பேசி பேசியே சிவக்குமார்.. சிவாஜி கணேசனின் "வீரபாகு" நினைவிருக்கா? மொட்டை ராஜேந்திரன் கிரேட்: பிரபலம்
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெயிலர் நேற்றுமுன்தினம் நடந்தது. அதில் சிவகுமார் பேசும்போது, தமிழ்நாட்டில் சிக்ஸ்-பேக் வச்சவன் யாரு இருக்கா? என்று கேட்டிருந்தார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கருத்து கூறியிருக்கிறார்.
Cheyyaru Balu யூடியூப் சேனலில் பேசியிருக்கும் பாலு, "விழாவில் சிவக்குமார் பேசியதுமே சலசலப்பு பற்றிக் கொண்டுவிட்டது. அன்பினால் அதை சொல்லியிருக்கலாம்.. அல்லது தியேட்டர்களை மகனுக்கு தரவில்லையே என்ற கோபத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். கங்குவா படத்தின் மீதான விமர்சனம், தாக்குதலாகவும் இருக்கலாம். எனினும், இப்படி பேசணுமா? என்ற கேள்விதான் எழுகிறது.
சிவாஜி கணேசன் பெருந்தன்மை

கந்தன் கருணை படத்தில், முருகன் கதாபாத்திரத்தில் சிவக்குமார் நடித்திருந்தார்.. அதே படத்தில் வீரபாகு என்ற சின்ன கேரக்டரில் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். அதில் சிவாஜி, ஒரு நடை நடந்து வரும்போதே, தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழித்தது.. அந்த படத்தின் வெற்றிக்கு காரணமே நடிகர் திலகம்தான்..
கந்தன் கருணை படத்தில் சிவக்குமாருக்கு, மிகப்பெரிய உறுதுணையாகவும், பலமாகவும், இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். இதை ஒரு பேட்டியில் சிவக்குமாரே சொல்லியிருக்கிறார்..
இப்போது சூர்யா ஒரு உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார்.. ஆனால், வளரக்கூடிய ஹீரோ யாராவது ஒருவருக்கு, சிவாஜி நடித்த வீரபாகு போல கேரக்டரை சூர்யா செய்து தருவாரா? இத்தனைக்கும் இப்போதைவிட, அந்த காலத்தில் சினிமா மிகவும் செழிப்பாக இருந்தது.. இன்னைக்கு சினிமா எடுப்பது எளிது, ஆனால் கூட்டத்தை தியேட்டருக்கு கொண்டுவருவது கஷ்டமான விஷயமாகும்.
எம்ஜிஆரின் என் அண்ணன்
அதேபோல, உயர்ந்த மனிதன் என்ற படத்தில் சிவக்குமார் நடித்து கொண்டிருந்தபோது, இந்த படத்தை தவிர வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று ஏவிஎம்மில் அக்ரிமெண்ட் போடப்பட்டது.
அப்போது எம்ஜிஆர் "என் அண்ணன்" என்ற படத்தில் சிவக்குமாரை தம்பி கேரக்டரில் நடிக்க வைத்து எடுக்க நினைத்தார். இதைக்கேள்விப்பட்டதுமே, எம்ஜிஆருடன் நடிப்பதை நினைத்து சிவக்குமாருக்கு மிகவும் ஆசை.. ஆனால், ஏவிஎம்மில் அக்ரிமெண்ட் போடப்பட்டிருந்ததால், எம்ஜிஆருடன் நடிக்க முடியவில்லை. சிவக்குமார் நடிக்கவேண்டிய கேரக்டரில் முத்துராமன் நடித்திருந்தார்.
தன்னுடைய படத்தில் நடிக்க சிவக்குமார் ஆர்வமாய் இருப்பதை அறிந்து, காவல்காரன், தெய்வத்தாய், இதயவீணை என்று தொடர்ச்சியாக சிவக்குமாருக்கு வாய்ப்பு தந்தார் எம்ஜிஆர்.
அம்மாவுக்கு கை உடைந்தது
ஒருமுறை சிவக்குமார் தன்னுடைய பேட்டி ஒன்றில், "காவல்காரன் படத்தில் நடித்தபோது எம்ஜிஆருடன் பிரேக் நேரததில் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.. அப்போது என்னை பற்றி விசாரித்தபோது, என்னுடைய அம்மாவுக்கு கை உடைந்த விஷயத்தை சொன்னேன்.. இது தெரிந்தால், சினிமாவை விட்டுவிட்டு, நான் அம்மாவை கவனித்து கொள்ள வேண்டி வரும் என்பதால், கை உடைநத விஷயத்தை என்னிடம் மறைத்துவிட்டார் என்று எம்ஜிஆரிடம் சொன்னேன்.
அதற்கு பிறகு எம்ஜிஆருக்கு குண்டடி பட்டு மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை நடந்தது.. அப்போது மருத்துவமனைக்கு நானும் சென்று பார்த்தேன்.. என்னை பார்த்ததுமே "அம்மாவுக்கு இப்போது கை வலி எப்படி இருக்கு?" என்று விசாரித்தார்.. அவரது நினைவுத்திறனை பார்த்து அசந்துபோய்ட்டேன் என்று வியந்து சொன்னார் சிவக்குமார்.
ஆக, இத்தனை நடிகர்களையும் தாண்டிதானே சிவக்குமார் முன்னணிக்கு வந்தார்? போற போக்கில் , "என் மகனை தவிர வேற எவன் இருக்கிறான்?" என்று பாசத்தின் வெளிப்பாடாக, ஆணவத்தின் உச்சமாக பேசியிருக்கக்கூடாது.
சிக்ஸ் பேக் வைத்தவர்கள்
எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் முதல் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் மொட்டை ராஜேந்திரன்தான்.. ஆயிரக்கணக்கான படங்களில் ஸ்டன்ட் நடிகராக அவர் நடித்திருந்தாலும், நான் கடவுள் படத்தில்தான் இவர் பிரபலமானார். அதற்கு பிறகு, சரத்குமார், ரியாஸ்கான், தனுஷ் இத்தனை பேரும் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்கள்.
அப்படியிருக்கும்போது, சிவக்குமார் பேசியது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. கங்குவா படத்தில் 1000 கோடி அடிக்கும், 500 கோடி வசூல் அடிக்கும் என்று சொன்னவர்களும் சூர்யாவை அண்டி பிழைக்கும் ஒருசிலர்தான்.. இப்படி எல்லா சர்ச்சை விஷயத்துக்கும் இவர்களே காரண காரியங்களாகிவிட்டு, மீடியாவில் பேசுபவர்களையும், தியேட்டர் முன்னாடி விமர்சிப்பவர்களையும் திட்டுவதில் என்ன நியாயம்? என்றெல்லாம் கேட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications