நேத்து வரைக்கும் குழந்தையா பாத்துட்டு இருந்த சிவாங்கியா?ஆளை அசத்திவிட்டாரே..குவியும் வாழ்த்துக்கள்..
சென்னை : ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய சிவாங்கி அவருடைய ரசிகர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார். பதிலுக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் மலை போல உயர்ந்து வருகிறது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓணம் புடவையில் அப்படியே கேரளத்து பைங்கிளியாக மாறியிருக்கும் சிவாங்கியை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.
என்னதான் புடவை கட்டினாலும் முகத்தில் அந்த குழந்தைத்தனமும், துடுக்குத் தனமும் கொஞ்சம் மிடுக்காக தான் தெரிகிறது, என்று கலாய்க்கும் ரசிகர்களின் அன்பு தொல்லை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது.

சும்மா அசத்தி விட்டாரே
ஓணம் பண்டிகையை பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில் பிரபலங்களும் தங்களுடைய வீட்டில் வெகு விமர்சனமாக கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே நேற்று தொடங்கிய பிரபலங்களின் கொண்டாட்டம் இன்று வரைக்கும் நீண்டு கொண்டேதான் இருக்கிறது. பலர் நேற்று கொண்டாட ஆரம்பித்து விட்டார். ஆனால் ஒரு சிலர் இன்றும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் செல்லப்பிள்ளையாக அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்திருக்கும் சிவாங்கி தற்போது அழகாக ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். ஓணம் பண்டிகைக்கு சிறப்பே வீட்டில் பூ கோலங்கள், காய்கறி சமையல் மற்றும் பல விஷயங்கள் இருந்தாலும் அதில் பண்டிகையை கொண்டாடும் போது அனைவரும் ஒரே கலரில் ஓணம் புடவை கட்டுவது ஒரு சிறப்பு தான்.

புடவையில் கலக்கல்தான்
அந்த மாதிரிதான் சிவாங்கியும் ஓணம் பண்டிகையை செமையாக என்ஜாய் பண்ணி இருக்கிறார். இவர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே ஒரு சில போட்டோக்களையும் எடுத்து அழகான ஒரு போட்டோ ஷூட் முடித்துவிட்டார். இவருடைய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பார்த்து அவருடைய ரசிகர்கள் உச்சிக் கொட்டி கொண்டாடுகிறார்கள். அடடா என்று ஆரம்பித்து, என்ன அழகு என்று விதவிதமாக வர்ணிக்க தொடங்கிவிட்டார்கள். அதிலும் பலர் நேற்று வரைக்கும் குழந்தை என்று தான் நினைச்சுட்டு இருந்தோம் ஆனால் புடவையில் பார்த்த பிறகுதான் சிவாங்கியும் பேரழகிதான் என்று தெரிகிறது, என திரைப்பட வசனங்களை எல்லாம் கமெண்ட்களில் கொட்டுகிறார்கள். இப்படியே வர்ணித்துக் கொண்டே இருந்தால் எப்படி என்று பார்ப்பவர்கள் எல்லாம் புலம்பும் வகையில் சிவாங்கியின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் அலறவிட்டு வருகிறார்கள்.

குதூகலிக்கும் சந்தோஷம்
ஆனாலும் இந்த மாதிரி எல்லாம் ஓவர் க்யூட் இருக்கக்கூடாது என்று சிலர் செல்லமாக மிரட்டவும் செய்திருக்கிறார்கள். இவருடைய குழந்தைத்தனமான சேட்டைகளை பிடித்த ரசிகர்கள் இதுவரைக்கும் இவரை வளர்ந்த குழந்தையாக தான் பார்த்து வருகின்றனர். தற்போது நான் குழந்தை இல்லை குமரி ஆகிவிட்டேன் என்று சிவாங்கி வெளியிட்ட போட்டோக்கள் ரசிகர்களுக்கு எடுத்துச்சொல்லுகிறதாம். ஆனாலும் இவரை விதவிதமாக வர்ணிக்கும் ரசிகர்களின் அன்பு தொல்லை தாங்கவில்லை. நேரியல் புடவையில் கோல்ட் கலர் பார்டரோடு அதற்கு மேட்சாக கிரீன் கலர் பிளவுஸ் போட்டு, அப்படியே கேரளத்து ஸ்டைலில் புடவையை கட்டிக் கொண்டு அழகு தேவதையாக இவர் இடுப்பில் கை வைத்து இருக்கும் போட்டோவை பார்த்ததும் சிலர் செய்து வைத்த செப்பு சிலையா இல்லை உயிருள்ள ஓவியமா என்று தெரியவில்லையே என்று கவிதைகளை எல்லாம் கொட்டுகிறார்கள்.

வாழ்த்துக்களுக்கு பஞ்சமில்லை
சிவாங்கியும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று ஒரே நேரத்தில் பல விதமான போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதுவும் ஒரு போட்டோவில் இடுப்பில் கையை வைத்து மறுகையை முகத்தில் வைத்து ஸ்டைலாக இவர் பார்க்கும் பார்வையை பார்த்து சிலருக்கு அடடா அந்த தேவதையே பூமியில் வந்து விட்டதோ என்று என்ன தோன்றுகிறது, என்று ஒரு ரசிகர் போட்டிருக்கும் கமெண்டை பார்க்கும்போது, இப்படியே ஏற்றிவிட்டு தான் பலர் உடம்பு ரணகளமா ஆகியிருக்கிறது என்று வடிவேலுவின் காமெடி தான் மைண்ட் வாய்ஸாக கேட்கிறது. எது எப்படியோ ரசிகர்களுக்காக தற்போது பிஸியாக ஓணம் பண்டிகையை கொண்டாடி கொண்டிருந்தாலும் அழகாக சில போட்டோக்களை எடுத்து அதில் குறிப்பிட்டதை மட்டும் செலக்ட் செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு இருப்பதை பார்த்ததும், இவருடைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதுவும் ஒரு மணி நேரத்துக்குள் சுமார் 6 ஆயிரம் கமெண்டுகளை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. இப்படியே ரசிகர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது. ரசிகர்களின் பெரும் ஆதரவினால் தான் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று விட்டார் போல.எப்படியோ வாழ்க்கையில் நல்லது நடந்தால் சந்தோசம் தான். இது போல ஓணம் பண்டிகை அன்று மட்டுமல்லாமல் எப்போதுமே சிவாங்கி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை பூப்போல தூவுகிறார்கள்.












Click it and Unblock the Notifications