ஆபாசம்.. தகுதி இல்லாத கமல்.. ஒரு போன் போட்டா பிக் பாஸ் வீட்டை நொறுக்கிடுவாங்க.. பிரபலம் சொன்ன பகீர்
சென்னை: சமூக ஆர்வலர் ராஜேஸ்வரி பிரியா பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பற்றி கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.
ஏற்கனவே ராஜேஸ்வரி பிரியா நடிகர் விஜய் மீதும் லியோ படத்தின் மீதும் புகார் கொடுத்து பிரபலமானவர்தான்.

அவர் இப்போது ஒரே ஒரு போன் போட்டால் போதும் பிக் பாஸ் வீட்டை போய் அடித்து நொறுக்கி விட்டு வந்து விடுவார்கள் என்று பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி விமர்சித்திருக்கிறார்.
விஜய் டிவியில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பகாலகட்டத்தில் சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கிறதே என்று ரசிகர்கள் திட்டிக் கொண்டிருந்த நிலையில் இப்போது பிரதீப்பை வீட்டை விட்டு வெளியேற்றியதில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு எதிராக பல கண்டன குரல்கள் எழுந்து வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் தீர விசாரிக்காமல் முடிவு எடுத்து விட்டார் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகர்கள், முன்னாள் பிக் பாஸ் பிரபலங்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு கமல்ஹாசன் இப்படி ஒரு தலை பட்சமாக நடந்திருக்கக் கூடாது. இது அவருடைய அரசியல் வாழ்க்கையையும் பாதிக்கும் என்றும் பலர் கருத்து கூறி வருகின்றனர். இப்படியாக இருக்கும் நிலையில் சமூக ஆர்வலர் ராஜேஸ்வரி பிரியா பிக் பாஸின் இந்த சீசனை பற்றி கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் கலாச்சாரத்தின் சீர்கேடே பிக் பாஸ் நிகழ்ச்சி தான் என்று கூறி இருக்கிறார். அதுவும் நிக்சனும் ஐசுவும் சேர்ந்து செய்கிற காரியத்தை பார்க்கும்போது கலாச்சாரம் எங்கே போகுதுன்னே தெரியலை. ஐசு கட்டி இருந்த வேட்டியை முட்டிவரை தூக்கி சரி செய்து கொண்டிருக்கிறார் நிக்சன்.. இதெல்லாம் பார்க்கத் தப்பா தெரியலையா? என்றும் ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதுபோல விசித்திரா ஆரம்பத்தில் இருந்தே பிரதீப்பை பற்றியும் அவர் பேசும் வார்த்தைகளை பற்றியும் வீட்டில் மற்ற போட்டியாளர்களிடம் சொல்லிக் கொண்டுதான் இருந்தார். ஒரு சமயம் விசித்ராவிடமே பிரதீப் யார் கூடயாவது படுக்கணும் போல இருக்கிறது என்று கூறினாராம். ஆனால் அதை அப்பவே பெரிய பிரச்சினையாக மாற்றி அன்றைக்கே பிரதீப்பை வெளியே அனுப்பி இருந்தால் இன்று கமல் சொல்வதற்கு தகுதி இருந்திருக்கும்.
ஆனால் கமல் சொல்வது போன்று அவர் ஒரு தவறை தண்டிக்க கூடியவராக இருந்தால் அதை விட்டுக் கொடுத்துப் போக மாட்டார். சிறிய தண்டனையாவது கொடுப்பார். மன்னிப்பு கூட கேட்க சொல்லுவார்கள் ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு இவ்வளவு நாள் பிரதீப்பை பேச விட்டு வேடிக்கை பார்த்து இப்போது அவரை வெளியேற்றி வைத்திருப்பது மக்களை ஏமாற்றுவதற்கு சமம்.
அதுபோல இந்த நிகழ்ச்சி மூலம் தவறான கலாச்சாரத்தை புகுத்துகிறார்கள், ஆபாச உடைகளை பெண்கள் அணிகிறார்கள். அதுமட்டுமா உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் சிலர் பேசும் டாப்பிக் கூட ரொம்ப மோசமாகவே இருக்கிறது என்று ராஜேஸ்வரி பிரியா பேசியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications