சிறகடிக்க ஆசை: சத்யாவுக்காக ஜெயிலுக்கு போகும் முத்து.. மீனா எடுத்த முடிவு.. சிக்கலில் சிக்கும் மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் ஒன்பதாம் தேதிக்கான எபிசோடில் சத்யா படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக முத்து குடித்தது போல நடித்து ஜெயிலுக்கு போகிறார். முத்துவை ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காக மீனா ஸ்ருதி இடம் உதவி கேட்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜிடம் லாட்டரி டிக்கெட்டில் பணம் கிடைத்ததும் பொருள் வாங்குறேன் என்று சொன்ன நபர் வந்து எனக்கு இப்போ 25 கோடி லாட்டரி டிக்கெட் கிடைச்சிருக்கு ஆனா இனி உன் கடையில் நான் பொருள் வாங்க மாட்டேன். முதலில் ஒருத்தங்க சொன்னா அதை நம்பணும் என்று டயலாக் பேசிவிட்டு கிளம்பி போகிறார்.

அந்த நேரத்தில் ஒரு நபர் வந்து என் பிரண்ட் அமெரிக்காவில் இருக்கான் அவனுக்கு நிறைய பிரான்ச் தேவைப்படுகிறது. அதில் நீங்க ஜாயின் பண்ணிட்டா உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று சொல்ல, மனோஜ் இது நல்ல ஐடியாவே இருக்கே என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் இரவு முத்து எல்லோரும் தூங்கிய பிறகு வீட்டிற்கு சரக்கு பாட்டில் வாங்கிக் கொண்டு வருகிறார்.
அதை பார்த்த மீனா கோபமாக இத்தனை நாளா வெளியே குடிச்சிட்டு இருந்தீங்க இப்ப வீட்டுக்குள்ளே குடிக்க வந்துட்டீங்களா என்று கத்த முத்து மீனாவின் வாயை மூடி இது சத்யாவின் பிரின்சிபல் மனசை மாற்றுவதற்காக நாம ஒரு டிராமா போடணும் அதுக்காகத்தான் இதை வாங்கிட்டு வந்தேன். இது நிஜமான சரக்கு கிடையாது என்று சொன்னதும் மீனா அமைதி ஆகிறார்.
பிறகு அடுத்த நாள் என்ன செய்யலாம் என்று ஐடியாவை முத்து கொடுக்க மீனா இதைப்பற்றி சத்யாவிடம் சொல்லி விடுவோம் என்று சொல்ல, வேண்டாம் அவன்கிட்ட சொன்னா அவன் ஓவரா சீன் போட்டு மாட்டிக்குவான். அதனால அவனுக்கு தெரிய வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.

மறுநாள் முத்து சொன்னது போலவே முத்துவும் மீனாவும் பிரின்ஸ்பல் வரும் நேரம் பார்த்து கரெக்ட்டா சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் அங்கு வந்த சத்யா கொஞ்ச நாளா திருந்தி இருந்தீங்க என்று பார்த்தா இப்போ எங்க அக்காவை அடிக்கிறீங்க என்று பிரச்சனை செய்கிறார். அதை பிரின்ஸ்பல் பார்த்து நீ சத்யா தானே எதுக்காக உங்க அக்காவை இந்த மாதிரி ஆளுகளுக்கு கல்யாணம் பண்ணி தரீங்க என்று சொல்ல, அதற்கு சத்யா எங்க குடும்ப சூழ்நிலை அப்படி ஆயிடுச்சு சார், அப்பா இறந்துட்டாரு அதனால இவருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க வேண்டிய நிலைமை ஆயிடுச்சு என்று சொல்கிறார்.
உடனே பிரின்ஸ்பல் போலீசுக்கு போன் பண்ணுகிறார். அப்போது முத்து வேண்டும் என்று பிரின்ஸ்பலிடம் வம்பு இழுக்கிறார். பிரின்சிபல் இந்த மாதிரி இருக்கிற குடும்பத்திலிருந்து நீ நல்லா படிக்கணும். நாளையிலிருந்து காலேஜுக்கு வா எக்ஸாம் எழுது என்று சொன்னதும் மீனாவும், முத்துவும் சசந்தோஷப்படுகின்றனர்.
அந்த நேரத்தில் போலீஸ் அங்கு வந்து விடுகிறது. அதற்கு பிரின்ஸ்பல் இந்த ஆளு தான் குடிச்சிட்டு பொண்டாட்டிய போட்டு அடிக்கிறான். இவனை கூட்டிட்டு போங்க என்று சொல்ல, மீனா அதிர்ச்சி அடைகிறார். அப்போது மீனா எவ்வளவு சொல்லியும் போலீஸ் முத்துவை அரெஸ்ட் பண்ணி ஜிப்பில் ஏற்றுகின்றனர். சத்யா விடுக்கா போகட்டும் என்று சொல்கிறார்.

அதற்கு மீனா எல்லாம் உன்னால தாண்டா, உனக்காகத்தான் நாங்க நாடகம் போட்டோம். ஆனா இப்படி ஆயிடுச்சு என்று சொல்ல, அதற்கு பிறகு உண்மையை புரிந்ததும் சத்யா அக்கா ஸ்டேஷனில் பேசிக்கலாம் என்று ஸ்டேஷன்க்கு போகின்றனர். அங்கு முத்துவிடம் பேச முத்து எல்லாம் நல்லபடியாக நடந்தால் சரிதான். நான் தான் காலேஜுக்கு போய் படிக்கல. இனி எனக்கு கேஸ் ஆனாலும் பிரச்சனை இல்ல நீயாவது நல்லா படிச்சு குடும்பத்தை பார்த்துக்கொள் என்று சொல்கிறார்.
அப்போது மீனா போலீஸ்காரரிடம் நாங்கள் நடிச்சோம் என்று உண்மையை சொல்ல, அதற்கு அவர் என்னால் எதுவும் செய்ய முடியாது இன்ஸ்பெக்டர் தான் உங்க புருஷனை கைது பண்ணி இருக்காங்க. அவங்க கிட்ட தான் நீங்க பேசணும் என்று சொல்லிவிடுகிறார். பிறகு மீனா ஸ்ருதிக்கு போன் போட்டு முத்து ஜெயிலில் இருக்கும் விஷயத்தை சொல்லி, நீங்கதான் இப்போ எனக்கு உதவி செய்யணும் என்று சொல்ல, ஸ்ருதி அதைக் கேட்டு அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications