சிறகடிக்க ஆசை சீரியல் ரோகிணியின் நிஜ கணவர் இந்த பிரபலமா? இவ்வளவு பெரிய மகன் வேற இருக்காரா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகையின் பெயர் சல்மா அருண். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருக்கிறது. அது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
விஜய் டிவியில் டிஆர்பி யில் முதல் இடத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் இப்போது கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் இப்போது இந்த சீரியலில் அதிகமாக பேசப்படும் நபராக ரோகிணி இருக்கிறார்.

அவர் குறித்து இணையத்தில் அதிகமான ரசிகர்கள் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ரோகிணி குறித்து முழு தகவல்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ரோகிணியாக நடிக்கும் நடிகையின் நிஜ பெயர் சல்மா அருண். இவர் சீரியலில் ரோகினியாக நடித்துக் கொண்டிருக்கும் கல்யாணியாக இருந்தாலும் இவர் நிஜத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவராம்.
அதோடு பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தானாம். 1993 டிசம்பர் எட்டாம் தேதி தான் இவர் பிறந்திருக்கிறார். அதற்கு பிறகு படிப்பது எல்லாமே சென்னையில் தான் முடித்து இருக்கிறார். அப்போதே இவர் மாடலிங் பண்ண வேண்டும் என்று அதற்காக ட்ரை பண்ணி இருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு சில விளம்பரங்கள் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதுவும் ஆரம்பமே பெரிய பெரிய பிராண்ட் கம்பெனி விளம்பரங்களில் தான் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இவருக்கு அரசாங்க விளம்பரத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் இருந்து தான் சிவகார்த்திகேயன் உடன் இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சினிமாவில் துணை கேரக்டரில் நடித்திருந்தாலும் அதற்கு பிறகு இவருக்கு நிறைய காண்டாக்ட் சினிமா துறையில் கிடைக்க அதன் மூலம் இவர் பல பட வாய்ப்புகளை தேட ஆரம்பித்திருக்கிறார்.
அந்த நேரத்தில் தான் இவருக்கு நம்ம வீட்டு பொண்ணு என்ற விஜய் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுதான் அவருக்கு முதல் சீரியலாக அமைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அந்த சீரியலில் கொஞ்ச நாள் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு பாரதிகண்ணம்மா 1 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிலிருந்து ராஜா ராணி சீரியலிலும் கதாநாயகனுக்கு எதிராக சமையல் போட்டிக்கு கலந்து கொள்ளும் கேரக்டர் கிடைத்திருக்கிறது.
வந்த வாய்ப்புகள் எல்லாம் சின்ன சின்ன கேரக்டராக இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை விடாமல் பயன்படுத்திக் கொண்டிருந்த இவருக்கு ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் கதாநாயகிக்கு அண்ணியாக வில்லி கேரக்டர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த கேரக்டரிலும் இவர் விடாமல் செய்து கொண்டிருந்த போதுதான் இவருக்கு விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த சீரியலில் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்தாலும் இதுவும் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதுவும் ரோகினி இப்போது எப்போது வீட்டில் மாட்டுவார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏற்கனவே மனோஜ் வீட்டில் மாட்டும் போது ரோகிணி என்ன முடிவு எடுப்பார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தாலும் இவருடைய நடிப்பை பார்த்து உச்சி கொட்டியவர்கள் தான் ஏராளம். இந்த நிலையில் ரோகிணியாக நடிக்கும் நடிகை சல்மா அருணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டதாம்.
ஒரு மகனும் இருக்கிறாராம். இந்த நிலையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவர் குறித்து உருக்கமான பதிவுகளை சல்மா போட்டு இருக்கிறார். அதில் முதல் முறையாக தன்னுடைய கணவரின் புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய கணவர் அருணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறார்.

அதோடு என் வாழ்வின் ஒரு பகுதியாக அருண் இருப்பதற்கு நன்றி, இது ஒரு அற்புதமான நாள், 10 வருடங்கள் காதல், சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறோம். அதுபோல நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று உனக்கு தெரியும்... நீங்கள் சிறந்த கணவர் மற்றும் சிறந்த தந்தை. என் வாழ்க்கையில் நடந்த மிகச்சிறந்த விஷயம் நீங்கள்தான் என்று தன்னுடைய கணவர் மற்றும் குழந்தை புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications