தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்.. டாப் கதாநாயகியின் நிலைமை இப்படியா ஆகணும்?
சென்னை: சன் டிவியில் கடந்த அக்டோபர் 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பூவா தலையா சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிகை சித்தாரா நடித்துவரும் நிலையில் இது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது அது பற்றி பார்க்கலாம்.
சீரியலுக்கு பெயர் போன சன் டிவி சீரியலில் ஒரு சீரியலில் நடித்து விட்டாலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவிடும். அதிலும் இரவு நேர சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அதுபோல மதிய நேர சீரியலுக்கு என்று அதிகமான பெண் ரசிகர்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகை சித்தாரா பல வருடங்கள் கழித்து பூவா தலையா சீரியலில் அறிமுகமாக இருந்தார்.

பல பத்திரிகைகளின் அட்டை படங்களில் இடம்பிடித்த சித்தாரா சீரியலுக்கு வருகிறார் என்றதுமே சின்னத்திரை பெண்கள் அவருக்கு வரவேற்பு கொடுக்க தொடங்கி விட்டனர். கதாநாயகியாக சித்தாரா நடித்ததை விடவும் அக்கா, அம்மா கேரக்டரில் சித்தாரா அதிகமாக இப்போது கலக்கி வருகிறார். அவருக்கு சின்னத்திரையில் பூவா தலையா சீரியல் பெரிய அளவில் பிரபலத்தை கொடுக்கும் என்று நினைத்திருந்த நிலையில் இந்த சீரியல் தொடங்கி ஒரு வருடத்திற்குள் முடிவுக்கு வருகிறது.
கடந்த அக்டோபர் 2023 ஆம் ஆண்டில் தான் இந்த சீரியல் தொடங்கப்பட்டது. ஆனால் பெரிய எதிர்பார்ப்போடு இருந்த சீரியல் இவ்வளவு சீக்கிரமாக முடிவுக்கு வருவது சீரியலின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுபோல இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் தர்ஷனாவின் ரசிகர்களும் அதிகமாக ஃபீல் பண்ணி வருகிறார்கள்.
தர்ஷனா ஏற்கனவே விஜய் டிவியில் தமிழிலும் சரஸ்வதியும் சீரியலில் வசு கேரக்டரில் பெரிய அளவில் பிரபலமடைந்திருந்தார். இவருக்கு இணையத்திலும் அதிகமான இளைஞர்கள் பாலோவர்ஸ்களாக இருக்கின்றனர். கதாநாயகியை விடவும் வசுவிற்க்கு தான் அதிகமான ரசிகர்கள் இருந்தார்கள் என்று சொல்லலாம். ஆனால் இவர் திடீர் என்று சீரியலில் இருந்து விலகியது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனால் இவர் சன் டிவி சீரியலில் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்றதும் அந்த சீரியல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் நினைத்து இருந்தனர். ஆனாலும் திடீரென்று இந்த சீரியல் முடிவடைவது ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications