சிறகடிக்க ஆசை: பண விஷயத்தில் ரோகினியை மாட்டிவிட்ட விஜயா.. வெளியான குட்டு.. அடிக்க பாய்ந்த அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் செப்டம்பர் 22 மற்றும் 23ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் விஜயா வீட்டு பத்திரத்தை அடகு வைத்து பணம் வாங்கிய விஷயம் மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது.

இந்த நிலையில் விஜயா தான் ரோகிணிக்காக தான் பணத்தை கடன் வாங்கினேன் என்ற ரகசியத்தை போட்டு உடைக்க வீட்டில் பெரும் பிரச்சனை வருகிறது.
அந்த வகையில் பல வாரங்களாகவே ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த ரகசியங்கள் இன்றைய ப்ரோமோவில் உடைந்து இருக்கிறது. சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி ஒரு பக்கம் வீட்டில் தனக்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பதை மறைத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் மனோஜ் ஒரு பக்கம் தான் வேலைக்கே போகாமல் வேலைக்கு போயிட்டு வருவதாக எல்லாரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அதுபோல விஜயா தான் 17 லட்சம் ரூபாய்க்காக வீட்டு பத்திரத்தை அடகு வைத்து கடன் வாங்கி ரோகினிக்கு கொடுத்ததை மறைத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் யாருடைய பொய் வீட்டில் முதலில் தெரியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
அந்த வகையில் முதல் ஆளாக இன்றைய எபிசோட்டில் விஜயா மாட்டியிருக்கிறார். வட்டி கடைக்காரருக்கு தான் கொடுக்க வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயையும் ஆரம்பத்தில் மனோஜ் திருடி விட்டு போக அதனால் விஜயா சத்யாவை சந்தேகப்பட்டு பிரச்சனை செய்திருந்தார். பிறகு மனோஜ் திருடியது தெரிய வந்ததும் பிரச்சனையை சமாளித்து இருந்தார். ஆனாலும் வீட்டில் அடுத்தடுத்து முத்து செய்த பிரச்சனையால் மனோஜ் ஹனிமூன் டிக்கெட்டை கேன்சல் செய்து அந்த பணத்தை விஜயாவிடம் கொடுத்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து விஜயாவிடம் பைனான்ஸ் காரர்கள் வந்து மிரட்ட விஜயா அந்த பணத்தை எடுத்துட்டு போய் கொடுக்க போகும்போது சத்தியா அந்த பணத்தை தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து திருடி விட்டு போயிருந்தார். இதனால் பைனான்ஸ் காரரிடம் போய் இதைப் பற்றி விஜயா சொல்ல அதை நம்பாமல் பைனான்ஸ் காரர்கள் அங்கு இருக்கும் கூண்டில் அடைத்து வைத்திருந்தனர்.
இந்த வார டாப் 10 சீரியல்கள்.. உங்களுக்கு பிடித்த சீரியல் இருக்கு..முதலிடத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்
அப்போது அங்கு வட்டிப் பணம் கொடுப்பதற்காக வந்த மீனா அங்கு விஜயாவை பிடித்து வைத்திருப்பதை பார்த்து முத்துக்கு அண்ணாமலைக்கும் சொல்ல மொத்த குடும்பத்திற்கும் விஜயாவுடைய ஏமாற்று வேலைகள் வெளியே தெரிந்திருக்கிறது. இந்த நிலையில் இனி வரும் எபிசோட்டுகான பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் வீட்டில் கூண்டு போன்று ரெடி செய்து முத்து அதில் விஜயாவை நிறுத்தி வைத்திருக்கிறார்.

அப்போது ரோகினிக்கு பார்லர் ஆரம்பிக்கனும் என்ற கனவு இருந்துச்சி. அதற்காகத்தான் பத்திரத்தை வைத்து பார்லர் ஆரம்பிக்கலாம் என்று பைனான்ஸில் பணம் வாங்கி ரோகினிக்கு கொடுத்தேன் என்று விஜயா சொல்ல, என்ன நெஞ்ச அழுத்தம் இருந்தா என்கிட்ட சொல்லாம இத்தனை வேலைகளை நீ பண்ணி இருப்பா என்று அண்ணாமலை கோபப்படுகிறார். இந்த நிலையில் அடுத்து முத்து என்ன பிரச்சனை செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications