Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: மீனாவிடம் வித்யா சொன்ன ரகசியம்! முத்து செய்த செயல்! கோபத்தில் ரோகிணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 19ஆம் தேதிக்கான எபிசோடில் மீனாவிடம் வித்யா தன்னுடைய பர்சனல் விஷயங்கள் பேசுவதை பார்த்து ரோகிணி கோபப்படுகிறார். அதே நேரத்தில் முத்துவால் போலீஸ் ஆபீஸர் அருணுக்கு பிரச்சனை வருகிறது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பரசு அண்ணாமலை வீட்டிற்கு வந்து தன்னுடைய மகளுக்கு கல்யாணம் முடிவான விஷயத்தை சொல்கிறார். அதோடு முத்துவும் மீனாவும் இல்லனா இது நடந்திருக்காது இவங்க வயசுல சின்னவங்களாக இருந்தாலும் மனசுல ரொம்ப பெரியவங்க என்று பெருமையாக பேச விஜயாவும், ரோகிணியும் கடுப்பாகிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

அப்போது விஜயா இவங்க புரோக்கர் வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களா? என்று கிண்டல் செய்கிறார். அதற்கு முத்து நாங்க ரெண்டு பேரை சேர்த்து வைக்கணும் என்று முடிவு செய்தோம். ஆனால் சிலர் பிரித்து வைக்க நினைக்கிறாங்க என்று சொன்னதும் விஜயா கோபப்படுகிறார். பிறகு பரசு எங்களுக்கு எவ்வளவு சொந்தக்காரங்க இருந்தாலும் நீங்க தான் முக்கியம் நீங்கதான் குடும்பத்தோட வந்துடனும் என்று சொல்கிறார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா பகிர்ந்த போட்டோஸ்..குவியும் வாழ்த்து
முத்துவிடம் நீ தான்ப்பா முன்னாடி நின்னு நடத்தணும் என்று சொல்கிறார். அப்போது மீனா நான் டெக்ரேசன் வேலை எல்லாம் பார்த்துகிறேன் என்று சொல்ல, முத்து டிராவல்ஸ் பிரச்சனையை நான் பார்த்துகிறேன் என் பிரண்டுகளோட கார் இருக்கு என்று சொல்கிறார். அதோடு மேக்கப் போடவும் ஆளு இருக்கு என்று ரோகிணியை பற்றி சொல்ல ரோகிணி முதலில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

பிறகு குடும்பத்தில் எல்லோரும் சொன்னதால் சம்மதம் சொல்கிறார். ரவி நீங்க கேட்டரிங் ஆளை வச்சிட்டீங்கன்னு சொன்னாங்க அதனால உங்களுக்கு நான் ஒரு ஸ்வீட் பண்ணிக் கொடுக்கிறேன் என்று சொன்னதும் விஜயா மொத்தத்துல எங்க குடும்பத்துல இருந்து ஃப்ரீயா கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க போல என்று நக்கல் செய்கிறார்.

பிறகு அண்ணாமலை மாப்பிள்ளை வீட்டை பற்றி விசாரிக்க மாப்பிளையோட மாமா ரொம்ப நல்லவரா இருக்காரு கறிக்கடை வச்சிருக்காரு என்று பெருமையாக பரசு பேசினதும் ஞாயிற்றுக்கிழமை ஆனா அப்போ கறி ப்ரீயா வந்துரும் என்று அதற்கும் விஜயா நக்கல் செய்கிறார். அதனால் கோபமான அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார்.

விஜய் டிவி சீரியல் கதாநாயகனுக்கு தலையில் நடந்த விபரீதம்..இப்படியா பண்ணுவாங்க? வெளியான வீடியோ
அதை தொடர்ந்து மனோஜ் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தான் பணம் கொடுத்து ஏமாந்த நபரை பிடிச்சாச்சா என்று விசாரிக்கிறார். ஆனால் திமிராக அவர் பேசுவதால் போலீசார் அவரிடம் திமிராக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு சீக்கிரமா கண்டுபிடிக்கிறோம் போ என்று மனோஜை அனுப்பி வைக்கிறார்கள். அதை தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கான்ஸ்டபிள் அருண் வருகிறார்.

Siragadikka aasai serial vijay tv

கொஞ்ச நேரத்தில் இன்ஸ்பெக்டர் வருகிறார். அவர் ஏன் இப்படி பண்ணி வச்சிருக்க. நீ ஹெல்மெட் போடாம செல்போனில் பேசியபடி பைக்கில் போனதை வீடியோ எடுத்து யாரோ அப்லோடு பண்ணி இருக்காங்க. அது ட்ரெண்ட் ஆயிட்டு இருக்கு உடனே மூணு நாள் டிஸ்மிஸ் பண்ணறேன் என்று சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சியான அருண் இதை யாரு பண்ணி இருப்பாங்கன்னு எனக்கு தெரியும்.

என்னிடம் பிரச்சனை செய்தது அந்த டாக்சி டிரைவர் தான் என்று சொல்ல, நீ அவன் காரை தூக்கின.. இப்போ சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும் அவன் வேலையை ஆரம்பிச்சுட்டான். சரி மூணு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வா என்று அனுப்பி வைக்கிறார். அதை தொடர்ந்து மீனா பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது அங்கு வித்யாவும் வருகிறார்.

Siragadikka aasai serial vijay tv

வித்யா மீனாவை நிறுத்தி நீங்க சொன்ன மாதிரி அவரு கிட்ட போனை வாங்கிட்டேன். அதுல எதுவுமே இல்லை என்று சொன்னதும் அப்போ அவர் நல்லவரா தான் தெரியுறாரு நீங்க பேசி பாருங்க என்று மீனா சொல்ல, அதற்கு வித்யா உடனே எப்படி பேச முடியும் என்று கேட்கிறார். அப்போ நீங்க உங்களுக்கு பிடிச்ச 10 விஷயத்தை ஒரு பேப்பரில் எழுதுங்க, அதுபோல அவருக்கு பிடித்த பத்து விஷயத்தையும் எழுதி கொண்டுட்டு வர சொல்லுங்க உங்கள் இருவருக்கும் எவ்வளவு பொருத்தம் இருக்கிறது என்று அதிலிருந்து பார்த்துக் கொள்ளலாம் என்று ஐடியா கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதை அந்த நேரத்தில் அந்த பக்கமாக வந்த ரோகிணி பார்த்து அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். பிறகு மீனா கிளம்பியதும் வித்யாவிடம் மீனா கிட்ட ரொம்ப க்ளோசா பேசிட்டு இருக்குற என்று கோபப்படுகிறார். அதைத்தொடர்ந்து சீதா அருண் வீட்டிற்கு வருகிறார். அங்கு அவர் சாப்பிடாமல் இருப்பதால் அவருடைய அம்மாவும் சாப்பிடாமல் இருக்கிறார். இதனால் அருணை கூப்பிட்டு சீதா விசாரிக்கிறார். அப்போது தன்னை மூணு நாள் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள் என்று அவர் சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+