Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Oneindia Special: திருமணம்தான் பெண்களின் வாழ்நாள் லட்சியமா? சிதைக்கும் சீரியல்கள்! ஆர்வலர் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாள் ஜூலை 18. வருடம், 2024. 21ம் நூற்றாண்டின் கால்பங்கை கடக்கப்போகிறோம். இன்ஸ்டாகிராம், ஸ்நாப் சாட், எல்லோர் கைகளிலும் புழங்குகிறது. டிஜிட்டலில் செய்தி வாசித்துக்கொண்டுள்ளோம், சென்னை, மும்பையில் செட்டில் ஆவது போல, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் நமது குடும்ப உறுப்பினர்கள் பலரும் புலம் பெயர்ந்து வசிக்கத் தொடங்கிவிட்டனர். இன்னமும், நமது தொலைக்காட்சி சேனல் சீரியல்கள் 1980க்கு முந்தைய கட்டுப்பெட்டித்தனமான காட்சிகளை காட்டிக்கொண்டுள்ளன என்றால் நம்ப முடிகிறதா.

காட்சி 1: விஜய் டிவியில் இப்போது ஒரு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதன், கதாநாயகி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பாலகி. டாக்டராக வேண்டும் என்ற நியாயமான ஆசையில் கல்வி பயில்கிறார். ஆனால், "திரையுலக மரபுப்படி" அவரை அந்த ஊரில் பணக்காரர் ஒருவரின் மகன் காதலிக்கிறார். தன்னுடைய காதலை தன்னுடைய பெற்றோரிடம் சொன்னதும், பொம்மையை விரும்பி கேட்டதும் வாங்கித் தரும் பெற்றோர் போல, கதாநாயகன் வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

television serial

"பொங்கி எழுகிறார்" கதாநாயகி (சிறுமி). திருமணத்தை நிறுத்துமாறு, கலெக்டருக்கு போன் செய்து புகார் சொல்கிறார். எனவே, திருமணம் நின்று போய் விடுகிறது. கதாநாயகனின் அப்பாவும், குழந்தை திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார் என்ற குற்றத்திற்காக ஜெயிலில் அடைக்கப்படுகிறார். வெயிட்.. எல்லாம் சரியாத்தானே போகிறது என்று மனசில் உங்களுக்கு ஒரு கேள்வி எழுமே.. இனிதான் மேட்டரே வருது லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்.

திடுக்கிடும் திருப்பம்: பணக்கார அப்பா சிறை சென்றது அவர்கள் குடும்பத்திற்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் அந்தப் பெண்ணுக்கு 18 வயது ஆனதும் அதே பெண்ணை தன்னுடைய மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று கதாநாயகனின் அப்பா ஆர்டர் போட, அந்த பெண்ணிற்கும் கதாநாயகனுக்கும் "திருமணம்" நடந்து விடுகிறது. டாக்டராக வேண்டும் என்று கனவோடு இருந்த அந்த பெண் திருமணத்திற்கு பிறகு என்ன செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு அந்த பெண் அவருடைய கணவரின் வீட்டில் "மரியாதையை காப்பாற்ற வேண்டும்" என்று சமையல் கற்றுக் கொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு முதலிரவு முடிந்திருக்கிறதாம். புரட்சி பேசிய அந்த பெண் பாத்திரம், இப்போது, தனது முதலிரவு கதையை வெட்கத்தோடு மாமியாரிடமும் சொந்த பந்தங்கள் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார் என காட்சி நீள்கிறது.

பெண் அடிமைத்தனம்: இதை ஒரு சாதனையாகவே கொண்டாடுகிறார்கள் குடும்பத்தினர். அந்தப் பெண்ணின் அம்மா போன் செய்து, "நல்ல விஷயம் நடந்திருக்கு இன்னமும் இதுபோல நல்ல விஷயம் நடக்கணும்" என்று ஆரவாரிப்பதாக ஒரு அற்புத காட்சியும் அந்த சீரியலில் உள்ளது.இது ஒரு சீரியலில் மட்டுமே நடக்கும் அபத்தம் இல்லை. பல சீரியல்களிலும் இதுதான் நடக்கிறது. இப்போது இந்த செய்திக் கட்டுரையின் முதல் வரியை திரும்ப ஒருமுறை படித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். பெண்கள் அதிகமாக விரும்பி பார்க்கும் சீரியல்களில் இன்னமும் பெண்களை அடிமைப்படுத்தும் காட்சிகள் மட்டும்தான் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதற்கு இல்லையா சார் ஒரு எண்ட், என்பது பலருடைய மனக் குமுறலாக இருக்கிறது. நிஜத்தில் இப்படி எல்லாம் நடக்குமா? என்று சந்தேகப்படும் அளவிற்கு பல சீரியல்களில் கதையை உருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

