சிறகடிக்க ஆசை: மனோஜ் மீது சந்தேகப்பட்டு ரோகிணி கேட்ட கேள்வி.. முத்து கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 18ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பணத்தை திருடி மாட்டிக்கொண்ட மனோஜிடம் ரோகினி கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

அதற்கு விஜயா வந்து பதில் கொடுத்து முத்துவிடம் மாட்டிக் கொள்கிறார். இந்த நிலைக்கு இது என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அறையிலிருந்து மீனா வெட்கப்பட்டு கொண்டே வெளியே வர அதை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகிறார். ரோகிணிக்கு முன்னாடி இவப்பிள்ளை பெத்துருவா போலையே என்று புலம்பித் தவிக்க, அந்த நேரத்தில் ரோகிணி அறையில் இருந்து வெளியே வருகிறார். அப்போது ராத்திரி எல்லாம் கொஞ்சம் வேலை இருந்தது அதான் தூங்க முடியல என்று சொல்ல, என்னது நைட்டு வேலை பார்த்தியா? என்று விஜயா அதிர்ச்சியடைகிறார்.
ஆமா இவள் லைட் போட்டு இருந்ததால நானும் சரியா தூங்கல, எனக்கு காபி வேண்டும் என்று மனோஜ் கேட்க அதற்கு ஆமா நீ பார்த்த வேலைக்கு உனக்கு காபி தான் கொற போடா என்று கோபப்பட்டு விஜயா திட்டுகிறார். அதைத் தொடர்ந்து சீதா சைக்கிள் பஞ்சர் என்பதால் தள்ளிக்கொண்டு சென்று வீடுகளுக்கு பூ கொடுத்துவிட்டு வருகிறார். அப்போது எதிரே வந்த ரவி என்ன ஆச்சு ஏன் நடந்து வர என்று கேட்க சீதா நடந்ததை சொல்கிறார்.

அப்படியா சரி வா நான் கூட்டிட்டு போறேன் என்று ரவி சீதாவை பைக்கில் கூட்டிட்டு போகிறார். அதை பார்த்த பார்வதி இவன் பெரிய மன்மதனா இருப்பான் போலயே என்று விஜயாவிற்கு போன் செய்து ஏற்கனவே ஒரு பெண்ணை ரவி கூட்டிட்டு போனதும் இப்போது சீதாவை கூட்டிட்டு போவதையும் வைத்து சொல்லி சீதா தான் உன் வீட்டு மருமகளா வரப்போறா போல என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
அத்தோடு இப்படியே விட்டால் சரி வராது நீ அவனுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணி வை என்று சொல்ல அதற்கு விஜயா நீயே ஒரு பணக்கார பொண்ணா இருந்தா சொல்லு என்று சொல்கிறார். அடுத்து ரோகிணி ரூமில் ஏதோ யோசனையில் இருக்கிறார்.அப்போது மனோஜ் என்ன விஷயம் என்று கேட்க, ஒரு லட்ச ரூபாய் உங்க கைக்கு பணம் எப்படி வந்தது. அத்தை எப்படி அதை மறந்தாங்க? என்று கேள்வி மேல கேள்வி கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் மனோஜ் திணறிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் அந்த பக்கமாக வந்த விஜயா இதை கேட்டு ஓடி வந்து நான் இதை எப்படி மறந்தேன்னு தெரியல என்று சொல்லி ரோகினியை சமாளிக்கிறார். அடுத்ததா ரூமில் இருந்து வெளியே வந்த முத்து திரும்பவும் இப்படி தப்பு நடந்துட்டு உனக்கு ஏன்டா வெட்கமே இல்லையா? ஏன் இந்த சபல புத்தி என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு எல்லாரையும் கூப்பிட்டு இனி இந்த வீட்டில் சண்டையே நடக்க கூடாது இந்த வீட்ல சண்டை நடந்ததனால் தான் எனக்கு விளைவு வேற மாதிரி இருக்கும் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இதை புரியாத அண்ணாமலை என்னதான்டா சொல்லுவர என்று கேள்வி கேட்க எனக்கு ஒரு பிரச்சனை ஆனா அது எனக்கு நாலா தெரியுது என்று சொல்ல, மீனா வெட்கப்படுகிறார். அடுத்து மனோஜிடம் உன்னால தான் எல்லா பிரச்சனையும் வந்துச்சு. உனக்கு இப்போ ஹனிமூன் அவசியமா? என்று கேட்டு மனோஜை திட்டி விட்டு அண்ணாமலை இடம் அப்பா நீ கல்யாணம் ஆகி ஹனிமூன் போய் இருக்கியா? என்று கேட்க அண்ணாமலை நான் எங்கடா அதெல்லாம் போயிருக்கேன் என்று சொல்கிறார்.
அடுத்து மீனாவிடம் நீயும் போணுமா உனக்கும் ஆசை இருக்கா என்று முத்து கேட்க, அப்படி எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்று மீனா சொன்னதும் உடனே அப்போ எல்லாருக்கும் அந்தமானுக்கு ஹனிமூன் டிக்கெட் போடுடா என்று மனோஜிடம் முத்து சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications