சிறகடிக்க ஆசை: விஜயாவை தொடர்ந்து மாட்டிக்கொண்ட மனோஜ்.. முத்து சொன்ன வார்த்தை.. கோபப்பட்ட மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் செப்டம்பர் 30-ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் மனோஜ் வேலை செய்வது குறித்து முத்துவிற்கு சந்தேகம் வர அப்போது ரோகிணி எதிர்பார்க்காத பதிலை சொல்கிறார்.

அது தொடர்ந்து முத்துவிற்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்திருந்தேன் என்று அண்ணாமலை சொல்ல, அதை கேட்டு மீனா கோபப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பரசு வீட்டில் இருந்து வந்த முத்துவிடம் அண்ணாமலை பரசு என்ன சொன்னான் என்று கேட்க, அதற்கு முத்து பரசு வீட்டில் என்ன நடந்துச்சோ அதை சொல்லுறதை விட நடித்துக் காட்டினால் தான் சிறப்பாக இருக்கும் என்று நடித்துக் காட்டுகிறார். அப்போது உங்க வீட்டுக்கு என் பொண்ண மருமகளா அனுப்பி வைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும்.

ஆனா உங்க அம்மாவை நினைச்சா தான் கொஞ்சம் பயமாயிருக்கு. என் பொண்ணு நிம்மதியான வாழ்க்கை வாழனும். என்னுடைய தகுதிக்கு ஏற்ற இடத்தில் நான் அவளை கட்டி கொடுத்து விடுகிறேன் என்று அவர் சொன்னதாக முத்து நடித்துக் காட்டுகிறார்.அதை பார்த்து கோபமடைந்த விஜயா, ஒண்ணும் இல்லாத குடும்பம் அது என்னை பார்த்து இப்படி எல்லாம் சொல்றாரா? என்று திட்ட அதற்கு அண்ணாமலை அமைதியாக இரு என்று திட்டுகிறார். அதோடு பரசு முத்துவை பற்றியும் மீனாவை பற்றியும் பாராட்டி பேசியதை சொல்ல அதை கேட்ட விஜயா இதெல்லாம் இவன் பேசுற மாதிரியே இருக்கு என்று நக்கல் அடிக்க, அங்கு பரசு பேசியதை ரெக்கார்டு செய்ததை போட்டு காட்டுகிறார்.

அதற்கு அண்ணாமலை முதல்ல உனக்கு பரசுரோட பொண்ணை தான் கேட்கலாம் என்று இருந்தேன் என்று சொல்ல, அதைக்கேட்டு முத்து சந்தோஷப்படுகிறார். அதை பார்த்ததும் மீனா டென்ஷன் ஆகி ரூமிற்க்கு கோபப்பட்டு போகிறார். மீனா கோவப்பட்டு போவதை பார்த்ததும் முத்து ஆனாலும் மீனா மாதிரி யாரும் மீன் குழம்பு வைக்க முடியாது என்று சமாளிக்கிறார். பிறகு முத்துவும் ரூமிருக்கு வந்ததும் அப்போ நான் மீன் குழம்பு வைக்க மட்டும் தான் இங்கே இருக்கேனா என்று மீனா கோபப்பட்டு சண்டை போடுகிறார்.

அத்தோடு முத்துவை வேலைக்கு போங்க என்று மீனா பிடித்துத் தள்ள முத்து போகமாட்டேன் என்று விடாப்பிடியாக நின்று கொண்டிருக்க, பிறகு இருவருக்கும் ரொமான்ஸ் நடக்கிறது. அடுத்ததாக முத்து வேலைக்கு கிளம்பும் போது மனோஜ் பேக் உடன் வீட்டிற்கு வருகிறார். அப்போது முத்து அவரிடம் கையில் என்னடா இன்னொரு பேக் இருக்கு என்று கேட்க, அதற்கு லஞ்ச் பேக் என்று மனோஜ் சொல்ல, எனக்கு என்னமோ இவன் வேலைக்கு போற மாதிரி தெரியலையே என்று முத்து கேட்க மனோஜ் அதிர்ச்சி அடைகிறார்.

அப்போது ரோகிணி அவர் செய்யுற வேலை எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஒரு நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்கணும். உங்களை மாதிரி ஈஸியா கார் ஓட்டுகிற வேலை எல்லாம் கிடையாது என்று சொல்ல, அதற்கு மீனாவும் முத்துவுக்காக சப்போர்ட் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க என்று இருவரையும் சமாதானப்படுத்துகிறார்.
அடுத்ததாக விஜயா நான் ரவிக்கு பெரிய இடத்துல பொண்ணு பார்த்து இருக்கேன். நாளைக்கு அவங்க மாப்பிள்ளை பார்க்க வீட்டுக்கு வராங்க என்று சொல்ல, அதற்கு முத்து வழக்கம்போல கிண்டல் செய்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications