சரிகமபவில் சிவகார்த்திகேயனுக்கு அதிர்ச்சி கொடுத்த புவனேஷ்.. அதுவும் இப்படி ஒரு கேள்வியா ஆடி போயிட்டாரே?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் முடிவு அடைந்தது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அவரிடம் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்த புவனேஷ் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதை சற்றும் எதிர்பார்க்காத சிவகார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்திருந்தார். பிறகு யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலையும் கொடுத்திருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் இறுதி கட்டத்திற்கு ஆறு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதில் திவினேஷ், யோகஸ்ரீ, மஹதி, ஹேம்ரிதா, அபினேஷ் மற்றும் ஸ்ரீமதி போன்றோர் இடம் பிடித்திருந்தனர். இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து கடைசி வரைக்கும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியான முகத்துடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை இந்த நிகழ்ச்சி போட்டியாளரான புவனேஷ் அதிர்ச்சியடைய வைத்திருந்தார்.

சுட்டி குழந்தை
புவனேஷ் பலருக்கும் ஃபேவரைட்டான சிறுவன் தான். புவனேஷுக்கு இப்போது ஆறு வயது தான் ஆகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் சுட்டி குழந்தையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆறு வயதிலேயே தன்னுடைய பாடல்களால் ரசிகர்களை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இறுதி கட்டத்திற்கு செல்லும் ஆறு போட்டியாளர்களில் இவரும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கடைசி நேரத்தில் இவரை விட மஹதி அருமையாக பாடினார் என்று அவரை ஆறாவது இடத்திற்கு தேர்வு செய்து விட்டனர்.
புவனேஷ் கேட்ட கேள்வி
ஆனாலும் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாத புவனேஷ் வழக்கம்போல என்டர்டைன்மென்ட் செய்து கொண்டிருக்கிறார். அதிலும் கிராண்ட் பினாலேவில் சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் சிவகார்த்திகேயனுடன் புவனேஷ் பேசிய வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சிவகார்த்திகேயனிடம் புவனேஷ் பேசும்போது "சார் உங்ககிட்ட விஜய் சார் துப்பாக்கி கொடுத்துட்டு போனாரே அந்த துப்பாக்கியை எப்போ எனக்கு தர போறீங்க?" என்று கேட்டிருக்கிறார்.
மகிழ்ந்த சிவகார்த்திகேயன்
அதை எதிர்பார்க்காத சிவகார்த்திகேயன் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தாலும் பிறகு அதை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறார். நீ இங்க இருந்து பார்க்கும்போது உன்னுடைய உருவம் எனக்கு தெரியல. ஆனால் என்கிட்ட இருக்க துப்பாக்கி பெருசா இருக்கு அதை உனக்கு நீ வளர்ந்த பிறகு தருகிறேன். இப்போ அந்த துப்பாக்கியை வச்சிக்கிற அளவுக்கு நீ இன்னும் வளரல அதனால கொடுக்கல என்று சொல்லி இருக்கிறார்.

ஸ்வேதா மேனன் பாடல்
பிறகு புவனேஷ் சிவகார்த்திகேயனிடம் சென்று அவருக்கு சாக்லேட் கொடுத்து அவருடைய கன்னத்தில் முத்தமும் கொடுத்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து புவனேஷ்க்கு ஸ்வேதா மேனன் அதிகமாக செல்லம் கொடுத்து வருகிறார். எல்லா குழந்தைகளையும் ஸ்வேதா மேனன் பாராட்டிக் கொண்டிருந்தாலும் புவனேஷிடம் அதிக அக்கறை எடுத்து இருக்கிறார். இந்த நிலையில் புவனேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரையும் பார்த்து அமரர் திரைப்படத்தில் இடம்பெற்ற மின்னலே மின்னலே பாடலில் வரிகளை பாடியிருந்தார்.












Click it and Unblock the Notifications