தொட்டு பேசாதீங்க, நான் கடவுளுக்கு சமம்.. ராஜா சொன்னதுமே ஆடிப்போன டைரக்டர்? உடைத்து பேசிய பிரபலம்
சென்னை: பிரசாத் ஸ்டுடியோவினர், அந்த இடத்தை கேட்டபோது இளையராஜா தர மறுக்கிறார்.. அங்கிருந்து நகர மறுக்கிறார்.. காலி செய்ய மறுக்கிறார்.. இதெல்லாம் தவறுதான்... அவ்வளவு பெரிய மாமேதை இதையெல்லாம் செய்திருக்கக்கூடாது.. கேட்டதுமே விட்டுத்தந்திருக்கலாம்" என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Realone media யூடியூப் சேனலுக்கு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி தந்துள்ள பேட்டியில், "1980, 90-களில் இளையராஜாவிடம் தலைக்கணம் இருந்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.. அந்த காலகட்டத்தில் அவரிடமிருந்த ஆட்டிடியூட் கண்டிக்கத்தக்கது.. தன்னை சாமியாக பார்க்க வேண்டும், கடவுளாக போற்ற வேண்டும், எல்லாருடனும் சேர்ந்து உட்கார்ந்து பேசக்கூடாது, ஒன்றாக இணைந்து சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்வாராம்..

ராஜா: ஒரு பிரபலமான மறைந்த மூத்த இயக்குனர்.. இன்று பிரம்மாண்ட இயக்குனரின் பெயரை கொண்ட அந்த மூத்த இயக்குனர், நிறைய பக்தி படங்களை அன்றைய காலங்களில் எடுத்தவர்.. ஒருமுறை இளையராஜாவை ஸ்டுடியோவில் எதேச்சையாக சந்தித்த அந்த டைரக்டர், அன்பு மிகுதியில், "ராஜா" என்று சொல்லி பிரியத்துடன் கட்டிப்பிடித்துள்ளார்.
உடனே இளையராஜா அவரது கையை விலக்கிவிட்டு, "தொட்டு பேசாதீங்க.. நான் கடவுளுக்கு சமமானவன், ஏன் தொட்டு பேசுறீங்க" என்று கேட்டாராம். சினிமா வட்டாரத்தில் உள்ள எல்லாருக்குமே இந்த விஷயம் தெரியும். இது உண்மையும்கூட..
தலைக்கனம்: அந்த அளவுக்கு தலைக்கனத்துடன், ஆவணத்துடன், யாரையுமே எடுத்தெறிந்து பேசியதாக அவர் மீது நிறைய விமர்சனங்கள் இருந்தது. ஆனால், இன்று பக்குவப்பட்டுள்ளார். அவரது வாழ்வில் கிடைத்த கஷ்டங்கள், சிக்கல்கள், குடும்பத்தின் இன்னல்கள், மனைவி, மகள் இழப்பு இப்படி அனைத்தையும் தாண்டி, பக்குவப்பட்ட மனிதராக இருக்கிறார்.
கலையில் மூழகி, கலையில் ஊறி, கலைக்காகவே வாழ்ந்து வருகிறார் இளையராஜா.. கலைக்காகவே வாழ்ந்து, குழந்தைகளை கூட கவனிக்காமல் போய்விட்டதாக, பவதாரணியின் நினைவுநாளில் ஆடியோவில்கூட கூறியிருக்கிறார். அப்படியானால், கலைக்காக எவ்வளவு பெரிய சேவையை இளையராஜா செய்திருப்பார்? உள்ளுக்குள் கலை ஆர்வம் உள்ளவர்கள், ஆன்மீகத்தை தேடத்தான் செய்வார்கள்.
எளிய உடை: இளையராஜா நினைத்திருந்தால், என்ன டிரஸ் வேண்டுமானாலும் அணியலாம். ஆனால், சாதாரண வெள்ளை வேட்டியில் எளிமையாகதான் இருக்கார்.. அதை எப்படி பிராமணர் டிரஸ் என்று குறிப்பிட வேண்டும்? பிராமணர்கள் மட்டும்தான் வெள்ளை வேட்டி, சட்டை அணிய வேண்டுமா? இளையராஜா போடக்கூடாதா? இசைக்காகவே, தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அனைத்திலிருந்தும் விலகி வாழ்ந்து வருகிறார்.. அவரது உடையை வைத்து, அப்படி குறிப்பிட்டு பேசக்கூடாது.
பிரசாத் ஸ்டுடியோவுக்கு கடைசிவரை இளையராஜா வாடகை தரவில்லை என்பார்கள். உண்மையை சொல்லப்போனால், இளையராஜா இருந்ததால்தான், பிரசாத் ஸ்டுடியோவுக்கு வெளிச்சம் கிடைத்தது.. அதற்காக பிரசாத் ஸ்டுடியோவை குறைத்து மதிப்பிடவில்லை.. அது பெரிய ஸ்தாபனம்தான்.. ஆனால், இளையராஜா ஸ்டுடியோ வைத்திருந்ததால் தான், பிரசாத் ஸ்டுடியோவுக்கு பெருமை சேர்ந்தது.
இளையராஜா: ஆரம்பத்தில் இளையராஜாவிடம் வாடகையே வேண்டாம் என்று பிரசாத் ஸ்டுடியோ சொல்லியதாக, நான் கேள்விப்பட்டேன்.. ஆனால், ஒரு காலகட்டத்திற்கு பிறகு, அந்த இடம், ஸ்டுடியோவுக்கு தேவைப்பட்டது. அப்போதுதான் அந்த இடத்தை கேட்டபோது இளையராஜா தர மறுக்கிறார்.. அங்கிருந்து நகர மறுக்கிறார்.. காலி செய்ய மறுக்கிறார்.. இதெல்லாம் தவறுதான்... அவ்வளவு பெரிய மாமேதை இதையெல்லாம் செய்திருக்கக்கூடாது.. கேட்டதுமே விட்டுத்தந்திருக்கலாம்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications