Sivakarthikeyan: "அடுத்த விஜய் நான்தான்", பெங்களூரில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்! - ரசிகர்கள் மத்தியில் கெத்து!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன், தற்போது இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மதராஸி' படத்தின் மூலம் ஒரு புதிய உயரத்தைத் தொட ஆயத்தமாகி வருகிறார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் புரோமோஷன் நிகழ்வுகள், சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

தொடக்கப் புள்ளி
சிவகார்த்திகேயன் தனது கலைப் பயணத்தை விஜய் டிவியில் ஒரு மிமிக்ரி கலைஞராகவும், பின்னர் தொகுப்பாளராகவும் தொடங்கினார். 'அது இது எது', 'ஜோடி நம்பர் 1' போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அவரது நகைச்சுவையான பேச்சு, எதார்த்தமான உடல்மொழி ஆகியவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
திரை அறிமுகம்
2012-ல் 'மெரினா' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'எதிர்நீச்சல்', 'மான் கராத்தே', 'ரெமோ', 'வேலைக்காரன்', 'டான்', மற்றும் 'டாக்டர்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் பக்கத்து வீட்டு பையன் போட்டு கேரக்டரில் நடித்து வந்தாலும் இப்போது மாஸ் ஹீரோவாக அமரன் படத்திற்கு சிவகார்த்திகேயன் மாதிரி இருக்கிறார்.
மதராஸி
தற்போது, சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் படமான 'மதராஸி' ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. நடிகை ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்குப் பிறகு, படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
புரோமோஷன் பணிகள்
படத்தின் புரோமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பெங்களூரில் நடந்த புரோமோஷன் நிகழ்வில், 'சலம்பல' பாடலுக்கு அவர் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சமீபத்தில் பெங்களூரில் நடந்த ஒரு புரோமோஷன் நிகழ்வில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூட்டத்தின் நடுவே கை காட்டும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படம், நடிகர் விஜய் தனது 'மெர்சல்' போன்ற படங்களில் மக்கள் கூட்டத்தின் நடுவே நிற்கும் காட்சியைப் போலவே இருப்பதாக ரசிகர்கள் ஒப்பிட்டுப் பேசுகின்றனர்.
இந்த புகைப்படத்தை டேக் செய்து, "அடுத்த விஜய் நான்தான் என்பதைப் போல சிவகார்த்திகேயன் கெத்து காட்டுகிறார்" என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இதற்கு முன் "அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான்" என்று ரசிகர்கள் கூறியபோது, "அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான்" என்று பதிலளித்த சிவகார்த்திகேயன், தனது நடவடிக்கைகளின் மூலம் வேறு ஒரு கருத்தை உணர்த்துகிறாரோ என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு பேச்சு ஓடுகிறது.
தற்போது, சிவகார்த்திகேயன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே. 22 மற்றும் 'ரங்கூன்' படப்புகழ் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'எஸ்.கே. 23' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications