ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி மற்றும் ஒரு சோகமான செய்தி.. ஒரே நேரத்தில் இப்படியா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் பிரியங்கா நல்கரி ரசிகர்களிடம் ஒரு நல்ல செய்தியையும் ஒரு கெட்ட செய்தியையும் கூறி இருக்கிறார்.
ரோஜா சீரியலில் ரோஜாவுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நேரத்தில் நிஜ வாழ்க்கையில் பிரியங்கா நல்கரி கையில் அடிபட்டு இருக்கிறது. அந்த வேதனையான நேரத்திலும் அவருக்கு கிடைத்த வெற்றியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

ரசிகர்களை கவர்ந்த அர்ஜுன் சார்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் இதைப் பற்றிய பலர் கலாய்த்து கொண்டிருந்தாலும் குடும்ப ரசிகர்கள் பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். அர்ஜுன் சார் என்று கணவரை அழைத்து முதல் முதலாக கணவருக்கு சார் பட்டம் கொடுத்தது இந்த ரோஜா சீரியலில் தான். இதைத் தொடர்ந்து தற்போது பல்வேறு சீரியல்களில் கணவரை சார் என்று அழைத்து வருகின்றனர் .சன் டிவியில் பல வருடங்களாகவே டிஆர்பி யில் முதலிடத்தில் இந்த ரோஜா சீரியல் தான் இருந்து வருகிறது.

முதல் சீரியல்
ரோஜா சீரியல் கதாநாயகி ரோஜாவாக நடிக்கும் நடிகையின் பெயர் பிரியங்கா நல்கரி .இவர் கேரளாவை சேர்ந்தவர் தமிழில் முதல் முதலில் நடித்த சீரியல் இந்த அளவிற்கு அவருக்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுக்கும் என்று அவரே ஆரம்பத்தில் எதிர்பார்க்கவே இல்லையாம். ஆரம்பத்தில் தமிழ் தெரியாத நிலையில் எப்படி தமிழ் சீரியலில் நடிக்க என்று திணறிக் கொண்டிருந்த நேரத்தில் இவர் சரி போய் பார்க்கலாம் என்று தான் அரை மனதாக தமிழ் சீரியலுக்கு ஒப்புக்கொண்டாராம். ஆனால் இங்கே கிடைத்த வரவேற்பு மற்றும் சீரியல் அணியினர் இவருக்கு கொடுத்த ஒத்துழைப்பு காரணமாக தற்போது தமிழை கற்று அழகாக பேசி வருகிறார்.

ஹாப்பி செய்தி
ரோஜா சீரியல் முடிவடைய போகிறது என்று ஏற்கனவே ஒரு வதந்தி கிளம்பி கொண்டிருந்தது. அதைக் குறித்து எந்த தகவலையும் சீரியல் அணியினர் கூறாத நிலையில், பிரியங்கா நல்கரி பயன்படுத்தி வந்த இன்ஸ்டாகிராம் ஐடி சில வாரங்களுக்கு முன்பு டெலிட் செய்யப்பட்டு விட்டதாம். இதனை குறித்து இவர் வேறு ஒரு ஐடி கிரியேட் செய்து அதிலிருந்து ரசிகர்களிடம் பேசி இருந்தார் தற்போது ரசிகர்களும் இவருடைய புதிய ஐடியை பாலோ செய்ய தொடங்கியிருந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் இவருக்கு பழைய instagram id கிடைத்துவிட்டதாம் இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

கஷ்டமான செய்தி
ஒரு சில தினங்களுக்கு முன்புதான் பிரியங்கா நல்கரியின் சகோதரியின் திருமணம் சிறப்பாக நடைபெற்று இருந்தது. இதற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர் .குறிப்பாக ரோஜா சீரியல் நடிகர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது பிரியங்கா நல்கரிக்கு கையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும் போது இவர் தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் போது இந்த வீடியோவிற்கு இவர் ஒரு குட் நியூஸ் எல்லா ரசிகர்களுக்கும் என்று கூறியிருந்த நிலையில் பேட் நியூஸ் இவருடைய உடல் நிலை குறித்து ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications