அந்த நேரத்தில் விலகிய ஆடை..சில்க் ஸ்மிதா சொன்ன வார்த்தை..ஆனால் நிஜத்தில்! மனம் திறந்த நடிகை சுலக்ஷனா
சென்னை: நடிகை சில்க் ஸ்மிதா பற்றி பல ரகசியங்களை நடிகை சுலக்ஷனா மனம் திறந்து பேசி இருக்கிறார்.
சூட்டிங் ஸ்பாட்டில் சில்க் ஸ்மிதா எப்படி நடந்து கொள்வார் என்று சுலக்ஷனா ரகசியத்தை பகிர்ந்திருக்கிறார்.
விலகி இருக்கும் உடையை சரி செய்ய சில்க் ஸ்மிதாவிடம் சொன்னால் என்ன பதில் கிடைக்கும் என்று சுலக்ஷனா கூறியதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

வெள்ளி திரையில் தன்னுடைய கண் அசைவாலே பலருடைய மனதை பறித்து கொண்டவர் தான் சிலுக் ஸ்மிதா, அவர் மறைந்து வருடங்கள் பல ஆனாலும் பலருடைய மனதில் இப்பவும் அவருடைய பொன் சிரிப்பும், அந்த காந்தக்கண் பார்வையும் டக்கென்று நினைவிற்கு வந்துவிடும்.
அத்தகைய வசீகரம் மிக்க சில்க் ஸ்மிதா தமிழில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலமாக தான் அறிமுகம் ஆகியிருக்கிறார். அதற்கு பிறகு இவர் தமிழில் கவர்ச்சி கன்னியாக கொடிகட்டி பறந்து தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.
தன்னுடைய கட்டழகாலும், காந்த கண்களாலும், வசீகரிக்கும் பேச்சாலும் பலருடைய கனவு கன்னியாக இப்ப வரைக்கும் பலருடைய நினைவுகளில் வாழும் சில்க் ஸ்மிதா ஒரு காலகட்டத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்திருந்த அவருடைய புகைப்படத்தை பயன்படுத்தினாலே இளைஞர்கள் கூட்டம் அத்த திரைப்படத்திற்கு முந்தி அடித்திருக்கிறது.

என்னதான் இவரைப் பற்றி பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளும் கிளம்பி கொண்டு இருந்தாலும் அவரைப் பற்றி பேட்டி கொடுக்கும் அவரோடு நடித்த நடிகர் எல்லோரும் அவரை பாராட்டி தான் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை சுலக்ஷனா சில்க் ஸ்மிதா பற்றி சில விஷயங்களை தற்போது ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதில் சில்க் பழகுவதற்கு ஒரு குழந்தை மாதிரி என்றும் அவரை மாதிரி ட்ரெஸ்ஸிங் யாராலும் அந்த அளவு பயன்படுத்த முடியாது என்றும் சரியான உடல் அமைப்பை கொண்டவர் என்றும் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அவருடைய ஆடைகளை தேர்வு செய்வதில் யாராலும் அவரைப்போல செய்யவே முடியாது. அவர் படிக்கவில்லை என்றாலும் ட்ரெஸ்ஸிங் சென்சில் மிகவும் கவனமாக இருப்பார் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் படபிடிப்பு தவிர சூட்டிங் ஸ்பாட்டில் சும்மா ஓய்வாக இருக்கும் நேரத்தில் உடைப்பற்றி கவலைப்பட மாட்டாராம். ஆடைகள் எல்லாம் கலைந்து இருக்குமாம்.அப்போது சுலக்ஷனா மேலே ஒரு டவல் போட்டு உட்காரு என்று சொன்னாராம். அதற்கு சில்க் பரவாயில்லக்கா பார்த்தால் பார்த்துட்டு போகட்டும் என்று சின்ன புள்ள மாதிரி அப்போ சொல்லுவார் என்று சுலோக்ஷனா கூறி இருக்கிறார்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications