ரூ.100 கோடி சொத்துக்கள் ராஷ்மிகாவுக்கு? இது எப்போ? படத்துக்கு 8 கோடி? ஊரெல்லாம் இதே பேச்சா இருக்கே
சென்னை: ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக சிக்கந்தர் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அது மட்டுமல்ல படம் குறித்த தகவல்களையும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், புது தகவல் ஒன்று பரவிவருகிறது.
கன்னடத்தில் 2016-ல் வெளியான "கிரிக் பார்ட்டி" படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலுங்கில் நடித்த புஷ்பா படம் திருப்புமுனையை ஏற்படுத்தியதுடன் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். பட வாய்ப்புகளும் குவிந்ததையடுத்து, ஒரு படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ராஷ்மிகா மீது ஒரு சலசலப்பு கிளம்பியது.. AramNaadu யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் சமீபத்தில் தந்திருந்த பேட்டியில், "நடிகை ராஷ்மிகாவுக்கு எதிராக கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏவே கண்டன கருத்துக்களை சொல்லி வருகிறார்..
"கர்நாடகாவா? பெங்களூரா? அது எங்கே இருக்கு" என்று ராஷ்மிகா கேட்டதாக, காங்கிரஸ் எம்எல்ஏ குற்றஞ்சாட்டுகிறார்.. கர்நாடகாவில்தான், ராஷ்மிகா பிறந்து, வளர்ந்து, படித்திருக்கும்போது, சொந்த மாநிலத்தை எப்படி குறை சொல்வார்? ஒரு இடத்தை பிடிக்காமல் போல பல காரணங்கள் இருக்கலாம்.
பின்னப்பட்ட சர்ச்சைகள்
"என்னுடைய ஊர்" என்று ஆந்திராவை உணர்ச்சிவசப்பட்டு சொல்லியதாக தெரிகிறது. இதைவைத்தே கர்நாடகாவில் ராஷ்மிராவுக்கு எதிரான அலையை உருவாக்க நினைக்கிறார்கள்.
சாதாரண பிரச்சனையை மாநில பிரச்சனையாக மாற்றி கொண்டிருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. நாளைக்கு கர்நாடகாவில் ராஷ்மிகா படம் வெளியானால் அதை தடை செய்ய முடியாது.. ஒன்றிரண்டு நாள் தடுத்தாலும், அதை தொடர முடியாது. ஆனால் தேவையில்லாமல் மனஉளைச்சலை ராஷ்மிகாவுக்கு தந்து கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்கள்.
100 கோடி சொத்துக்களா
இந்நிலையில் ராஷ்மிகா வைத்துள்ள சொத்துக்கள் விவரம் பற்றிய தகவல் வெப்சைட்களில் பரவி வருகிறது. அதன்படி, அவரது மதிப்பு ரூ.100 கோடியை நெருங்குவதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது..
திரைப்படம் மட்டுமின்றி, விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா.. பல வர்த்தக நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருந்தும் சம்பாதிக்கிறார். பெங்களூருவில் ரூ.8 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா வீடு உள்ளதாகவும், நிறைய விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்துள்ளார். மும்பை, கோவா, கூர்க், ஐதராபாத் பகுதிகளிலும் அவருக்கு நிறைய சொத்துக்கள் உள்ளனவாம். இதுதான் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
சிக்கந்தர் ரிலீஸ்
ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக சிக்கந்தர் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அது மட்டுமல்ல படம் குறித்த தகவல்களையும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அப்போது ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவிடம் உங்களுடைய மிகப்பெரிய பயம் எது? என்று கேடடதற்கு "மிக உயரமான இடங்களும் ஆழமான தண்ணீர் பகுதியும் எனக்கு எப்போதுமே பயம் தருபவை" என்று கூறியுள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications