சிறகடிக்க ஆசை: பணத்தை திருடி மாட்டிக் கொண்ட மனோஜ்.. மீனா கேட்ட கேள்வி.. இனி ரோகிணி எடுக்கும் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலின் செப்டம்பர் 15ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

இது ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடியது மனோஜ் தான் என்ற ரகசியம் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது.

siragadikka aasai serial September 15th promo and Episode Highlights

அதைத்தொடர்ந்து தன் குடும்பத்தை அவமானப்படுத்திய விஜயாவிடம் மீனா நான் கேள்வி மேல் கேள்வி கேட்க விஜயா பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா, சத்யா தான் பணத்தை எடுத்துட்டு போய் இருப்பான் என்று பழியை தூக்கி போட்டு மீனா குடும்பத்தை பற்றி அவமானப்படுத்தி பேசிக் கொண்டிருக்க அதற்கு முத்து இல்லை மனோஜ் தான் எடுத்திருப்பான். அவனுடைய கணக்கில் 28 லட்சமா சேர்த்துக்கோங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

siragadikka aasai serial September 15th promo and Episode Highlights

அதற்கு ரோகிணி அவர் வேலைக்கு போறாரு அவர்தான் சம்பாதிக்கிறாரே. அவர் எதற்காக சொந்த வீட்டில் பணத்தை எடுக்கப் போகிறார் என்று கோபமாக கேள்வி கேட்க, அதற்கு முத்து 27 லட்சமும் எங்க வீட்டில் இருந்து தான் எடுத்துட்டு போனான் என்று பதிலடி கொடுக்கிறார்.

அது தொடர்ந்து விஜயா மீனாவின் குடும்பத்திற்கு போன் செய்து இன்னும் அரை மணி நேரத்துல ஒரு லட்சம் ரூபாய் பணம் என் கைக்கு வரணும் இல்லன்னா போலீஸ் வரும் என்று மிரட்ட அதற்கு மீனாவின் குடும்பம் நாங்க பணத்தை எடுக்கல என்று சொல்வதற்காக அங்கிருந்து கிளம்பி விஜயா வீட்டிற்கு வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த மீனா குடும்பத்தை வாசலிலே நிற்க வைத்து விஜயா அவமானப்படுத்தி பணத்தைக் கேட்க, அதற்கு முத்துவும் அண்ணாமலையும் விஜயாவை அடக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் விஜயா நான் எதுக்கு அமைதியா இருக்கணும். காணாமல் போனது என்னுடைய பணம் இப்போ பணம் வந்தாகணும் இல்லனா போலீசுக்கு போன் பண்ணுவேன் என்று மிரட்டி மனோஜை போலீசுக்கு போன் பண்ண சொல்கிறார்.

siragadikka aasai serial September 15th promo and Episode Highlights

அதற்கு மனோஜ் போலீஸ் எல்லாம் எதுக்கு என்று பயந்தபடியே கேட்க, மீனாவின் குடும்பத்தினர் நாங்க சத்தியமா பணத்தை எடுக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதை விஜயா நம்ப மறுக்கிறார். பைக் திருடுனவன் இதையும் திருடி இருக்க மாட்டானா? என்று சத்யாவை அவமானப்படுத்தி பேசுகிறார்.

அப்போது ரோகிணி சத்யாவிடம் அது மாமா கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் எடுத்து இருந்தா கொடுத்துடுப்பா என்று சொல்ல, முத்து உன் புருஷன் தான் எடுத்து இருப்பான் என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு விஜயா போலீசுக்கு போன் பண்ண சொல்லிக் கொண்டிருக்கும்போது வீட்டிற்கு ஒரு நபர் வருகிறார். அவர் மனோஜுடன் பிளைட் டிக்கெட் மற்றும் 10% டிஸ்கவுண்ட் கொடுத்து இருக்காங்க என்று சொல்லி மீதமுள்ள 8000 பணத்தையும் அவர் கொண்டு வந்த அதே கவரோடு வைத்து கொடுக்கிறார்.

siragadikka aasai serial September 15th promo and Episode Highlights

அப்போது அந்த கவரை பார்த்த முத்து இது அப்பா கொடுத்த கவர் என்பதை தெரிந்து கொள்கிறார். அப்போது மனோஜ் டிக்கெட்டையும் அந்த கவரை வாங்கிக் கொண்டு நைஸ் ஆக ரூமுக்குள் செல்ல முயற்சி செய்த, அதை தடுத்த முத்து நான் பிளைட் டிக்கெட்டை பார்த்ததே இல்ல குடுன்னு சொல்லி அந்த கவரை காட்டி அப்பா இது ஞாபகம் இருக்க? நீங்க அம்மாகிட்ட கொடுத்த அதே கவர்.. மனோஜ் மாட்டிகிட்டான். ஆடு சிக்கிடுச்சு என்று ஆடு போல கத்தா விஜயா, ரோகினி மற்றும் மனோஜ் மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அவர்கள் மூவரையும் முத்து கலாய்த்து கொண்டிருக்கிறான். அப்போது மீனா இப்ப என்ன சொல்றீங்க அத்தை? போலீசுக்கு போன் பண்ணனும்னு சொன்னிங்களே இப்ப பண்ணலாமா? என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்க என் குடும்பத்தை திருட்டு குடும்பம் என்று சொன்னிங்களே இப்ப யாரு திருடுனதுன்னு தெரிஞ்சிருச்சா என்று மீனாவின் அம்மா சீதா கேள்வி கேட்கிறார்.

அப்போது சத்யா நான் தெரியாம பைக் திருடனதுக்காக என் அப்பாவை இழந்துட்டேன். இனி செத்தாலும் அந்த மாதிரி ஒரு வேலையை செய்யக்கூடாதுன்னு இருக்கேன் என்று கண்ணீரோடு சொல்கிறார். அப்போது அண்ணாமலை இதுக்கு தான் பொறுமையா இருன்னு சொன்னேன் என்று விஜயாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+