சிறகடிக்க ஆசை: க்ரிஷ் உங்க அண்ணன் பையன் தான்.. மீனா கண்டுபிடித்த உண்மை.. சிக்கிய ரோகிணி!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி மகன் கிரிஷ் பற்றிய உண்மைகளை மீனா கண்டுபிடிக்கிறார். க்ரிஷ் படிக்கும் ஸ்கூலில் பேரன்ஸ் மீட்டிங் நடக்கும் நிலையில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்திருக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்போது மாட்டுவார் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அதற்கு ஒவ்வொரு வாரமும் காத்திருக்கும் ரசிகர்களுக்கு சில எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு இயக்குனர் ஏமாற்றத்தை கொடுத்து விடுகிறார். அதுபோலத்தான் தான் இப்போது வெளியான ப்ரோமோவிலும் பரபரப்பான காட்சிகள் காட்டப்படுகிறது.

அதாவது ரோகிணியின் மகன் க்ரிஷ் படிக்கும் ஸ்கூலில் பேரன்ட்ஸ் மீட்டிங் நடைபெறுவதால் கண்டிப்பாக நீ கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள் என்று ரோகிணியின் அம்மா ரோகிணிக்கு போன் பண்ணி சொல்கிறார். அதற்கு சரி வரேன் என்று ரோகிணியும் சொல்லி இருக்கிறார்.
விஜய் டிவி சீரியல் கதாநாயகனுக்கு தலையில் நடந்த விபரீதம்..இப்படியா பண்ணுவாங்க? வெளியான வீடியோ
அதே ஸ்கூலில் வேலை பார்க்கும் அண்ணாமலை ஸ்கூலுக்கு அவசரமாக கிளம்புகிறார். அப்போது முத்து என்னாச்சுப்பா ஏன் சீக்கிரமா போற என்று கேட்க, அதற்கு அண்ணாமலை இன்னைக்கு ஸ்கூலில் பேரன்ஸ் மீட்டிங். அதனால என்னை வர சொல்லி இருக்காங்க என்று சொல்கிறார்.
அதற்கு முத்து இருப்பா நானும் அந்த பக்கமாக தான் போறேன் நானே உன்னை கொண்டு விடுறேன் என்று சொல்லி கூட்டிக்கொண்டு வருகிறார். பிறகு அண்ணாமலையை ஸ்கூலில் இறக்கி விடுகிறார். அந்த நேரத்தில் க்ரிஷ் அவருடைய பாட்டியோடு ஸ்கூலுக்கு வருகிறார். க்ரிஷை பார்த்ததும் மீனாவும் முத்துவும் க்ரிஷிடம் போய் பேசுகிறார்கள்.

அப்போது மீனா க்ரிஷிடம் எப்படி இருக்கடா என்று பேசியபடி அவருடைய பாட்டியிடம் என்னம்மா நீங்க ஒரு போன் கூட பண்ணல? எங்களையும் போன் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டீங்க என்று கேட்க, எப்படியாவது இவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டுமே என்று ரோகிணியின் அம்மா க்ரிஷ் உடைய மிஸ் என்கிட்ட பேசணும்னு சொன்னாங்க இப்ப வரேன் என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
சிறகடிக்க ஆசை: உண்மையை புரிந்துகொள்ளும் அருண்.. மீனாவிடம் முத்து சொன்ன விஷயம்.. ஸ்ருதி செய்த செயல்
அந்த நேரத்தில் மீனா முத்துவிடம் எனக்கு ஒன்னு தோணுது க்ரிஷ் அப்பா உங்க அண்ணன் தான் என்று சொன்னதும் முத்து அதிர்ச்சி ஆகிறார். அப்போ அம்மா யாரு என்று கேட்க, அது அந்த ஜீவா என்று கடைசியில் காமெடி செய்கிறார். எப்படியோ ஓரளவுக்கு கண்டுபிடித்து இருக்கும் மீனாவும் முத்துவும் கடைசியில் ரோகிணியிடம் ஏதாவது ஒரு விதத்தில் அவமானப்பட போகிறார்கள் அல்லது திட்டு வாங்க போகிறார்கள் என்று தான் தெரிகிறது.

ரசிகர்கள் நினைத்தது ரோகிணி மாட்ட வேண்டும் என்று ஆனால் இப்போ மனோஜ்க்கு தான் புது சிக்கல் வரப்போகிறது என்று தெரிகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த ப்ரோமோவுக்கு கீழே ரசிகர்கள் மீனாவை திட்டி வருகிறார்கள்.

அப்படியே கதையை திருப்பி விட்டுட்டீங்களே மீனா, இதை பார்த்து முத்து வேற ஷாக் ஆகுறாரு.. அதை பார்த்தா எங்களுக்கு காமெடியா இருக்கிறது. சிரிக்க தான் தோணுகிறது. நடப்பது ஒன்னு நீங்க புரிஞ்சிக்கிறது ஒன்று கலாய்த்து வருகிறார்கள்.
இந்த ப்ரோமோ குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க? ரோகிணி இந்த முறை மாட்ட போறாங்க என்று நினைக்கிறீர்களா? இல்ல மீனா கண்டுபிடித்த உண்மையை நினைத்து சிரிக்கிறீங்களா?
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications