கல்யாணத்துக்கு பிறகு என் வாழ்க்கையே மாறிடுச்சு.. நான் உருப்படியாக எடுத்த முடிவு! கன்னிகா ரவி உருக்கம்
சென்னை: பாடல்களால் காதலை பல கோணங்களில் எழுதி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சினேகன். அந்த காதல் வரிகளை எழுதிய மனிதரின் சொந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் சொல்வதுபோல, சமீபத்தில் அவர் மற்றும் அவரது மனைவி கன்னிகா ரவி கலந்து கொண்ட பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
அந்த பேட்டியில் இருவரும் தங்கள் திருமண வாழ்க்கை, காதல், புரிதல், சண்டைகள், சமாதானங்கள் என பல விஷயங்களை மிகவும் இயல்பாக பகிர்ந்தனர். குறிப்பாக கன்னிகா ரவி பேசும்போது அது ஒரு நடிகையின் பேச்சாக இல்லாமல், கணவரை பற்றி பெருமையாக சொல்லும் ஒரு மனைவியின் மனசு போலவே இருந்தது.

கன்னிகா ரவி பேட்டி
"கல்யாணத்துக்கு பிறகு தான் நான் ஒரு வித்தியாசமான வாழ்க்கையை அனுபவிக்கிறேன்" என்று தொடங்கிய அவர், சினேகனை வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்தது தான் தன்னுடைய சரியான முடிவு என்று உணர்ச்சியுடன் கூறினார். "இவர் என் வாழ்க்கையில் இல்லையென்றால் நான் என்ன ஆகியிருப்பேன் என்று சொல்ல முடியாது" என்று பேசத் தொடங்கினார்.
தொடர்ந்து கன்னிகா பேசிய சின்ன சின்ன சம்பவங்களே இந்த தம்பதியின் உறவு எவ்வளவு நெருக்கமானது என்பதை காட்டியது. "நான் திடீர்னு ஏதாவது வாங்கணும் என்று சொல்வேன். எல்லா பொருளும் வாங்குற ஆளு நான் இல்ல. ஆனா அப்படி சொன்னாலே 'அப்படியா... சரி வாங்கிக்கோ'ன்னு சொல்லிடுவார்.
ஒரு நாள் வெளியே போகணும் என்று சொன்னால் 'போயிட்டு வா'ன்னு சொல்வார். 'நீங்களும் வரணும்'ன்னா 'சரி நாளைக்கு போகலாம்'ன்னு ரெடி ஆகிடுவார். எதற்கும் அவர் எனக்கு நோ சொல்லவே மாட்டார். இப்படி யாராவது ஒருத்தர் என்னை புரிஞ்சுக்கிட்டு நடந்தது என் வாழ்க்கையில் இதற்கு முன்பு நடந்ததே கிடையாது" என்று கூறிய போது, அந்த பேட்டி முழுக்க ஒரு எமோஷனல் சூழல் உருவானது.
காதல் தான் காரணம்
அதோடு மட்டுமல்லாமல், "எனக்கு கோபம் வந்தாலும் அமைதியாக கேட்டு பேசுவார்... நான் பேசி முடிச்சதுக்குப் பிறகு தான் அவர் என்ன நினைக்கிறார் என்று சொல்வார்... அந்த பொறுமை தான் என்னை இன்னும் அவரிடம் கட்டிப்போடுகிறது" என்றும் கன்னிகா பகிர்ந்தார்.
மேலும் சினேகனை பற்றி பேசும்போது, அவர் ஒரு பிரபல பாடலாசிரியர் என்பதையும் தாண்டி, "வீட்டில் அவர் ரொம்ப சாதாரணமான மனிதர்... நான் சோர்வாக இருந்தால் உடனே கவனிக்கிறவர் இதுதான் பல பெண்கள் எதிர்பார்ப்பது அது எனக்கு கிடைக்கிறது எல்லோரும் இதேபோல இருந்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சனையை இருக்காது என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் சினேகனும் கன்னிகாவைப் பற்றி பேசும்போது, "என்னை முழுமையாக்கியது இந்த பெண்ணு தான்" என்றார். தனது வாழ்க்கையில் பல போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த அமைதி இந்த திருமணம் என்று நெகிழ்ச்சியோடு பேசி இருக்கிறார்.

காதலிலிருந்து கல்யாணம் வரை
இருவரின் காதல் பயணமும் சினிமாவை ஒத்த கதையே. வயது வித்தியாசம், வாழ்க்கை அனுபவ வித்தியாசம், சினேகனின் அரசியல் மற்றும் சமூக பயணம் - இதெல்லாம் இருந்தும், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு எடுத்த முடிவுதான் இந்த திருமணம். அதனால் தான் இந்த உறவை இருவரும் 'காதலுக்கு கிடைத்த வெற்றி' என்று பார்க்கிறார்கள்.
பாடல்களிலும் வாழ்க்கையிலும் காதல்
தமிழ் சினிமாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் சினேகன். காதல், தாய்மை, நட்பு, வலி - எந்த உணர்ச்சியையும் எளிய வார்த்தைகளில் சொல்லும் திறமையால் தனி இடம் பிடித்தவர். அவரது பாடல்களில் வரும் பெண் கேரக்டர்கள் போலவே தான் கன்னிகாவை அவர் பார்த்து நடத்துகிறார் என்று ரசிகர்கள் இந்த பேட்டியை பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரலாகும் பேட்டி
இந்த பேட்டியின் வீடியோ வெளியான பிறகு, "இப்படி ஒரு கணவர் கிடைக்கணும்" "இது தான் புரிதலான வாழ்க்கை" "சினேகன் எழுதுற காதல் வரிகள் வீணில்லை" என்று பலரும் கபில்ஸ் கொடுத்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications