சந்தோஷத்தை மும்மடங்காக்கிய மகன்.. மகிழ்ச்சியில் போஸ்ட் போட்ட சிவகார்த்திகேயன்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மூன்றாவது மகன் குறித்து நெகிழ்ச்சியாக போஸ்ட் போட்டு இருக்கிறார். தன்னுடைய மூன்றாவது மகன் மற்றும் மனைவியோடு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் சிவகார்த்திகேயன் பகிர்ந்து இருக்கிறார். ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அறிமுகமே தேவை இல்லை. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து இப்போது புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சினிமாவில் காமெடியான கேரக்டரில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது மாஸ் ஹீரோவாக உருமாறி இருக்கிறார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் 350 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.

பராசக்தி திரைப்படம்
அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் "பராசக்தி" உட்பட இரண்டு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் பற்றிய செய்திகள் இணையத்தில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அவரைப் பற்றிய வதந்திகளை அவர் கண்டுகொள்ளாமல் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய குடும்பத்தையும் சினிமாவையும் ஒரே போல மேனேஜ் செய்து கொண்டு வருகிறார்.
சிவகார்த்திகேயன் பதிவு
சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்ற அவருடைய உறவினரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும் குகன் மற்றும் பவன் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். பவன் கடந்த வருடம் தான் பிறந்தார். அவருக்கு இன்று முதல் பிறந்தநாள். அதை அவருடைய குடும்பத்தினர்கள் கொண்டாடுகின்றனர். இது குறித்து சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் மகனின் பிறந்தநாள்
அதில் "எங்கள் மகிழ்ச்சியை மும்மடங்காக்கிய கடைக்குட்டி பவனுக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று சிவகார்த்திகேயன் குறிப்பிட்டு இருக்கிறார். அதுபோல சிவகார்த்திகேயனின் மனைவியும் சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அவரும் தன்னுடைய மகன் மற்றும் கணவருடன் எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

குடும்பம் முக்கியம் பிகிலு
சிவகார்த்திகேயன் என்னதான் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் குடும்பத்தோடு அடிக்கடி வெளியே சென்று, அங்கு எடுக்கும் புகைப்படங்களையும் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்தோடு சென்றிருந்தார். அப்போது நடிகர் அஜித் அவருடைய குடும்பத்துடன் வந்திருந்தார். இரண்டு குடும்பமும் ஒன்றாக கிரிக்கெட் நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்து இருந்தனர். அந்த புகைப்படங்களும் சோசியல் மீடியா பக்கங்களில் ட்ரெண்டானது.
மாமனார் செய்த உதவி
சிவகார்த்திகேயன் திருமணம் செய்த ஆர்த்தி அவருடைய சொந்த மாமன் மகள் தான். சிவகார்த்திகேயன் தந்தை இறந்த பிறகு அவருடைய குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தது ஆர்த்தியின் அப்பா தான். தன்னுடைய மாமனார் இல்லை என்றால் தன்னால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்று பல இடங்களில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications