Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: பட்டும் திருந்தாத விஜயாக்கு புதிய சிக்கல்! ரோகிணிக்கு தெரிய வந்த உண்மை! மீனா செய்த அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai Serial March 9, 2026) சிறக்கடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் ஒன்பதாம் தேதிக்கான எபிசோடில், வீட்டில் யாரும் இல்லாத தனிமையை நினைத்து விஜயா ரொம்ப வருத்தப்படுகிறார். ஆனாலும் அவருடைய திமிரால் அவரே தலையில் மண்ணை அள்ளி போட்டு கொள்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்ப்போம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு (Siragadikka Aasai Serial Today Episode) ஆரம்பத்தில், விஜயா பார்வதி வீட்டிற்கு வந்து நேற்று இரவு முழுவதும் நான் யாரும் இல்லாமல் தனிமையில் இருந்தேன். இப்பதான் உன்னோட அருமை புரிகிறது. அதனால் தான் நீ சிவன் கூட சேர்ந்து வீடியோ போடுறியா? உன்னை நான் புரிஞ்சுகிட்டேன். என்னை மன்னிச்சிரு என்று மன்னிப்பு கேட்கிறார்.

பார்வதி கொடுத்த அட்வைஸ்

பார்வதியும் இப்பவாவது உனக்கு புத்தி வந்ததே அதுவே எனக்கு சந்தோஷம் என்று சொல்லிவிட்டு, மீனாவை மீண்டும் வீட்டிற்கு கூட்டிட்டு வா என்று அட்வைஸ் கொடுக்கிறார். உடனே கடுப்பான விஜயா நான் உன்னை புரிஞ்சுகிட்டேன் என்பதற்காக நீ எனக்கு அட்வைஸ் கொடுக்காத அவ இந்த வீட்டுக்குள்ள வந்ததால தான் என் வீடு நாசமா போச்சு என்று வழக்கம் போல திமிராகவே பேசிக் கொண்டிருக்கிறார்.

விஜயாவின் பிளான்

அந்த நேரத்தில் ஒரு நபர் பார்வதி வீட்டிற்கு வருகிறார். அவர் மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம் பண்ணுவதற்கு ஒரு பொண்ணு வீட்டு நம்பர் கொடுத்து விட்டு போகிறார். அதற்கு பார்வதி ஏன் இவ்வளவு அவசரப்படுற விவாகரத்து கிடைக்கட்டும் என்று சொல்ல அதற்கு விஜயா அது கிடைக்கும் முன்பு நான் மனோஜ் க்கு கல்யாணம் பண்ணி வைத்து ஆக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

முத்து செய்த உதவி

மறுபக்கத்தில் முத்து மீனா பூக்கட்டி கொடுக்கும் அப்பார்ட்மெண்டுக்கு வருகிறார். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் அங்கிருந்த ஒரு மன வளர்ச்சி குன்றிய சிறுவன் தற்கொலை செய்து கொள்ள போகிறார். எல்லாரும் அதை பார்த்து பதறி கொண்டு இருக்கும் போது மீனா கொடுத்த அட்வைஸை வைத்து முத்து அந்த சிறுவனை காப்பாற்றி விடுகிறார். இதனால் அந்த குடும்பம் முத்துமீ னாவிற்கு நன்றி சொல்கின்றனர். உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் எங்ககிட்ட கேளுங்க நான் கண்டிப்பா உங்களுக்கு செய்கிறோம் என்று சொல்கின்றனர்.

மனோஜ் பிளான்

அடுத்ததாக மனோஜும் அவருடைய நண்பர் சந்தோஷும் ரோகிணி வரும் வழியில் நின்று கொண்டிருக்கின்றனர். எப்படியாவது ரோகிணிக்கு எதிராக ஆதாரம் திரட்ட காதல் வலை வீசுகின்றனர். அந்த நேரத்தில் ரோகிணி ஆட்டோவில் வர சந்தோஷ் அவரிடம் சென்று பேசுகிறார். அப்போது, மனோஜ் வேஸ்ட் அவன் உன்னையெல்லாம் நினைத்து கூட பார்க்க மாட்டான் அதனால நான் அந்த இடத்திற்கு வரலாம் என்று ஆசைப்படுகிறேன் என்று ரொமான்டிக்காக பேச ரோகிணிக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் பிறகு இதில் ஏதோ பிளான் இருக்கிறது என்று தோன்றுகிறது.

சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது.. ஸ்ருதி கண்ணில் சிக்கும் ரோகிணி! சிந்தாமணி பிளான் உடைந்தது!
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது.. ஸ்ருதி கண்ணில் சிக்கும் ரோகிணி! சிந்தாமணி பிளான் உடைந்தது!

ரோகிணி கண்டுபிடித்த உண்மை

அப்போது சுற்றி பார்க்க அங்கே மனோஜ் வீடியோ எடுத்துக் கொண்டிருப்பதை ரோகிணி பார்த்து விடுகிறார். இதனால் இதில் ஏதோ பெரிய சதி இருக்கிறது என்று அவருக்கு தெரிந்து. நான் இதற்கு முடிவு உங்களுக்கு பிறகு சொல்றேன் என்று சொல்லி விடுகிறார்கள். கட்டின பொண்டாட்டின்னு கூட இல்லாம இப்படி ஒரு மோசமான வேலை பாக்குறியா என்று மனோஜிக்கு எதிராக ரோகிணி புது பிளான் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

நடிப்புக்கு டாட்டா.. நிஜ டாக்டராக மாறிய ஜீ தமிழ் சீரியல் நடிகை! ஆளே மாறிட்டாங்களே.. குவியும் வாழ்த்து
கடைசியாக முத்து வீட்டிற்கு ஒரு பெரிய டிபன் கேரியரில் சாப்பாடு கொண்டு வருகிறார். அதை பார்த்து விஜயா மீனாவும் இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது அவ கொடுத்து அனுப்பிய சாப்பாடும் வரக்கூடாது என்று சத்தம் போடுகிறார். ஆனால் முத்து அதை எல்லாம் நீங்க சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டு அப்பா ரவி எல்லாரையும் கூப்பிட்டு வைத்து சாப்பாடு பரிமாறுகிறார்.

அந்த நேரத்தில் மனோஜ் சாப்பிட போக விஜயா நான் உனக்கு ஸ்பெஷல் சாப்பாடு செஞ்சு வச்சிருக்கேன் இங்க வா என்று கூப்பிட்டு தான் செய்த சாப்பாட்டை கொடுக்கிறார். ஆனால் முத்து குரூப் நான்வெஜ் சாப்பாடை ரசித்து சாப்பிட மனோஜ் அதை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+