சிறகடிக்க ஆசை: வாயைக் கொடுத்து மீனாவிடம் மாட்டிய விஜயா.. ரவியால் வர போகும் அதிர்ச்சி.. முத்து பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் செப்டம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் விஜயா ரோகினியை பெருமையாக பேசி மீனாவிடம் அவமானப்படுகிறார்.

siragadikka aasai serial September 29th promo and Episode Highlights

அதே நேரத்தில் விஜயா எடுத்த முடிவால் அவருக்கே அவமானமும் வருகிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயாவும் அண்ணாமலையும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நீ பேசுவதற்கு நான் எப்பவும் உனக்கு பச்சைக்கொடி காட்டணுமா? என்று அண்ணாமலை கேட்க, அதற்கு விஜயா நீங்க எப்பவும் ட்ரெயின், பச்சக்கொடி, சிகப்பு கொடி என்று பேசிக்கொண்டே இருங்க என்று நக்கல் செய்து கொண்டு மனோஜ் மற்றும் முத்து ரூம் கதவை தட்டி எல்லாரையும் ஹாளுக்கு வர சொல்லி கூப்பிடுகின்றனர்.

siragadikka aasai serial September 29th promo and Episode Highlights

அதைத் தொடர்ந்து எல்லோரும் வந்ததும் நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று விஜயா சொல்ல அதற்கு அண்ணாமலை பணத்தை திருடிட்டு போனான்னு சொன்னியே அதை பத்தி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தியா? என்று கேட்க, அதெல்லாம் கொடுத்தாச்சு. நான் இப்ப பேச வந்தது வேற விஷயம் என்ன பேச விடுறீங்களா? என்று கேட்க, அதற்கு அண்ணாமலை இப்ப நீ நேரா விஷயத்துக்கு வா என்று சொல்கிறார்.

அதற்கு விஜயா நான் என்ன இப்ப கோணலாகவா நடக்கிறேன் என்று சொல்ல, அதற்கு முத்து சரியா தெரியலையே, நீங்க வேணா நடந்து காட்டுங்க நான் பார்த்து சொல்றேன் என்று நக்கல் பண்ண, இவன் வேற போடா என்று சொல்லி நான் அடுத்ததா கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன் என்று சொல்ல, முத்து பதறிப் போய் பாத்தியா அப்பா நீ இருக்கும் போதே அம்மா இன்னொரு கல்யாணம் பண்ண போறேன்னு சொல்றாங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

siragadikka aasai serial September 29th promo and Episode Highlights

அதற்கு விஜயா ரவிக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று தான் முடிவு எடுத்திருப்பதாக கூறுகிறார். அதற்கு கடுப்பான அண்ணாமலை என்ன திடீர் கரிசனம் என்று கேட்க, எனக்கு ரவி மேல அக்கறை இல்லைன்னு யார் சொன்னது. நானே முத்து முத்தா மூன்று பிள்ளைகளை பெற்று வைத்திருக்கிறேன் என்று விஜயா சொல்ல, அதைக்கேட்டு முத்து அய்யய்யோ அப்பா எனக்கு அப்படியே புல்லரிக்குது பா. முத்து என்று நான் ஒருத்தன் தானே இருக்கேன் என்று சொல்ல அதற்கு விஜயா கடுப்பாகி நாக்கு ஸ்லிப் ஆகி விட்டதாக சமாளிக்கிறார்.

அதற்கு அண்ணாமலை இப்பல்லாம் உன்னுடைய நாக்கு ரொம்பவே ஸ்லிப் ஆகுது என்று சொல்லிக்கொண்டு ரவிக்கு பரசுவின் பொன்னை கட்டி வைக்கலாம் என்ற முடிவில் நான் இருப்பதாக அண்ணாமலை சொல்ல, அதை கேட்டு விஜயா அதிர்ச்சி அடைகிறார். அந்த பொண்ணு பார்ப்பதற்கு அழகாகவா இருக்கிறது? குடும்ப சொத்து இல்லாமல் இருக்கு என்று நக்கலாக கூறுகிறார்.

அதோடு நான் ஆசைப்பட்ட மாதிரி மனோஜுக்கு நல்ல குடும்பத்தில் கல்யாணம் பண்ணி வச்சிட்டேன். அதுபோல ரவிக்கும் பண்ண வேண்டும் என்று சொல்ல, அதற்கு மீனா கோபமாகி நான் என்ன அப்போ ஆகாத குடும்பத்தில் இருந்து வந்திருக்கேனா? இது என்ன பேச்சு அத்தை பேசுறீங்க. என்று கேள்வி கேட்க, அப்படி கேளு மீனா என்று முத்துவும் ஏத்தி விடுகிறார்.

siragadikka aasai serial September 29th promo and Episode Highlights

அதோடு அப்பா எடுத்த முடிவு நல்ல முடிவு என்று முத்து அண்ணாமலையை பாராட்ட, அதற்கு அண்ணாமலை முதலில் நீ பரசு வீட்டில் பேசிட்டு வா. அப்புறம் நம்ம ஃபேமிலியா போகலாம் என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து மனோஜ் பார்க்கில் உட்கார்ந்து எப்படி வேலைக்கு போகாமல் சம்பளம் மட்டும் கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டிற்கு வரும் ரவியிடம் மீனா சீக்கிரம் ரெஸ்டாரன்ட் ஆரம்பிங்க.

குடும்பம் எல்லாம் வரப்போகுது. உங்களுக்கு பரசு மாமா பொண்ணை பார்த்திருக்காங்க. அதற்கு தான் உங்க அண்ணன் பேசப்போயிருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்டு இப்போது எனக்கு எதுக்கு கல்யாணம் என்று ரவி கேட்க, உனக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு என்று விஜயா சொல்கிறார். அந்த நேரத்தில் முத்து வீட்டிற்கு வந்து எல்லோரையும் ஹாலுக்கு அழைத்து பரசு மாமா என்ன மாதிரி பேசினார் தெரியுமா? என்று அப்படியே நடித்துக் காட்ட போவதாக உட்கார்ந்து இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+