உடைந்து நிற்கும் சிவகார்த்திகேயன்? பிரபல டைரக்டருக்கு மறுவாழ்வு? ஜன நாயகன் Vs பராசக்தி.. பிளானே வேற
சென்னை: ஜனநாயகன் படத்தின் மூலம் ஆளுங்கட்சி மீதான எதிர்ப்பையும், தனது அரசியல் இமேஜையும் மேலும் அதிகமாக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால், சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தை போட்டியாக வெளியிடுவதன் மூலம் விஜய் படத்திற்கு ஒதுக்கப்படும் திரையரங்குகளின் எண்ணிக்கையை குறைக்க ரெட் ஜெயண்ட் தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் மூத்த பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் குறித்து கூறியிருக்கிறார்.
பராசக்தி படம் திராவிட சித்தாந்தங்களை தூக்கிப்பிடித்து பேசும் ஒரு படமாகவே உருவாகி வருவதால், அதனை தங்களுக்கு சாதகமான தேர்தல் பரப்புரையாக பயன்படுத்தவும் திமுக தரப்பு ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் - திருத்தங்கள்
இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்தள்ள வலைப்பேச்சு அந்தணன், மதராசி படத்தை பொறுத்தவரை, முருகதாஸ் ஒருவித பயத்துடன்தான் படம் செய்துகொண்டிருக்கிறார்..
மூத்த இயக்குனர்கள், அதேபோல சிவகார்த்திகேயனுக்கு தெரிந்த இயக்குனர்களுக்கு, தான் எடுத்துள்ள இப்படத்தை போட்டு காண்பித்ததாகவும், அவர்கள் சில திருத்தங்களை சொல்லி, அந்த திருத்தங்களையும் சரிசெய்ததாகவும் தெரிகிறது.
மறுவாழ்வு தந்த எஸ்கே?
முருகதாஸை பொறுத்தவரை, சாதாரண இயக்குனர் இல்லை.. பல வெற்றிப்படங்களை தந்தவர்.. சில படங்கள் அவருக்கு சறுக்கியிருக்கலாம்.. அதுக்காக சிவகார்த்திகேயன்தான் மறுவாழ்வு தந்தார் என்றெல்லாம் சொல்ல முடியாது..
பிளாப் படங்கள் தந்தால், மீண்டும் அவரது படங்களில் நடிக்க நடிகர்கள் தயங்குவது உண்மைதான்.. ஆனால், அதெல்லாம் மீண்டு வந்துவிடக்கூடியதுதான்.. ஒரு நல்ல கதையை சொல்லாமல், சிவகார்த்திகேயன் வெற்றிப்படத்தை தந்துவிடப்போவதில்லை.. தன்னுடைய கால்ஷீட்டை சிவகார்த்திகேயன் தந்தாலும்கூட, நல்ல கதையை முருகதாஸ் சொல்லியிருக்கிறார் என்றுதான் அர்த்தம்..
ஷூட்டிங் - பராசக்தி படம்
பராசக்தி படமும் சிலநாட்கள் ஷூட்டிங் போகாத நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகியிருக்கிறது.. இன்னும் 35 நாட்கள் ஷூட்டிங் இருப்பதாக சொல்கிறார்கள்.. எனவே, பொங்கல் பண்டிகைக்குள் படத்தை கொண்டுவர வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறார்கள்..
எனவே, ஒரே யூனிட்டாக பணிபுரியாமல், ஒருசில காட்சிகளை மட்டும் வேறு வேறு நபர்களை கொண்டு எடுப்பதாகவும் முடிவாகியிருப்பதாக தெரிகிறது. எனவே பொங்கலுக்கு பராசக்தி படம் கட்டாயம் ரிலீஸ் ஆகிவிடும்..
விஜய்யின் ஜனநாயகன்
விஜய்யின் ஜனநாயகன் படமும் பொங்கலுக்கு வருகிறது.. அரசியல் காரணங்களுக்காக ரெட்ஜெயண்ட் போன்றோர் மோதுவதாக இருந்தாலும், சிவகார்த்திகேயனுக்கு விஜய்யுடன் மோத வேண்டும் என்ற எண்ணமே இல்லை..
எப்படியாவது தன்னுடைய பட ரிலீஸை தள்ளிப்போட வேண்டும் என்று தான் நினைக்கிறார். காரணம் விஜய்யின் ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்து கொள்ள நேர்ந்தால், காலம் முழுக்க அது தொடரும் என்று நினைக்கிறார்..
பராசக்தி - ஜனநாயகன்
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு முறை தன்னுடைய படம் வரும்போதும், கும்பலாக வந்து அட்டாக் நடக்கும் என்பதால், இதையெல்லாம் சிவகார்த்திகேயன் விரும்பவில்லை.. அனைத்துக்கும் மேலாக, தன்மீது விஜய் அன்பும், மதிப்பும் வைத்திருக்கும்போது, அதை பிறரது அரசியல் காரணங்களுக்காக பலி தந்துவிடக்கூடாது என்றும் சிவகார்த்திகேயன் நினைக்கிறார்.
எனினும், இந்த பட கம்பெனியை பொறுத்தவரை, தன்னுடைய பட ரிலீஸை தள்ளிப்போடக்கூடிய நிலைமையில் சிவகார்த்திகேயன் இல்லை. வேறொரு சின்ன கம்பெனியாக இருந்தால், ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் முடிவு செய்யலாம். ஆனால்., பராசக்தி நிறுவனம் பெரிய நிறுவனம் என்பதால், சிவகார்த்திகேயனால் எதுவுமே செய்ய முடியாத நிலைமை" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications