குழந்தையை குறித்து நெகிழ்ச்சியாக பதிவு வெளியிட்ட கயல் சீரியல் நடிகை... குவிந்து வரும் ஆசீர்வாதங்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடிக்கும் அபிநயா கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் ஆசிர்வாதங்களை பெற்று வருகிறது.
கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் அபிநயா தற்போது எளிமையாக தன்னுடைய வளைகாப்பு பங்க்ஷனை முடித்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் நடித்துவரும் தீபக்கை அபிநயா காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.

கடலைக் காட்டிலும் ஆழமான அன்பு
சீரியல் நடிகை ஆன அபிநயா ஆரம்பத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை மறைத்து வந்த நிலையில் இவருக்கு குழந்தை பிறப்பதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், இவருடைய வயிறு அனைவருக்கும் தெரிவதற்க்கு துவங்கிய பிறகு தன்னுடைய கர்ப்பமாக இருக்கும் செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டிருந்தார். இவருக்கு எப்போது டெலிவரி டேட் என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் அபிநயாவின் கணவரான தீபக், "ஒரு சிறிய குழந்தை காலையில் எழுந்ததும் அதன் தொட்டிலில் சூரியன் பிரகாசிப்பதைக் கண்டு கூச்சலிடும்போது அல்லது சிரிக்கும்போது அதன் கண்களில் வெளிப்பாட்டில் கடலையும் காட்டிலும் ஆழமான எல்லையற்ற நித்தியமான, ஒன்றை காண்கிறேன் என்று நான் நினைக்கிறேன்" பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஆவலோடு காத்திருப்பு
அதுபோல அபிநயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என்னில் பாதியும் நான் காதலிப்பதில் பாதியும் உள்ள இந்த உலகத்தை சந்திப்பதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன். இன்னும் சில நாட்களே உள்ளது. அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் நீ எனக்கு எல்லாமே என் பூசணிக்காயாக இருப்பாய்" என்று தன்னுடைய குழந்தையை குறித்து நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி, ஆசிர்வாதங்களை அளித்து, இவருடைய கவிதை திறமையையும் பாராட்டி வருகிறார்கள்.

கயலின் தங்கை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் டிஆர்பி யில் முன்னணியில் இருந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் பிரபலம்தான். இந்த சீரியலின் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். அவருடைய தங்கையாக நடிகை அபிநயா நடித்து வருகிறார். சீரியலில் அபிநயாவுக்காக கயல் படும் கஷ்டங்கள் ஏராளம். அதனால் ரசிகர்கள் மத்தியில் கயலுக்கு அனுதாபங்கள் கூடிக் கொண்டிருக்கிறது.

கணவர் வெளியிட்ட ரகசியம்
அபிநயா முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் கர்ப்பமாக இருப்பதால் அதை மறைத்துக் கொண்டுதான் சீரியலில் நடித்து வருகிறார். தற்போது வரைக்கும் இவர் சீரியலில் தொடர்ந்து வருகிறார். தன்னுடைய டெலிவரிக்கு பிறகு எப்படி என்பது தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications