அடடா.. மாடர்ன் உடையில் தனம் அண்ணி போட்ட ஆட்டம்... கலகலப்பான ரசிகர்கள்
சென்னை : இவரா இப்படி என்று பார்ப்பவர்கள் அசந்து போகும் வகையில் மாடர்ன் உடையில் செம ஆட்டம் போட்டிருக்கிறார் சுஜிதா.
அம்மாவும் பையனும் பிரண்ட்ஸ் ஆக இருக்கலாம் .ஆனால் வீட்டில் இருக்கும்போது அம்மாவும் பையனும் பாட்டை போட்டு கொண்டு போட்ட குத்தாட்டத்தை பார்த்து ரசிகர்கள் அடடே என்று உச்சு கொட்டி வருகின்றனர்.
சினிமா வேறு நிஜம் வேறு என தற்போது ரசிகர்களுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்திருக்கிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி.

பொறுமையின் சிகரம்
விஜய் டிவியின் குடும்ப சீரியலான பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூத்த மருமகள் தான் சுஜிதா. தற்போது சுஜிதா என்று சொன்னால் யாருக்கும் தெரிவதில்லை தனம் அண்ணி என்று சொன்னால் தான் ரசிகர்களின் மனதில் டக்கென்று என்று ஞாபகம் வந்துவிடும். இந்த சீரியலின் கதை பல திரைப்படங்களில் கதைகளை போன்று இருந்தாலும் இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருப்பது அனைவருக்கும் தெரியும்.

கொழுகொழு குழந்தையாக
அதுவும் இந்த வீட்டை கட்டிக்காக்கும் குடும்பத் தலைவியாக வீட்டின் மூத்த மருமகளாக சுஜிதா தன்னுடைய கேரக்டரில் நடிக்கிறார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்துவருகிறார். குழந்தை நட்சத்திரமாக என்று கேள்விப் பட்டிருப்போம் ஆனால் இவர் நடிப்பு என்றால் என்ன என்று தெரியாத வயதியிலேயே நடிப்பை தொடங்கிவிட்டார் .முதல் முதலாக அப்பாஸ் என்னும் திரைப்படத்தில் தொடங்கி முந்தானை முடிச்சு என்னும் திரைப்படத்தில் கொழுகொழுவென துருதுரு பார்வையால் அனைவரையும் கவர்ந்து இழுத்து விட்டார் .

பெரிய ஹீரோக்களுடனும்
அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .பம்பாய் ,தேவர்மகன், ரோஜா ,வாலி என இவருடைய நடிப்பு சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு திரைப்படங்களில் குழந்தையாக இருக்கும்போதே நடிக்க ஆரம்பித்த இவர் சீரியலையும் விட்டுவைக்கவில்லை. உறவுகள், மகாராணி ,மருதாணி , திருவிளையாடல், அக்கா தங்கை ,பிருந்தாவனம் என பல சீரியல்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தவர்

பையனுடன் தான் பொழுதுபோக்கு
தற்போது பாண்டியன் ஸ்டோரில் தனமாக வாழ்ந்துவருகிறார் .சீரியலில் இவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தான் ஒரு குழந்தையின் அம்மா என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். இவருக்கு ஒரு பையன் மட்டுமே இருக்கும் நிலையில் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் பையனுடன் நேரத்தை செலவு செய்வது தான் தன்னுடைய பொழுதுபோக்கு என்று கூறியிருக்கிறார்.

செம ஆட்டம் தான்
இருவரும் இவருடைய மகனுடன் சேர்ந்து ஒரு யூடியூப் சேனலை வைத்திருக்கிறார் . அதில் இவர்கள் இருவரும் கதை கேளு கதை கேளு என்று ஊருக்கே கதை கூறிக் கொண்டிருக்கின்றனர். தற்போது கதையை சொல்லி போரடித்து விட்டது என்ன ஆட்டம் போட்டிருக்கின்றனர். இவர்களுடைய ஆட்டத்தை பார்த்த ரசிகர் இன்ஸ்டாகிராமை மிரள வைத்து வருகின்றனர் .அந்த அளவிற்கு இவருடைய ஆட்டம் வெறித்தனமாக இருக்கிறது.

மாடர்ன் உடையில் செம ஆட்டம்
இவர் நடிக்காத சேனல்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு பல வருடங்களாக தொடர்ந்து சின்னத்திரை ,வெள்ளித்திரை என் கலக்கிக் கொண்டிருக்கும் இவருடைய லேட்டஸ்ட் வீடியோவை பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் மாடல் உடையில் இவரா இப்படி என சிலர் புலம்பித் தள்ளி வருகின்றனர். என்ன இருந்தாலும் இவர் வெளியிட்ட வீடியோவில் இவரைத் தவிர வேறு எதையும் பார்க்காமல் சில ரசிகர்கள் கண் இமைக்காமல் ரசித்து வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications