சரிகமப டைட்டில் வின்னரான திவினேஷ்.. மேடையில் சிவகார்த்திகேயன் செய்த செயல்! கதறி அழுத பெற்றோர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சேம்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நேற்று லைவாக ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக திவினேஷ் அறிவிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் சிவகார்த்திகேயன் பரிசுகள் வழங்கி இருந்தார். அப்போது சிவகார்த்திகேயன் திவினேஷை மேடையில் தூக்கி கொஞ்சி முத்தம் கொடுத்து பாராட்டி இருந்தார். அந்த நேரத்தில் திவினேஷின் பெற்றோர் கண்கலங்கி கதறி அழுகின்றனர்.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர்களுக்காக தனித்தனியாக சீசன் தொடங்கப்பட்டு வருகிறது. இதில் ஜூனியர்களுக்காக சரிகமப லிட்டில் சேப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று தான் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சி நேரு ஸ்டேடியத்தில் இருந்து லைவாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Sivakarthikeyan ZeeTamil SaReGaMaPa

சரிகமப சீசன் 4 பைனலிஸ்ட்

இதில் இறுதி கட்டத்திற்கு ஆறு போட்டியாளர்கள் செலக்ட் செய்யப்பட்டு இருந்தனர். அதில் திவினேஷ், யோகஸ்ரீ, மஹதி, ஹேமித்ரா, அபினேஷ் மற்றும் ஸ்ரீமதி போன்றோர் இடம் பிடித்திருந்தனர். இவர்களில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு கடைசியில் இன்ப அதிர்ச்சி கிடைத்தது. அதாவது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே திவினேஷ் வெற்றி பெற்றிருந்தார்.

மக்களின் ஆதரவு

எல்லா போட்டியாளர்களும் சிறப்பாக தங்களுடைய திறமையை வெளிக்காட்டி இருந்தாலும் திவினேஷுக்கு ஆரம்பத்தில் இருந்து அதிகமான ஆதரவு கிடைத்து வருகிறது. பழைய பாடல்களை பாடி ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக திவினேஷ் மாறிவிட்டார். ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகும் போதெல்லாம் திவினேஷ் ப்ரோமோ எப்போது வரும் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருந்தது.

மெல்லிசை இளவரசர்

எம்எஸ்வியின் இசை வாரிசு என்று எம்.எஸ்.வி இன் குடும்பத்தினரே திவினேஷை பாராட்டி இருந்தனர். தன்னுடைய தாத்தாவை குருவாகக் கொண்டு தாத்தா வழி நடத்தினால் எந்த இசை பயிற்சியும் முறையாக கற்காமலே பழைய பாடல்களை அழகான உச்சரிப்புடன் பாடி வந்தார். இவருக்கு நேற்று டைட்டில் வின்னர் என்ற பட்டமும் பத்து லட்சம் பரிசும் வழங்கப்பட்டிருந்தது. அதோடு "மெல்லிசை இளவரசர்" என்ற பட்டமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் பாராட்டு

இதை எல்லோரும் பாராட்டி கொண்டிருந்தனர். திவினேஷ் தான் வெற்றியாளர் என்று சொன்னதுமே சக போட்டியாளர்களாக இருந்த குழந்தைகளும் சந்தோஷத்தில் குதித்தனர். திவினேஷை பாராட்டி இருந்தனர். அப்போது சிறப்பு விருந்தினராக வந்த சிவகார்த்திகேயன் திவினேஷை தூக்கி கொஞ்சி முத்தம் கொடுத்து பாராட்டியிருந்தார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த திவினேஷ் பெற்றோர் கதறி அழுது இருந்தனர்.

Sivakarthikeyan ZeeTamil SaReGaMaPa

கதறி அழுத பெற்றோர்

திவினேஷ் சாதாரண ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர். அவருடைய அப்பா பால் வண்டி டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா துணி தைத்துக் கொடுக்கும் வேலை செய்து கொண்டிருக்கிறார். அதேபோல ஹோட்டல், திருமண வீடுகளில் சமையல் செய்வது கேட்டரிங் சர்வீஸ் போன்ற சின்ன சின்ன வேலைகளையும் செய்து வந்தார். ஆரம்பத்தில் எவ்வளவு தடைகளும் கஷ்டங்களும் இருந்தாலும் இன்று திவினேஷ் வெற்றி பெற்றது தங்களுடைய பெரிய பாக்கியம், தங்களுடைய மகனால்தான் எங்களுக்கு மரியாதை கிடைக்கிறது இதற்கு முன்பு எங்களை அசிங்கப்படுத்தியவர்கள் முன்பு எங்களுடைய மகன் எங்களை தலை நிமிர வைத்திருக்கிறார் என்று கண்ணீர் மல்க பேசி இருக்கிறார்கள்.

திவினேஷுக்கு நம்முடைய சார்பாக வாழ்த்துக்கள். சரிகமபா நிகழ்ச்சியில் திவினேஷ் வெற்றி சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது வேறு எந்த போட்டியாளர் இந்த பட்டத்திற்கு சரியான நபராக இருப்பார் என்று நினைக்கிறீர்கள் நண்பர்களே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+