்: அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் ரவி கோவிலுக்கு அவசர அவசரமாக கிளம்புகிறார். அப்போது அவருடைய தலையில் இடித்துக்கொள்ள அதை பார்த்து பதறிப்போன அண்ணாமலை ரவியை அமர வைத்து அவருக்கு தலையை தேய்த்து விடுகிறார்.
அதைத் தொடர்ந்து மீனா நான் கோயிலுக்கு போயிட்டு வருகிறேன் என்று சொல்லி, ரவி என்னை கோவிலில் விட்டு விடு என்று சொல்ல அதற்கு விஜயா ஏன் நீ தனியா போக முடியாதா? என்று திட்டுகிறார். அதற்கு அண்ணாமலை விஜயாவை திட்டி விட்டு மீனாவுக்கு சப்போர்ட் செய்து மீனாவை கூட்டிட்டு போக சொல்லி ரவியிடம் கூறுகிறார். அதனால் மீனா தான் மாமனாரிடம் பொய் சொல்லிவிட்டு போகிறோமே என்று குற்ற உணர்ச்சி அடைகிறார்.
ஆனாலும் சரி நாம ஸ்ருதிக்கு அறிவுரை தானே சொல்லப் போகிறோம் என்று ரவியின் பேச்சை கேட்டு நம்பி பைக்கில் போக, அங்கு கோவிலில் சீதா மாலையை கட்டிக்கொண்டு இருக்க, அப்போது பிஜூவுடன் காரில் வந்து ஸ்ருதி இறங்குகிறார். அடுத்ததாக பிஜிவிடம் உங்க டேஸ்ட்தான் அருமையாக இருக்கிறது. நீங்களே ஒரு கிப்ட் வாங்கிட்டு வாங்க கல்யாணத்திற்க்கு நம்ம கிப்ட் பண்ணனும் என்று சொல்ல, அதை நம்பிய பிஜு பக்கத்தில் இருக்கும் மாலுக்கு போயிட்டு வருகிறேன் என்று கிளம்பி போகிறார்.
அதை தொடர்ந்து அங்கு ரவியும் மீனாவும் வருகின்றனர். ரவி மீனாவிடம் நீங்க வெளியவே இருங்க. நான் ஸ்ருதியிடம் பேசி சமாதானப்படுத்தி விட்டு உங்களை கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி உள்ளே போகிறார். கோவிலுக்கு போனதும் குழப்பமாக இருக்கும் ரவி இடம் ஸ்ருதி இது நம்ம லைஃப் எதையும் போட்டு குழப்பிக்காத சந்தோஷமா மட்டும் தான் இருக்கணும் என்று அட்வைஸ் செய்து கொண்டு திருமணத்தை நடத்துகின்றனர்.

சிறகடிக்க ஆசை: விஜய் டிவி சீரியலில் நடந்த அதிசயம்.. இனி நடக்கப் போவது இது தானா? இப்படி ஒரு முடிவா?
ரொம்ப நேரம் ஆகியும் ரவி வெளியே வராததால் மீனா உள்ளே சென்று பார்க்க அங்கு இருவருக்கும் திருமணமாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி விடுகிறார் அதைத் தொடர்ந்து இப்படியா கல்யாணம் செஞ்சுப்பீங்க? வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் என்று சத்தம் போடுகிறார். அதோடு இத்தனைக்கும் எல்லாம் காரணம் நீதான் என்று சீதா கன்னத்தில் மீனா அடித்து விடுகிறார்.
இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடையும் நிலையில் நாளைக்கு என்று வெளியிட்ட வீடியோவில் ஸ்ருதியின் அம்மா அப்பா அண்ணாமலை வீட்டிற்கு வந்து என்னுடைய பொண்ணை இவங்க தான் கடத்தி வச்சிருக்காங்க என்று சண்டை போட அதற்கு விஜயா இருங்க நான் போலீசுக்கு போன் போடுகிறேன் என்று சொல்ல, இருங்க இப்போ அவங்களே வந்துருவாங்க என்று அவர்கள் அண்ணாமலையை போலீசை வைத்து கைது செய்ய வருகிறார்கள்.
அதைத் தொடர்ந்து ரவி மற்றும் ஸ்ருதி திருமணத்திற்கு மீனாதான் கையெழுத்து போட்டு கொடுக்கிறார். இதனால் இனி நிறைய மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் முத்து என்ன செய்யப் போகிறார் என்றும், இந்த பிரச்சனையில் விஜயா மீனாவை தான் குற்றவாளி ஆக்குவார் என்பதால் இது பற்றிய பேச்சு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.
-
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
"குடும்ப வாழ்க்கை” மொத்த சர்ச்சைகளுக்கும் போல்டாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுகன்யா.. பாராட்டும் ரசிகர்கள் -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
திரிஷா பிரண்ட் நடிகை சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க! எச்சரித்த விஜய் சேதுபதி! பின்னணி காரணம் -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
"29 வயசுல உங்களுக்கு இந்த ஃபீலிங் வந்திருக்கா? Netflix-ல் டிரெண்டாகும் ‘29’ படம் ஏன் இளைஞர்களின் மனசை கலக்குது!" -
மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி -
100ஐ தொடாமல் போன சூப்பர் குட் பிலிம்ஸ் RB சௌத்ரி.. காற்றில் கரைந்த ரியல் ஜென்டில்மேனின் கடைசி ஆசை












Click it and Unblock the Notifications