Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹீரோயின்ஸ் மட்டும்தானா.. நாங்களும் பண்ணுவோம்ல.. கலக்கலாக குதித்த சுபலட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல நடிகைகள் இணையதளத்தில் கலக்கிக் கொண்டு வந்து இருக்கும்போது சீரியல்களையும் கலக்கிக்கொண்டு இணையதளத்தையும் கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் சுபலட்சுமி ரங்கனின் போட்டோஸும் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Recommended Video

    2K KIDS லாம் வேற லெவல் | ACTRESS SANDRIYA CHAT | FILMIBEAT TAMIL

    இவர் சீரியல்களில் வில்லியாக வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். அது போதாதென்று விதவிதமாக ரசிச்சு ரசிச்சு போட்டோ எடுத்து அப்லோட் பண்ணி கொண்டிருக்கிறார்.

    இந்த போட்டோஸ்கள் பார்த்த ரசிகர்களுக்கு சீரியல்களில் வில்லியாக தெரிந்த இவர் தற்போது இணையதளத்தில் தேவதையாக தெரிகின்றாராம். சும்மா சொல்லக் கூடாது.. பெரிய திரையிலும் ஜொலிக்க கூடிய திறமை சுபலட்சுமிக்கு நிறையவே இருக்குங்க.

    பாண்டியிலிருந்து வந்த தேவதை

    பாண்டியிலிருந்து வந்த தேவதை

    இவர் பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். தனக்குப் பிடித்தமான மாடலிங்கில் காலடி எடுத்து வைத்து அதன் மூலம் ஷார்ட் பிலிம் களிலும் நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் அது இவரது வீட்டிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம். ஆனால் இவர் ரொம்பவும் பிடிவாதம் பிடித்து தான் மாடலிங்கில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவரது ஆசை டாக்டர் ஆவதுதானம் .

    மாடலிங் டூ நடிப்பு

    மாடலிங் டூ நடிப்பு

    ஆனாலும் அது நிறைவேறாத காரணத்தினால் இன்னொரு ஆசையான நடிகையாக வேண்டும் என்பது கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று மாடலிங்கில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். முதலில் வீட்டில் இருந்தவர்கள் சம்மதிக்காமல் இருந்தாலும்,இவர் நடிக்க ஆரம்பித்த பிறகு இவருக்கு முழுக்க சப்போர்ட் பண்ணி இருக்கிறார்கள். இப்ப வரைக்கும் இவர் நடிக்க போகும் இடங்களுக்கெல்லாம் இவரது அப்பா துணைக்கு சென்று விடுவாராம்.

    நல்ல வாய்ப்பு

    நல்ல வாய்ப்பு

    மாடலிங்கில் நடித்துக்கொண்டிருக்கும் போது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி குறும்படங்களிலும் கலக்கியுள்ளார். அதன் மூலம் தனது நடிப்புத் திறமையை நிரூபித்திருக்கிறார். இதனை பார்த்து இரண்டு திரைப் படங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அந்த படங்களில் இவர் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் இவர் சீரியல்களில் தன் கவனத்தை செலுத்த தொடங்கியிருக்கிறார்.

    பார்வையிலேயே அசத்தல்

    பார்வையிலேயே அசத்தல்

    இதன் மூலமாக இவருக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகள் சீரியலில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் முழுக்க முழுக்க இவரது பங்கு இருப்பதால் இவருக்கு ரசிகர்களிடம் நன்றாக ரீச் ஆக முடிந்தது. வில்லத்தனத்தை முழுமையாக தனது கண்களாலேயே காட்டி விடுவது சிறப்பாக நடிப்பு திறமையை வெளிப்படுத்த முடிந்தது. இவரது கண்களுக்கு அப்படி ஒரு சூப்பர் பவர் இருக்கு.. ப்பா.. சூப்பர்.

    வில்லிதான் பிடிச்சிருக்கு

    வில்லிதான் பிடிச்சிருக்கு

    இந்த சீரியலை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து வந்த கொண்டிருந்தார் .ஆனால் அவருக்கு எந்த சீரியல்களை விடவும் அழகிய தமிழ் மகள் சீரியல் இதுதான் கேரக்டர் முழுமையாக கிடைத்திருந்ததாம். தற்போது இவர் கண்மணி சீரியலில் ஒரு நடிகையாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த சீரியலிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முன்பு புசுபுசு என்று அழகாக இருந்தவர் இப்போது சிக்குனு கதாநாயகிகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு கலக்கலாக மாறியுள்ளார்.

    காந்தமென ஈர்க்கும் கண்ணழகி

    காந்தமென ஈர்க்கும் கண்ணழகி

    இவர் இணையதளத்தையும் விட்டுவைக்காமல் தன்னுடைய காந்த பார்வையால் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். விதவிதமான போட்டோக்களை குவிக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிக் கொண்டே வருகிறது பல ரசிகர்கள் இவரது கண்களை பார்த்து புகழ்ந்து தள்ளிக் கொண்டும் இவரது போட்டோவை ரசித்து ரசித்து கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். பலர் இவரது பார்வைக்கு அடிமை என்றால்.. அசரடிக்கும் அழகுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்களாம். .விரைவில் வெள்ளித்திரையிலும் கலக்க வாழ்த்துவோம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+