Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: உண்மையை புரிந்துகொள்ளும் அருண்.. மீனாவிடம் முத்து சொன்ன விஷயம்.. ஸ்ருதி செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 20ஆம் தேதிக்கான எபிசோடில் சீதா பேசுவதை பார்த்து அருணுக்கு சீதா மீது காதல் வருகிறது. அதே நேரத்தில் அருணை மாட்டி விட்டது குறித்து முத்து மீனாவிடம் சொல்ல, மீனா முத்துவை திட்டுகிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அருண் வீட்டிற்கு சீதா சென்றிருக்கிறார், அங்கு அருண் சோகமாக இருக்கிறார். அது பற்றி சீதா என்னவென்று விசாரிக்கிறார். அப்போது அருண் தன்னை சஸ்பெண்ட் செய்த விஷயத்தை சொல்கிறார். எதற்காக என்று சீதா விசாரிக்கும் போது நான் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று மெடிக்கலுக்கு மருந்து வாங்கப் போனேன். அப்போ டாக்டர் போன் பண்ணுனார்.

Siragadikka aasai serial vijay tv

அதனால் பேசிக்கொண்டே ஹெல்மெட் போடாம போயிட்டேன். அதை ஒரு ரவுடி வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் போட்டு இருக்கிறான் என்று சொல்ல, நீங்க ரூல்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ பண்ணுவிங்களே நீங்களே இப்படி போலாமா என்று கேட்கிறார். அப்போது அருண் அம்மா உனக்கு மனசு எவ்வளவு கஷ்டப்பட்டது என்ற எனக்கு இப்போ புரியுது என்று அருணுக்கு ஆறுதல் சொல்கிறார்.

சிறகடிக்க ஆசை: மீனாவிடம் வித்யா சொன்ன ரகசியம்! முத்து செய்த செயல்! கோபத்தில் ரோகிணி
அப்போது சீதா இதையே நல்லது என்று நினைத்துக்கோங்க. உங்களுக்கு அம்மாவோட இருக்க முடியல என்று பீல் பண்ணுனீங்களே இந்த மூன்று நாள் அம்மா கூட இருந்து அவங்களை நல்லா கவனிச்சுக்கோங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அப்போது சீதா போன பிறகு சீதாவை பற்றி அருண் யோசித்து கொண்டு இருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

மறுபக்கத்தில் முத்து வீட்டிற்கு வந்து மீனாவிடம் ஸ்வீட் கேட்கிறார். என்ன விஷயம் என்று மீனா கேட்டதும் நடந்த விஷயத்தை முத்து சொல்ல, மீனா நல்லவேளை ஸ்வீட் பண்ணல என்று சொல்கிறார். ஏன் அப்படி சொல்ற என்று கேட்க அதற்கு அவர் அவசரத்துல மெடிக்கல் ஷாப்புக்கு போய் இருக்காருன்னு சொல்றீங்க... என்ன பிரச்சனையோ என்னமோ? நீங்க எதுக்கு இப்படி பண்ணுறீங்க என்று திட்டுகிறார்.

அன்னைக்கு நானும் தான் நோ என்ட்ரில அவசரத்துல தான் போனேன் எனக்கு பைன் போடலையா? என்று முத்து கேட்டதும் அது அவர்களுடைய வேலை என்று மீனா சொல்கிறார். அப்போ நான் இதை பண்ணி இருக்க கூடாது என்று முத்து கோபப்படுகிறார். அவர்களுக்கு ஒரு சட்டம் நமக்கு ஒரு சட்டமா எனக்கு அதெல்லாம் தெரியாது என்று கத்தி பேசுகிறார்.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு எளிமையான திருமணம்.. கணவர் இவர் தானா? குவிந்த சீரியல் பிரபலங்கள்
அதற்கு மீனா புருஷன் தப்பு பண்ணுனா பொண்டாட்டி கண்டித்து தான் ஆகணும் என்று அன்பாக சொல்கிறார். மறுநாள் காலையில் முத்து மீனாவை அழைத்துக் கொண்டு கார் ஓட்ட சொல்லிக் கொடுக்கிறார். முதலில் உட்கார்ந்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுத்துக்கொண்டு இருக்கும்போது மீனா சரியாக கார் ஓட்டாததால் முத்து மீனாவிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஸ்ருதி போட்டோ எடுக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

பிறகு இதை நான் சோசியல் மீடியாவில் போட போறேன் இதை பார்த்து நிறைய பேர் வருவாங்க என்று ஸ்ருதி சொல்கிறார். மீனா கார் ஓட்டி கொண்டிருக்கும் போது ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்ய டென்ஷன் ஆகிய முத்து மீனாவை திட்டுகிறார். இதனால் கடுப்பான மீனா ஒருத்தருக்கு தெரியாத விஷயத்தை கற்றுக் கொடுக்கும் போது இப்படித்தான் திட்டுவீங்களா? என்கிட்ட இப்படி திட்டுறீங்கன்னா உங்ககிட்ட படிக்க வரவங்களையும் இப்படி தான திட்டுவிங்க? அவங்க எப்படி படிக்க வருவாங்க?

அன்னைக்கு நீங்க பூக்கட்ட வந்திங்க அப்போ எப்படி சொல்லி தந்தேன் என்று மீனா கேட்டதும் முத்து மீனுக்குட்டி.. செல்லம் கியரை அப்படி போடுங்க இப்படி போடுங்க என்று பேசுகிறார். அதைத் தொடர்ந்து டான்ஸ் கிளாஸில் விஜயா பார்வதி சிந்தாமணி மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

அங்கு ரதியும் அவருடைய காதலரும் வெயிட் மிஷின் வாங்கிக் கொண்டு வருகிறார்கள். அது பற்றி விஜயா விசாரிக்க டான்ஸ் கிளாஸில் எல்லோரும் உடலையும் ஆரோக்கியமாக வச்சிக்கணும் நாம எவ்வளவு வெயிட் இருக்கிறோம் என்று இதைப் தினமும் பார்த்தால் நம்முடைய ஆரோக்கியம் தெரிந்து விடும் என்று சொன்னதும் இது நல்ல ஐடியா என்று விஜயா பாராட்டுகிறார். பிறகு எல்லோரும் வெயிட் பார்க்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+