சிறகடிக்க ஆசை: திருடிய மனோஜ் மாட்டியதும் விஜயா சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 16ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
இதில் மனோஜ் தான் வீட்டில் இருந்த பணத்தை திருடி இருக்கிறார் என்ற உண்மை தெரிந்ததும் முத்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

அதற்கு விஜயா சற்றும் எதிர்பார்க்காத பதிலை சொல்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் கையும் களவுமாக பணத்தை எடுத்தது இவர்தான் என்று சிக்க, அதற்கு மீனாவின் அம்மா முத்து என எல்லோரும் விஜயாவை திட்டுகின்றனர். அப்போது முத்து மனோஜ் ரோகினி விஜயா என எல்லாரையும் கலாய்த்து தள்ளுகிறார். அப்போது அவர்கள் பேச முடியாமல் தலைகுனிகின்றனர்.

உடனே விஜயா தலையில் அடித்துக் கொண்டு ஐயோ நான் தான் எல்லாத்தையும் மறந்துட்டேன். இந்த ஒத்த தலைவலியால எல்லாமே மறந்து போகுது என்று புலம்பியபடி நான்தான் மனோஜிடம் பணத்தை கொடுத்தேன். அதை மறந்தே போயிட்டேன். டேய் மனோஜ் நான் தானே கொடுத்தேன் நீயாவது சொல்லக்கூடாதா? தேவையில்லாம அந்த பையன் மேல சந்தேகப்பட்டுட்டேன் என்று டிராமா போடுகிறார்.
அதற்கு முத்து நல்லவேளை சாவித்திரி சிவாஜி கணேசன் எல்லோரும் செத்துப் போயிட்டாங்க. அவங்க எல்லாம் இருந்திருந்தா உங்க நடிப்பை பார்த்து என்ன ஆகி இருப்பாங்க என்று நக்கல் அடிக்கிறார். அப்போ அண்ணாமலை நீதான் இவன்கிட்ட பணத்தை கொடுத்தியா? என்று கேட்க விஜயா ஆமா என்று சொல்ல, தேவையில்லாம அந்த அப்பாவி பையனை கூப்பிட்டு வச்சி இப்படி அவமானபடுத்தி பேசிட்ட, தப்பு தானே? என்று சொல்ல, ஆமா என்னுடைய தப்புதான் நான் மறந்துட்டேன் என்று சொல்ல, அதற்கு தப்பு என்று ஒத்துக்கிட்டா சரியாயிடுமோ? அவகிட்ட மன்னிப்பு கேளு என்று அண்ணாமலை சொல்கிறார்.

அதற்கு வேறு வழி இல்லாமல் விஜயா எல்லாரிடமும் மன்னிப்பு கேட்க, எல்லோரும் வீட்டிற்கு கிளம்பி போகின்றனர். பிறகு மனோஜை தனி அறைக்குள் வைத்து பளார் பளார் என்று அடிக்கிறார். சொந்த வீட்டிலேயே திருடுற? அதுவும் என் பணத்தை, என்கிட்ட கேட்டு இருந்தா நானே கொடுத்து இருப்பேன் என்று கோபப்பட்டு பேசுகிறார். பிறகு முதலில் நீ ஒரு வேலையை தேடு அப்போ தான் இந்த மாதிரி எல்லாம் பிரச்சனை வராது என்று சொல்கிறார்.
அதோடு உன்னால அந்த ஒன்றும் இல்லாத குடும்பத்துக்கு முன்னாடி நான் அசிங்கப்பட்டு நின்னேன் என்று கோபப்படுகிறார். அதற்கு மனோஜ் தான் வேலை பார்த்ததற்கு சம்பளம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள், எனக்கு வேற வழி தெரியல அதனால தான் இப்படி பண்ணிட்டேன் என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே போகிறார். அப்போது அந்த இடத்தில் மீனா வந்து இவர்கள் இருவரையும் பார்க்கிறார்.

அதைத்தொடர்ந்து மீனா தன்னுடைய அறையில் அழுது கொண்டு இருக்க அங்கு வரும் முத்து மீனாவை சமாதானம் செய்கிறார். அதோடு உன்னுடைய குடும்பத்துக்கு நான் இருக்கேன். அவங்க தான் என்னுடைய சொந்தம் என்று சொல்ல, மீனா சந்தோஷப்பட்டு முத்துவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கப் பிறகு முத்துவும் மீனாவை கட்டி கொள்கிறார். அடுத்த நாள் காலையில் மீனா தலைக்கு குளித்து சந்தோஷமாக வெளியே வர அதை பார்த்த விஜயா, இவா சீக்கிரம் புள்ள பெத்துருவா போலயே என்று புலம்புகிறார்.
அதைத்தொடர்ந்து ரவியும் ஸ்ருதியும் பைக்கில் ஒன்றாக போக அதை பார்வதி பார்த்து விடுகிறார். பிறகு ரவி ஸ்ருதி ஸ்டுடியோவில் விட்டுவிட்டு அங்கு பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இருவரும் ஐ லவ் யூ சொல்லிக் கொண்டு கிளம்புகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications