சிறகடிக்க ஆசை: மனோஜிடம் ரோகிணி பற்றி பேசிய பிஏ.. கடிதத்தால் குடும்பத்தில் வெடிக்கும் பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 27ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜை நேரடியாக சந்தித்து பேசுகிறார். அப்போது ரோகிணி பற்றியும் முத்து பற்றியும் சில விஷயங்களை சொல்ல அதனால் குடும்பத்திற்குள் பிரச்சனை வருகிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா டான்ஸ் கிளாஸில் இருக்கும்போது அந்த காதல் ஜோடியை கவனித்து இருவரையும் தனித்தனியாக ஆட வைக்கிறார். அதற்கு அந்த பையன் ஏன் மாஸ்டர் எங்க மேல சந்தேகப்படுறீங்களா? என்று கேட்க, சந்தேகம் இல்லை நீங்க ரெண்டு பேரும் நல்லா டான்ஸ் ஆடுறீங்க இரண்டு பேரும் சேஞ்ச் பண்ணா இங்கு இருக்கிறவர்களும் நல்ல ஆடுவாங்க என்று சொல்கிறார்.

பிறகு இனி யாரும் எக்ஸ்ட்ரா பிராக்டிஸ் எல்லாம் தனியா செய்ய வேண்டாம் நான் சொன்னா மட்டும் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு பார்வதியிடம் தனியாக பேச சென்று விடுகிறார். அப்போது பார்வதியிடம் சமைக்கிறியா இல்ல வெளிய சாப்பாடு வாங்கவா? என்று விஜயா கேட்க, அதற்கு பார்வதி அதுதான் மீனா எடுத்துட்டு வருவாளே என்று சொல்ல அவளை வரவேண்டாம் என்று சொல்லிட்டேனே அவ வந்தாலே ஏதாவது பிரச்சனையா தான் இருக்கு என்று சொல்கிறார்.
சிம்பு என் தம்பி தான்..நயன்தாரா தைரிய லட்சுமி.. தனுஷ், திரிஷா கூட இப்படித்தான்..!நடிகை விந்தியா ஓபன்
டான்ஸ் கிளாஸில் அந்த ரெண்டு ஸ்டூடண்டும் கட்டிப் பிடிச்சுட்டு நின்றதாக மீனா சொல்றா என்று சொல்ல, பார்வதி பதறிப்போய் அவங்க இந்த வீட்டுல டான்ஸ் ஆடுறாங்க. லவ் பண்ணி வீட்டுக்கு தெரியாம ஓடிப்போயிட்டா நமக்கு தான் பிரச்சனை என்று சொல்ல விஜயா, அந்த மீனாவே பரவால்ல போல. நீ இப்படி பேசுற என்று கேட்கிறார். அவருக்கு பார்வதி நீயே அவங்க ரெண்டு பேரையும் நிறுத்துறியா என்று கேட்க, அப்படி பண்ணுனா மீனா சொல்லி நான் கேக்குறது போல ஆகிவிடும் என்று விஜயா மறுத்துவிடுகிறார்.

மறுபக்கத்தில் மனோஜ் பிஏவை சந்திக்க தன்னுடைய பாடிகார்ட், ரோகிணியோடு கோவிலுக்கு வருகிறார். அங்கு பி.ஏ சாமியார் கெட்ட பில் கோவிலில் நின்று கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் சாமியார் வந்து இருக்காங்க போய் பார்க்கலாம் என்று சொல்கிறார். அப்போது பிஏ தினேஷ் உன் மனைவி தானே கல்யாணி என்று சொல்கிறார். அப்படின்னா என்ன என்று மனோஜ் கேட்க, கல்யாணம் மாதிரி முக லட்சணமா இருக்குறா என்று சொல்கிறார்.
பிறகு உன் பேரு மனோஜ் குமார் தானே என்று சொல்ல, ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க, எனக்கு உன்னைப் பற்றியும் தெரியும் உன் மனைவி யார் எப்படிப்பட்டவர் என்பதும் தெரியும். நீங்க யாரை பார்க்க வந்திருக்கீங்கன்னு எனக்கு தெரியும் என்று சொல்லி ஒரு ஆள் கொஞ்சம் முன்னாடி தான் என்கிட்ட ஒரு லெட்டரை கொடுத்துட்டு வெளியே போனாரு என்று சொல்ல, அந்த லெட்டரை மனோஜ் படித்து பார்த்ததும் உன்னை இவ்வளவு நாள் தூங்கவிடாமல் பண்ணது நான் தான் உனக்கு ஒரு க்ளு கொடுக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் டைட்டில் தான் என்னுடைய பெயர் என்று அதில் எழுதி இருக்கிறது. உடனே மனோஜ் ரஜினி சார் நடிச்ச படம் பேரு என்னன்னு கேட்ட அவருடைய பாடிகாட் சில படங்களில் பெயரை சொல்ல அண்ணாமலை என்று சொல்லுகிறார். அது எங்க அப்பா பேரு அந்த மாதிரி பண்ணிருக்க மாட்டாரு வேற ஏதாவது சொல்லு என்று சொல்ல முத்து என்று சொன்னதும் முத்துவின் புகைப்படத்தை பிஏவிடம் காட்ட அவர் இவனா கொடுத்துட்டு போனது என்று சொன்னதும் பி ஏ ஏற்கனவே முத்து காரில் போகும்போது அவரை அடித்து போலீசில் மாட்டி விட்டதை நினைவு வைத்து ஆமா இவன்தான் என்று மாட்டிவிட்டு விடுகிறார்.
இதனால் கோபமான மனோஜ் வேகமாக அவனை சும்மா விட மாட்டேன் என்று வீட்டிற்கு வருகிறார். மனோஜ் கோபமாக வீட்டிற்கு வந்ததும் ரோகிணி தடுத்து நிறுத்தி நம்மகிட்ட எந்த ஆதாரமும் இல்லை. இப்ப எப்படி கேப்ப என்று சொல்ல, அதான் அந்த சாமியாரே சொல்லிட்டாரே என்று சொல்கிறார். அப்போது பீம் பாய்யிடம் நான் ஒருத்தனை சொல்றேன் அவனை கையை, காலை உடைக்கணும் என்று கூட்டிக்கொண்டு வீட்டிற்குள் வருகிறார்.

மனோஜ் முத்து முத்து என்று வீட்டிற்குள் கத்திக்கொண்டே வர விஜயா ஏன்டா இப்படி கத்துற என்று கேட்க எனக்கு ஒரு லெட்டர் வந்துட்டே இருந்ததே.. அது எழுதுனது முத்து தான். அவன் தான் என்ன மிரட்டுவதற்காக அப்படி பண்ணி இருக்கிறான் என்று சொல்ல வீட்டில் இருந்த மொத்த குடும்பத்தினரும் வந்து விடுகின்றனர். மீனா என்ன நடக்கிறது என்று புரியாமல் இருக்க விஜயா மீனாவை திட்டுகிறார்.
அண்ணாமலை வந்து என்ன விஷயம் என்று விசாரிக்க ஏற்கனவே தனக்கு வந்த லெட்டர் பற்றி மனோஜ் சொல்கிறார். அப்போது மீனா அவர் அப்படி எல்லாம் செஞ்சிருக்க மாட்டாரு என்று சொல்கிறார். ஆனாலும் விஜயா நீங்க ரெண்டு பேரும் இனிமே வீட்டை விட்டு வெளியே போங்க என்று திட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.













Click it and Unblock the Notifications