சிறகடிக்க ஆசை: பணத்தை திருப்பிக் கொடுத்த மனோஜ்.. கேள்வியால் அசிங்கப்படுத்திய மீனா! கோபத்தில் ரோகினி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் செப்டம்பர் 19ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் மனோஜ் விஜயாவிடம் இருந்து திருடி அந்தமானுக்கு டிக்கெட் போட்டு இருந்த நிலையில் அதை கேன்சல் செய்து விட்டு பணத்தை கொடுக்க, மீண்டும் வீட்டில் பிரச்சனை வெடிக்கிறது.

அதைத்தொடர்ந்து மனோஜ்க்கு விஜயா மேலும் நெருக்கடி கொடுக்க இனி என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இன்று என்ன நடந்தது என்பதை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
எபிசோட்டின் ஆரம்பத்தில், முத்து எல்லோருக்கும் அந்தமானுக்கு டிக்கெட் போட சொல்ல, விஜயா அது என்ன பொருள்காட்சியா எல்லோருக்கும் எப்படி டிக்கெட் போட முடியும்? என்று கேள்வி கேட்க, அதற்கு முத்து அப்படின்னா டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டு அதுக்குள்ள பணத்தை கொடுக்க சொல்லுங்க. இது என்னுடைய அப்பாவுடைய பணம் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
சிறகடிக்க ஆசை: மனோஜ் மீது சந்தேகப்பட்டு ரோகிணி கேட்ட கேள்வி.. முத்து கொடுத்த அதிர்ச்சி
மனோஜ் பொண்டாட்டியை ஹனிமூன் கூட்டிட்டு போனோம்னா அது அவனோட பணத்துல கூட்டிட்டு போகணும் இப்படி வீட்டு பணத்தை எடுத்து கூட்டிட்டு போகக்கூடாது என்று அவமானப்படுத்த அதற்கு ரோகிணி இப்ப என்ன உங்களுக்கு பணம் தானே வேணும்? இன்னும் இரண்டு நாள்ல மனோஜ்க்கு சேலரி கிரிடிட் ஆகிரும். எனக்கும் இந்த மாதம் பேமெண்ட் முழுசா வந்துடும். உங்க பணத்தை கொடுத்து விடுகிறோம் போதுமா? என்று சொல்ல மனோஜும் விஜயாவும் அதிர்ச்சி அடைகின்றனர்.

விஜயா இப்போதைக்கு டிக்கெட் கேன்சல் பண்ணி அவன் பணத்தை வேணா கொடுத்துடுவோம். இன்னும் கொஞ்சம் காசு வந்த பிறகு வெண்ணிலாவுக்கு போயிட்டு வரலாம் என்று சொல்ல, பிறகுதான் எல்லோருக்கும் அது வெண்ணிலா இல்லை வெனிஸ் என்று புரிகிறது. அதற்கு ரோகிணியும் ஆண்டி சொல்றதுதான் சரி நீங்க டிக்கெட் கேன்சல் பண்ணி அந்த பணத்தை கொடுத்து விடுங்கள் என்று சொல்லி ரூமுக்குள் போய் விடுகிறார்.
அதைத்தொடர்ந்து மனோஜ் மொட்டை மாடியில் யோசித்துக் கொண்டிருக்கும் போது விஜயா வந்து வச்சிருந்த பணத்தை நீ எடுத்துட்டு போயிட்ட, இப்ப நான் எப்படி வட்டி கட்டுவது என்று தெரியவில்லையே, ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய்க்கு இந்த பிரச்சனைனா 17 லட்சம் தெரிஞ்சா அவ்வளவுதான் நம்மளை வீட்டை விட்டு துரத்திடுவாங்க என்று கோபப்படுகிறார். பிறகு முதலில் எப்படியாவது ஒரு வேலையை தேடிக்க கம்மியான சம்பளமா இருந்தா கூட பரவாயில்லை. இந்த வேலை கிடைச்சதால அந்த வேலையை விட்டுட்டேன் என்று ரோகிணியை சமாளிக்கலாம் என்று அட்வைஸ் கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து ஸ்ருதி ரவியின் ரெஸ்டாரண்டுக்கு வர அங்கு ஒரு லவ் ஜோடி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கு, அதை பார்த்து ஸ்ருதி ரவியிடம் அது போலவே பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை பற்றி பேசுகின்றனர். அடுத்ததாக வீட்டுக்கு வந்த மனோஜ் எல்லோரையும் வெளியே வர சொல்லி நான் எடுத்துட்டு போன பணத்தை கொடுக்க போவதாக சொல்கிறார்.

அதற்கு முத்து சூப்பர் ரா எப்படி உனக்கு அதுக்குள்ள பணம் கிடைத்தது? அப்பா கிட்ட இருந்து எடுத்துட்டு போன 28 லட்சத்தையும் கொடுக்க போறியா? என்று சொல்ல, நான் எப்போ அதை கொடுக்கிறேன் என்று சொன்னேன். அம்மா கிட்ட இருந்து எடுத்த ஒரு லட்சத்தை தருகிறேன் என்று சொல்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியான முத்து அம்மா கொடுத்தது என்று தானே சொன்னாங்க, நீ எடுத்ததா சொல்ற அப்போ எங்கேயோ இடிக்குதே என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.
பிறகு மனோஜ் கொடுத்த பணத்தை ரவியும் முத்துவும் எண்ணி பார்க்க அதற்கு ரோகிணி கோபப்படுகிறார். அதான் உங்க பணத்தை கொடுத்துட்டாருல, அப்புறம் என்ன என கேட்க, அதற்கு மீனா அது எப்படி சரியாகும்? என் தம்பி மேல வீணா பழியை போட்டு என் மொத்த குடும்பத்தையும் கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்தினாங்க. அப்ப இவரு பணத்தை வாங்கின விஷயத்தை சொல்லாம அமைதியா தானே இருந்தாரு? என்று மீனா கேள்வி கேட்க ரோகிணி பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார்.
கடைசியில் நான்காயிரம் ரூபாய் குறைய ரவி ஏன்டா இப்படி பண்ற என்று கேள்வி கேட்க, அதற்கு மனோஜ் கேன்சலேஷன் ஆச்சுன்னு சொல்லி நான்காயிரம் ரூபாய் பிடிச்சிட்டு தான் கொடுத்தாங்க என்று சொல்கிறார். அதை கேட்டு முத்து கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications