Sirakadikka Aasai Serial: பண விஷயத்தில் சிக்கிய ரோகிணி! ரசிகர்கள் எதிர்பார்த்ததுதான் நடந்தது! முத்து கொடுத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை, ஆகஸ்ட் 16, 2025: விஜய் தொலைக்காட்சியில், ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலான 'சிறகடிக்க ஆசை'யில், இன்று, விஜயா, யோகா பிசினஸைத் தொடங்க, திட்டமிடும் நிலையில், மனோஜ் நடத்தி வரும் ஷோரூமில், ரோகிணியின் திருட்டு, வெளிச்சத்திற்கு வர, முத்து, தனது அண்ணன் மீது, கோபம் கொள்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

விஜயாவின் புதிய தொழில்

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், வி‌ஜயா டான்ஸ் கிளாஸ் மூடி விட்டதால், அடுத்து, யோகா கிளாஸ் ஆரம்பிக்கலாம் என, விஜயா, பார்வதியுடன் சேர்ந்து, திட்டமிடுகிறார். அப்போது, சிந்தாமணி, அங்கு வர, விஜயா, தன்னுடைய கடைசி மருமகள் ஸ்ருதி தான் விதவிதமா போட்டோ எடுப்பா அவளைவைத்து, 'போட்டோ' எடுத்து தருவதாகச் சொல்ல, சிந்தாமணி, 'போஸ்டர்' வேலையை, தான் பார்த்துக் கொள்வதாக, சொல்கிறார்.

அண்ணாமலை - ரவி கிண்டல்

விஜயா, யோகா 'டிரெஸை' போட்டுக்கொண்டு, ஸ்ருதியை அழைத்து, 'போட்டோ' எடுக்கச் சொல்கிறார். விதவிதமாக, 'போஸ்' கொடுக்க, அதை, அண்ணாமலை, சிரித்துக்கொண்டே, பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்போது, ரவி வர, "என்னம்மா, சாமியாரா மாறிட்டாங்களா?" எனக் கேட்க, விஜயா, கடுப்பாகிறார்.

முத்துவின் கோபம்

முத்து, தனது ஷெட்டில், நண்பர்களுடன் இருக்கிறார். அப்போது, மீனா, தனது பூ கட்டும் பெண்களுடன், அங்கு வர, ஒரு பிரச்சனை என்று, சொல்கிறார். மனோஜ் ஷோரூமில், சீட்டு கட்டி இருக்கிறார்கள். இப்போது, திடீரென, இவங்க பையனுக்கு, அடிபட்டுடுச்சு. அதற்கு, சீட்டை கேன்சல் செய்து, கேட்டால், ஓவரா பேசி இருக்காங்க. உடனே, முத்து, கோபமாகி, அவர்களுடன், மனோஜ் ஷோரூமிற்கு, அழைத்து செல்கிறார்.

முத்துவின் ஆவேசம்

ஷோரூமிற்கு வரும் முத்து, ராஜாவை இழுத்து அடிக்கப் போக, மனோஜ், ரோகிணி, வந்து, "என்ன ரவுடித்தனம் செஞ்சிட்டு இருக்கீங்க?" எனக் கேட்கிறார்கள். மனோஜ், "அவன் சொன்னதுல, என்ன தப்பு? சீட்டு முடிஞ்சா தான், பொருளைத் தர முடியும். கம்பெனி பாலிசி," என்கிறார். முத்து, கடுப்பாகி, "அப்பா காசுல தானே, கடையை ஆரம்பிச்ச? அப்பாக்கிட்ட சொல்லவா?" எனக் கேட்க, மனோஜ், பெருமூச்சு விட்டு, "இப்போ என்ன, காசு வேண்டும், அதானே?" எனக் கூறி, பணத்தை எடுக்க, செல்கிறார்.

ரோகிணியின் திருட்டு

ரோகிணி, பின்னால் சென்று பார்க்க, கல்லாவில், கம்மியாக, பணம் இருக்கிறது. ரோகிணியிடம், 'லாக்கரில்' இருக்கும் பணத்தை எடுக்கச் சொல்ல, ஆனால், அவர், "வேண்டாம். நான் சமாளிச்சிக்கிறேன், வா," என, அந்தப் பெண்களிடம் சென்று, "நாளைக்கு வாங்க," என்கிறார். மீனா, "அவங்களே, அவசரம்னு கேக்கிறாங்க. என்ன, மாத்தி மாத்தி பேசுறீங்க?" எனக் கடுப்படிக்கிறார். மனோஜ், 'லாக்கரில்' சென்று திறந்து பார்க்க, அங்கு, பணம் இல்லாமல் இருக்க, அதிர்ச்சி அடைகிறார்.

ரோகிணியிடம் சொல்ல, அவர், தன்னுடைய தப்பை மறைக்க, அங்கு வேலை செய்யும், ராஜா, ராணி மீது, அந்தப் பழியைப் போடுகிறார். மனோஜும், யோசிக்காமல், அவர்கள் மேல், பழியைப் போட, அவர்களோ, "நாங்கள் இல்லை," என்கின்றனர். 'சிசிடிவி' கேமராவும், 'கட்' செய்யப்பட்டு இருக்க, மனோஜ், "உங்களுக்கு, ஒரு வாரம் டைம். அதற்குள், காசு வரணும்," என்கிறார். முத்து, போலீஸில், புகார் கொடுக்கலாம் என, போனை எடுக்க, ரோகிணி, "இப்போதான், ஷோரூம், 'பிக்கப்' ஆகி இருக்க, இது தெரிஞ்சா, இன்னும், பிரச்சனை ஆகும்," என, முத்து, நினைப்பதாக, பேச, மீனா, கடுப்பாகி, முத்துவிடம், "வேண்டாம்," என்கிறார்.

பின்னர், அந்தப் பெண்களின் காசை, 'அக்கவுண்டில்' அனுப்ப, அவர்கள், வாங்கி கொண்டு, செல்கின்றனர். "அப்பா காசில், பணத்தை திருடிதானே, ஷோரூம் ஆரம்பிச்ச? அதான், கர்மா, உன்னை, சுத்தி, சுத்தி, அடிக்கிது. வீட்டுக்கு வா, வச்சிக்கிறேன்," என, திட்டிவிட்டு, முத்து, செல்கிறார். ஏற்கனவே ரோகிணி பற்றிய ஒவ்வொரு உண்மைகளும் குடும்பத்திற்கு தெரிய வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது மீண்டும் பணத்தை எடுத்து இருக்கும் இசையும் குடும்பத்திற்கு தெரிய வந்தால் அவருடைய நிலைமை அவ்வளவுதான்.

இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை இந்த சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக போகிறது. அதில் ரோகிணிக்கு பிரச்சனை வருவது போலத்தான் சம்பவம் நடக்கப்போகிறது அதாவது ரோகிணியின் அம்மா விஜயாவிடம் சிக்குகிறார். அதே நேரத்தில் ரோகிணி தன்னுடைய மகனோடு வித்யா வீட்டில் இருக்கும் நேரத்தில் அன்று மீனா வருகிறார். அப்போது ரோகிணி கிரிஷை கூட்டிக்கொண்டு ஒரு ரூமில் ஒளிந்திருக்கும் நேரத்தில் அங்கிருக்கும் கிரிஷ் செருப்பை மீனா பார்த்திருக்கிறார் இதனால் நாளை எபிசோடு தரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+