television serial

சமூக ஆர்வலர் அன்புச் செல்வி: இது குறித்து சமூக ஆர்வலர் மற்றும் மகளிர் நல அலுவலரான அன்புச்செல்வி, தன்னுடைய ஆதங்கத்தை "ஒன்இந்தியா தமிழிடம்" வெளிப்படுத்தி இருக்கிறார். "ஆமாம்.. இந்த மாதிரி சீரியல்களால் தான் பல குடும்பத்தில் பிரச்சனைகள் வெடித்து கொண்டு இருக்கிறது. சீரியல்களில் இப்படி காட்டுகிறார்கள் ஏன் இதை நாம் செய்யக்கூடாது என்ற சிந்தனை பலருக்கும் இயல்பாக வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு சக்திமான் சீரியல் வந்த போது குழந்தைகள் மத்தியில் பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. பல குழந்தைகள் சக்திமான் எங்களை காப்பாற்றுவார் என்று மாடியில் இருந்து கீழே குதித்தனர். அது அந்த நேரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதுபோலத்தான் இப்போது சீரியல்களில் பெண்களின் கட்டாய திருமணம் காட்சிகள் அதிகரிக்கப்படுவது கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

சீரியல்களில் பெண்களுக்கு கட்டாயமான திருமணம் செய்து வைக்கிறார்கள். பிறகு அந்த பெண்கள் கணவரின் குடும்பத்திற்காக பல தியாகங்களை செய்யும் தியாகிகளாகவே காட்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நிஜத்தில் இந்த மாதிரி யாராலும் இருக்க முடியாது. ஆனால் இது போன்ற ஒரு மாயையை சீரியலில் காட்டுவதை பலர் நம்பியும் விடுகிறார்கள். அதை நம்பி நாம் நம்முடைய குழந்தைக்கு இதுபோல கட்டாய திருமணம் செய்து வைத்தாலும் அவர் அதை ஏற்றுக்கொண்டு விடுவார் என்று அசட்டுத்தனமாக நம்பி விடுவார்கள். அதனால் இந்த மாதிரி காட்சிகளை வைப்பதை தவிர்ப்பது ரொம்பவே நல்லது.

television serial

பொதுவாக பல சீரியல்களில், கதாநாயகி ஏழையாகவும், கதாநாயகன் பணக்காரராகவும் காட்டப்படுகிறார்கள். இது பெண்களை இன்னமும் இவர்கள் அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் காட்டுகிறது. இதுவே சீரியல் எடுப்பவர்கள், எத்தனையோ பெண்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்களே அவர்களை இன்ஸ்பிரேஷனாக கொண்டு சீரியலை எடுக்கலாமே? அதை பார்க்கும் பெண்களுக்கு நாமம் இதுபோல வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஒரு மோட்டிவேஷன் உருவாகும்.

மதுரையில் நாங்கள் பல பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மற்றும் பியூட்டிஷியன் பயிற்சி, ஆரி ஒர்க் போன்றவை கற்று தருகிறோம். அதனால் சாதாரண குடும்ப பின்னணியைச் சேர்ந்த பெண்களும் முன்னேற்றம் அடைய வேண்டும், அந்த பெண்களின் முன்னேற்றத்தால் குடும்பம் முன்னேற வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கிறது. பல பெண்கள் அவர்களுடைய சுய கவுரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னேறி கொண்டு இருக்கிறார்கள். எனது சொந்த அனுபவத்திலேயே இப்படியான பெண்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் சீரியல்களில் இன்னமும் பெண்களை அபத்தமாக காட்டிக் கொண்டிருப்பது வருத்தமாக இருக்கிறது. இவ்வாறு அன்புச்செல்வி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+