சினிமால ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்தவரு சிவகுமார்! அந்த நடிகை தான் அசிங்கப்படுத்திட்டாங்க! தயாரிப்பாளர் ஓபன்
சென்னை: நடிகர் சிவகுமார் தான் சினிமாவில் எந்த நடிகையுடனும் கிசுகிசுப்புவில் சிக்காதவர், தமிழ் சினிமாவில் ஒழுக்கமான நடிகராக வாழ்ந்தார் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஃபிலிமிபீட் யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கிறார். அதோடு சிவகுமாரை சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஒரு நடிகை அசிங்கப்படுத்தியது பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
நடிகர் சிவக்குமார் 80ஸ் காலகட்டத்தில் இருந்து தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதற்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். அதிலும் பல முன்னணி நடிகர்களுக்கு அண்ணனாகவும், அப்பாவாகவும் இவர் நடித்து வந்த நேரத்திலேயே சீரியலிலும் களம் இறங்கி இருந்தார். சீரியலில் சித்தி சீரியல் இவருக்கு பெரிய லெவலில் பெயர் வாங்கி கொடுத்தது. ஆனால் திடீரென்று சினிமாவை விட்டு விலகிவிட்டார். அது குறித்து சமீபத்தில் பத்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியிருக்கிறார்.

அதில் பாலாஜி பிரபு பேசும்போது, தான் பார்த்தவரையில் சிவக்குமார் தான் ஒழுக்கமான நடிகர் என்று சொல்லி இருக்கிறார். அதாவது எந்த நடிகையிடமும் தவறாக பேசாமல் கண்ணியமாக நடக்கக் கூடியவர். அவரோடு நடித்த பல நடிகைகள் அவரை காதலிப்பதாக அவரிடமே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர் அதை எதையுமே மனதில் ஏற்றுக் கொள்ள மாட்டார். நடிப்பு என்றால் அதை நடிப்பாக மட்டும் பார்க்க வேண்டும் அதற்கு பிறகு நாம் அதைப் பற்றி மனதில் ஏற்றுக்கொள்ள கூடாது என்று சொல்பவர்.
அதேபோல அவருடைய அம்மா சொன்ன பொண்ணை தான் சிவகுமார் கல்யாணம் செய்து கொண்டார். அதனாலேயே அவர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அதுபோல சினிமாவில் நடிக்கும் போதும் நேர்மையாக இருப்பாரு ஏழு மணிக்கு ஷூட்டிங் என்றால் 6:45 சூட்டிங் சரியா வந்துருவாரு. முதல் ஆளாக மேக்கப் எல்லாம் போட்டு ரெடியா இருப்பாரு. ஒரு பெரிய டயலாக் இருந்தால் அதை முந்தைய நாளே வாங்கி காலையில் எழுந்து வீட்டில் அதை ரிகர்சல் பார்த்துவிட்டு வருவாரு.
எக்காரணம் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து நாம ரீ டேக் எடுக்க கூடாது என்கிற நினைப்பு அவருக்கு உண்டு. அதனால்தான் அவர் சில இடங்களில் கோபப்பட்டு கூட பேசிக் கொண்டிருக்கிறார். அதுபோல சிவகுமார் சித்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் ஒரு சம்பவம் நடந்தது இருக்கிறது. அதாவது அவர் ஒரு முக்கியமான காட்சியில் ரொம்பவும் மெனக்கட்டு நடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ஒரு நடிகை தன்னுடைய காதலனுடன் போன்ல பேசி சிரிச்சுக்கிட்டே இருந்திருக்காங்க.
அந்த நடிகை பெரிய நடிகை கூட கிடையாது. இவர் அவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர் கஷ்டப்பட்டு நடிச்சிட்டு இருக்கிறபோது இவங்க கத்தி பேசி இவரை அசிங்கப்படுத்துற மாதிரியே பண்ணிட்டு இருக்காங்க. அப்ப அவர் அந்த நடிகையிடம் சென்று இங்க நான் கஷ்டப்பட்டு பேசிட்டு இருக்கேன் நீங்க கொஞ்சம் தள்ளி உக்கார்ந்து பேசி சிரிக்க கூடாதா என்று கேட்டதற்கு அந்த நடிகை இவரை அசிங்கப்படுத்துவது போல ரியாக்ஷன் செய்து விட்டு போய் விட்டாராம். அதனால் தான் சிவகுமார் கோபமாகி அதற்கு பிறகு நடிக்கவே போகல என்று பாலாஜி பிரபு பேசியிருக்கிறார்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications