பொங்கல் அன்று சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படங்கள்.. இதை கவனிச்சீங்களா? குவியும் வாழ்த்து
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அப்போது முதல் முறையாக தன்னுடைய மூன்றாவது ஆண் மகனின் முகத்தையும் காட்டியிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எப்போதும் ஒருவருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் சிவகார்த்திகேயனும் ஒரு முன் மாதிரியாக இருக்கிறார்.

கடந்த வருடத்தில் அவருக்கு பல நல்ல விஷயங்கள் நடந்தது. அமரன் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பெரிய சூப்பர் ஹிட் கொடுத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கிய சிவகார்த்திகேயன் இப்போது ஆக்சன் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு வித வித்தியாசத்தை காட்டிக்கொண்டு இருக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிய பிரபலம் கிடைத்திருக்கிறது. ரஜினி- கமல்ஹாசனுக்கு பிறகு அஜித் விஜய் இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து தனுஷ்- விக்ரம் வரிசையில் இப்போது சிவகார்த்திகேயனும் உயர்ந்திருக்கிறார்
இந்த நிலையில் பொங்கல் திருநாளில் குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் புகைப்படங்கள் எடுத்து பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவில், "உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். பொங்கலோ பொங்கல்... அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதோடு சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவதாக பிறந்த மகனின் புகைப்படத்தை இதுவரைக்கும் வெளியே காட்டாமல் இருந்த நிலையில் இப்போது அவருடைய மகனின் முகத்தை தெரியும் படி குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். சிவகார்த்திகேயனின் மூத்த மகள் ஆராதனா சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்த கனா திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடியிருந்தார்.

இப்போது ஆராதனா சிவகார்த்திகேயன் தோளுக்கு மேல் வளர்ந்திருப்பதை பார்த்ததும் அடுத்த ஹீரோயின் சினிமாவில் ரெடி என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். அதோடு சிவகார்த்திகேயனுக்கு அதிகமான ரசிகர்கள் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications